Followers

Friday, January 8, 2010

தொலைந்து போனவைகள்.

 வணக்கம் என் வலைப்பதிவுலக நட்புகளுக்கு .........உங்கள் அன்பான் நலன் விசாரிப்புகள் பாராட்டுகள் ... புதுவருட வாழ்த்துகள்   கருத்துகள் என்னை மேலும் தென்பு கொள்ள வைத்து எழுத தூண்டுகின்றன. என்றும் உங்கள் அன்புக்கு நான் தலை சாய்த்து வணக்கமும் நன்றியும் சொல்லிக்கொள்கிறேன்.

தொலைந்து போனவைகள்.

போர் சூழலினால் வஞ்சிக்கபட்ட ஒரு  இளைஞனின்   கதை. அமைதியான அந்தக் கிராமத்துக்கு படையினர்  உட்புகு மட்டும் மக்கள் சாதாரண வாழ்வு தான் வாழ்ந்தார்கள். அதன்பின்பு தான் எல்லாமே தலை கீழாய் போனது. சீர் குலைந்து நிம்மதி இழந்தது.

பால பாஸ்கரன் அந்த கிராமத்தின் , ஊர்ச்சங்க தலைவரின் மகன். ஊர்பள்ளிக்கூடத்தின் உதவித் தலைமை ஆசிரியராய்  இருந்தான். காலாகாலத்தில் திருமணம் செய்து ....மனைவி கற்பமாய் இருந்த காலத்தில் தான் ராணுவத்தினர் கிராமத்துள் புகுந்தனர்  . சோதனை என்றும் சந்தேகம் என்றும் கைது செய்துகொண்டு சென்றுவிடுவார்கள். இதில் பாஸ்கரனும் விதிவிலக்கல்ல. பலமுறை கொண்டு சென்றாலும்.பாடசாலையை காரணம் காட்டி வெளிவந்து விடுவான். இவர்களது தொல்லை தாங்க முடியாமல்,
வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி சென்றான். பின்பும் ஊர் நோக்கி வரும் போது சோதனைக் கெடு  பிடிகள் அதிகரிக்கவே வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி
ஐரோப்பிய நாடொன்றுக்கு பயண மாக  முடிவெடுத்தான். இதன் போது
மனைவிக்கு பேறு காலம் வரவே அவள்அழகிய குழந்தையை பெற்று  எடுத்தாள், வைத்திய சாலையில்   குழந்தையை பார்த்து வந்த போது வெளிநாட்டு பயணம் சரிவந்த்தாக தகவல் வரவே ..மூன்றாம் நாள் மனைவி குழந்தையை  தன் தாய் தந்தையின் பாதுகாப்பில் விட்டு புறப்பட்டான். பல அலைச்சல் களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் சுவிஸ் நாட்டுக்கு போய் சேர்ந்தான். காலம் ஓடிக்கொண்டே இருந்தது ஆனாலும் அவனுக்கு அந்நாட்டு வதிவிட் அனுமதி கிடைக்கவில்லை.......வருடங்கள் எழு உருண்டோடி விட்டன. .

தாயகத்தில் ..தாயும் சேயும் நலமே வளர்ந்து வரும் காலத்தில் .மேலும்மேலும் யுத்தம் .மும்முரமடையவே ...பாஸ்கரன் மனைவி திலகா .....குழந்தை யுடன் அவளது தம்பியின் ஆதரவுடன் ....கனடா நோக்கி புறப்பட்டாள்....சில தடங்கலுக்கு மத்தியில் ....அவளுக்கும மகனுக்கும் அகதி நிலை அங்கீகரிக்க பட்டது.....மகனின் குரல் கேட்க அடிக்கடி தொலை பேசி அழைப்பு வரும். ....இறுதியில் மகனும் தாயும் தந்தையை பார்க்க புறப்பட்டனர் . பிறந்த போது பார்த்த தன் மகனின் தோற்றங் கண்டு அப்பா   பாஸ்கரன் மலைத்து போனான் .மகன்  பாலகுமாரனும் ஆசை தீர தந்தைமடியில் விளையாடினான்.  அவனதுகுழந்தைப்ப் பருவம்  ....மழலை பருவம்...பேச்சு ப்பருவம் ..என்பவை எல்லாம்........இழந்து விட்ட சோகம் மட்டும் தந்தை உள்ளத்தினுள்ளே இருந்தது.   மூன்றுமாத விடுப்பில் சென்ற தாயும் மகனும் பிரிய மனமின்றி ..........பிரிந்து கனடா வந்து சேர்ந்தனர் .........

.பாஸ்கரன் மனைவி .........கணவனை பொறுப்பெடுக்க முடிவு செய்தாள். இங்கு வேலையும் குழந்தையும் காலநிலையும் அவளுக்கு இலகுவாக் இருக்கவில்லை .  அங்குசுவிசில  வைத்து குடும்ப இணைவு  முறையில் செய்ய முடியாததால் அவன் ஒரு சமாதானகால ஒப்பந்தம் வரவே   மீண்டும் தாய்நாட்டுக்கு சென்றான். ஒருவாறு  குடும்ப இணைவு முறையில் ...சட்ட திட்டங்களுக்கு ஏற்ப அவன் நாலு வருடத்தில் ..........வந்து சேர்ந்தான். மகனுக்கு வயது பதினைந்து ....ஆசைக்கும் அருமைக்கும் ஒரே யொரு  குழந்தை .புலம் பெயர் வாழ்வுகள் தந்த சோகம் ...இழப்பு .........வீணாகிய இளமை ........கண்ணீரில் தொலைத்த  காலங்கள். மது மயக்கத்தில் தூங்கிய இரவுகள் ....தனிமை..........மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்த கரங்கள். ..உறவுகளின் ஒத்துழையாமை.  யுத்தம் . அதன் கோரத்தாண்டவம் அழிவு ......எந்த ஒரு இனத்துக்கும் வேண்டவே வேண்டாம். இது ஒரு சிறு கதை மட்டுமே ....

புலம் பெயரும் போது சந்திக்கும் இடர்கள் சோதனைகள்  ....அவை எழுத ஒரு ....சரித்திரபுத்தகம் வேண்டும்.   எழுத்தில் வடிக்க கூடியவை ஒரு சில.   எழுதாத பல உள்ளத்துக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

6 comments:

பிரபாகர் said...

//..உறவுகளின் ஒத்துழையாமை. யுத்தம் . அதன் கோரத்தாண்டவம் அழிவு ......எந்த ஒரு இனத்துக்கும் வேண்டவே வேண்டாம்//

ஆம் சகோதரி,

எவருக்கும் இந்த நிலை வேண்டாம்.

பிரபாகர்.

சீமான்கனி said...

அருமையான பகிர்வு அக்கா.

எனக்கு இதை வாசிக்கும் பொது என் நண்பன் வேந்தன் நியாபகம் வருகிறது...போர் சூழலில் அவனின் குடும்பம் அவன் இங்கிருந்து விடுப்பு வாங்கி போனான் அவனால் கொழும்பை விட்டு அவனுடைய ஊருக்கு போக முடிய வில்லை அந்த குடும்பம் என்ன ஆனது என்ற தகவலும் இல்லை.இப்போ அவனுடைய அழைபெசியும் தொடர்பில் இல்லை.அவனிடம் இருந்து எந்த தகவலும் இல்லை... மணம் கனத்து விடுகிறது அக்கா...

உறவுகளின் ஒத்துழையாமை. யுத்தம் . அதன் கோரத்தாண்டவம் அழிவு ......எந்த ஒரு இனத்துக்கும் வேண்டவே வேண்டாம்

அரங்கப்பெருமாள் said...

//புலம் பெயரும் போது சந்திக்கும் இடர்கள் சோதனைகள் ....அவை எழுத ஒரு ....சரித்திரபுத்தகம் வேண்டும்.//

உண்மைதான்.

அண்ணாமலையான் said...

மொத்தத்தில் அழிவு வேண்டாம்.

Pinnai Ilavazhuthi said...

//..உறவுகளின் ஒத்துழையாமை. யுத்தம் . அதன் கோரத்தாண்டவம் அழிவு ......எந்த ஒரு இனத்துக்கும் வேண்டவே வேண்டாம்//

பிரபாகர் கூறியதை நான் வழிமொழிகிறேன்!... நாம் அடைந்துள்ள துயரம் உலகில் எந்த இனமும் இனி அடைய வேண்டாம்

'பரிவை' சே.குமார் said...

அருமையான பகிர்வு