Followers

Tuesday, October 27, 2009

அஸ்தமனத்தில் ஓர் உதயம் .............

அஸ்தமனத்தில் ஓர் உதயம் .............

அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்கு. இருந்தாலும் கோவில் மணியோசை அவரை இன்னும் தூங்கவிடாமல் எழுப்பியது. நேரம் மணி ஆறு என்று கடிகார முள் காட்டியது எழுந்து பல துலக்கி காலைக் கடன் முடிக்கவும்  சாரதா கோப்பியுடன் முன்னே வந்தாள். அந்த ஊரில் இவரை மாஸ்டர் என்று அழைப்பார்கள் இவர் அந்த ஊரின் ஆரம்ப பாடசாலையின் தலைமை  ஆசிரியர்.பாட சாலை வேலைகளுடன் ஊர்  நற் பணி யிலும் பெரும் பங்கு வகிப்பவர். இப்போது இளைப்பாறி ........வீடோடு இருக்கிறார். காலைக் கோப்பி முடிந்ததும் அன்றைய  தினசரியில் மூழ்கி விடுவார். இன்று தினசரி வர தாமதமாகியது. வாயில் ஒரு வெண் சுருட்டை பற்ற வைத்தவர் கடந்த காலங்களில் மூழ்கினார்.

அப்போது , கம்பீரமான தோற்றம், மாஸ்டர் ........என்றால்  அத்தனை மதிப்பு .கண்டிப்பும் கண்ணியமும் மிக்கவர். ஊரில் முக்கிய கூட்டங்களில் முன் நின்று தலைமை தாங்குபவர். அந்த ஊரில் தை மாதத்தில் அதிக வேலையிருக்கும் பாடசாலை  அனுமதிகள். இடமாற்றங்கள் புதிய நியமன்கள் என்று. அவருக்கு ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள் .கல்வி ...கலைகளில் திறமை சாலிகள். நன்றாக படித்து , உயர்கல்வி பெற்ற பின் மேற படிப்புக்காக அண்ணாவை தொடர்ந்த  தங்கையும் ...சென்று பட்டம் பெற்று உயர் உத்தியோகம் பெற்று ....ஊருக்கு வந்து கலியாணம் கட்டி சென்று விட்டனர். இவர் மனைவி மாமலரும் ...அதன் பின் நோயாளியாகி விடார். அவர் வீடில் , இவர் பிள்ளைகளோடு , பிள்ளையாக யாக வாழ்ந்தவள் தான் சாரதா , மாமலரின் தங்கை.

மாமலர் மாஸ்டரை முடித்த மறு வருடமே , அவர்களின் தந்தை மாரடைப் பில் காலமாகிவிட்டார் .   ஒருவர் பின் ஒருவராக. பெற்றாரை இழந்த தனித்து விடப்பட்ட இளம்பெண்ணை , மாஸ்டர்  தான் பொறுப்புடன் கூட்டி  வந்து ஒரு உடன் பிறவா சகோதரியாக வளர்த்து வந்தார்.காலம் செல்ல செல்ல சாரதா பருவ பெண்ணாக் வளர்ந்து வந்தாள். தேவையான் கல்விகளும்  பெற்றாள்  ஆனால்திருமணம்பேசியதும் ஒவ்வொன்றாக  தட்டிக் கழித்துக் கொண்டே வந்தாள். சில காலம் தன் வருமானதுக்காய் ஊர் பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுத்தாள்.ஊரவர்களும் பலவாறு மாஸ்டரையும் இவளையும் இணைத்து பேசினார்கள். அவள் இதை சட்டை செய்வதே இல்லய் .  அந்த ஊரில் ஒரு நாள் ராணுவம் தரை இறங்கியது. ஊரவர்களுடன். அவர்களும் இடம் பெயர்ந்தார்கள். ஆனால் அவர்களது ஊருக்கு திரும்பி போகும் நிலை வரவே இல்லை. இடப் பெயர்வினாலும் போதிய மருத்துவ வசதியின்மையாலும் நோயாளி மனைவி மாமலர் இறந்து விட்டாள் . மீண்டும் ஒரு இடப்பெயர்வு. எந்த வேளையிலும் மாஸ்டர்,   மனைவியின் தங்கையை ஆதரித்தே  வந்தார். முன்பு மறை முகமாக் பணிவிடை செய்து வந்த சாரதா........இப்போது அவருக்காகவே வாழ்ந்தாள். ஒரு நாள் மாஸ்டர் சிந்தித்தார் . தான் இல்லாத காலத்தில் இவளுக்கு யார் துணை ....தனித்து  விடப்படுவாள் ,  பொருளாதாரக் கஷ்டமும்  இவளை வாட்டும்,   என்று சிந்தித்து ஒரு முடிவெடுத்தார். பதிவு கந்தோரில் இவளை மனைவியாக ஏற்றுக்கொள்ள சம்மதம் கேடார். அவளும் சம்மதிக்கவே. அறுபது வயது சாரதாவும் , எழுபதின் ஆரம்ப ராஜரத்னம் மாஸ்டரும் தம்பதிகளாயினர். ஒரு நல்ல நாளில் ஊர் கோவிலில் , மாலை மாற்றி தாலியை அணிவித்தார். மனதார அவருடன் வாழ்ந்த் ஒரு தலைக்காதல் வாழ்வின் இறுதி பகுதியில் .( அஸ்தமனத்தில்) நிறைவேறியது . பெரும் பேறாக கருதும் தாலிப்பாக்கியம் அவளுக்கு கிடைத்தது  , அவளுக்கு கிடைத்த தாலிப்பாக்கியம்  ,வாழ்வின் ஓர் உதயமாக , .அஸ்தமனத்தில் அவளுக்கு வாழ்க்கை தொடங்கியது . .

பேப்பர் காரப்பையன் பேப்பர் எனறு அழைத்தும்.......கனவுலகிற்கு சென்று இருந்த மாஸ்டர் .......நினைவு திரும்பினார்.

19 comments:

பிரபாகர் said...

நல்லா இருக்குங்க...

பிரபாகர்.

சீமான்கனி said...

ஐ...நான் தான் பஸ்ட் ...
பகல் கனவு பலிக்காது என்பார்கள் இருந்தாலும் அந்த நேரத்தில் இந்த முடிவு அருமைதான்....
அருமை அக்கா....
வாழ்த்துகள்....

Sanjai Gandhi said...

நல்லா இருக்கு..

thiyaa said...

தொடர்ந்து நல்ல அறிவுரை, சீர்திருத்தக் கதைகளை மிகவும் எளிமையான நடையில் எழுதி வருகிறீர்கள் வாழ்த்துகள் அக்கா.

ஈரோடு கதிர் said...

நல்ல உதயம்...

அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லுங்கள்

விக்னேஷ்வரி said...

எனக்கு இந்த வயதானவர்களின் காதல் மற்றும் திருமண பந்தங்கள் ரொம்பப் பிடிக்கும். நல்லா இருந்தது உங்க கதை.

Unknown said...

பறவைகள் பலவிதம்...வாழ்த்துக்கள் நிலாமதி!

நிலாமதி said...

வணக்கம் பிரபாகர. உங்களுக்கு நன்றி

நிலாமதி said...

சீமான் கனி நன்றி ..........அவாட்டர் மாற்றி இருகீங்க. அழகாய் இருக்கு

நிலாமதி said...

நன்றி தியா...........தொடர்ந்து பதியுங்கள்.

நிலாமதி said...

சஞ்சய் காந்தி உங்களுக்கு நன்றிங்க.

நிலாமதி said...

கதிர் .........வரவுக்கு நன்றி.

நிலாமதி said...

விக்னேஷ்வரி ..........உங்களுக்கு என் நன்றிகள்.

நிலாமதி said...

அன்ரோ .......உங்கள் வரவுக்கு நன்றி.

அன்புடன் மலிக்கா said...

நல்ல சிந்தனை, நல்ல வர்ணணை,
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்......

Admin said...

நல்ல கதை தொடர்ந்து எழுதுங்கள்..

வாழ்த்துக்கள்.

தமிழ் அஞ்சல் said...

கலக்கல் ..!

நிலாமதி said...

மாலிக்கா ....சந்துரு........திருப்பூர் மணி உங்களுக்கு என் நன்றிகள்.

நேசமித்ரன் said...

வாழ்த்துகள்
நல்லா இருக்குங்க