நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Thursday, January 14, 2010

தை மகளே வருக ...........

..
புதுப்பானையில் புத்த்ரிசியிட்டு
சுவையோடு சக்கரை சேர்த்து
பால் பழமும், இன்முகம்  கூட்டி
வரவேற்கிறோம் ,தை மகளே வா.
இன்பம் தரவா..இன்னல் தீர்க்க வா
ஈழத்து மக்களுக்கு விடிவு கொண்டு வா

பழையன கழிய வேண்டும்
புதியன புக வேண்டும்
காக்கைக்கு உணவளித்த கூட்டம்
கால் பருக்கைக்கு வழி யில்லை
புத்தர் சிலை சிந்தையில்  வழிபட்டு
ரத்தாபிஷகம்செய்யும்  பாதகர் கூட்டம்
குற்றம் உணர்ந்து உண்மைதெரிந்து
ஆவன செய்ய வேண்டும்  

கலப்பை மறந்த பூமியில்
உழவுத்தொழில் உதாசீனம்
மாதாவை மறந்தாலும்
மண் மாதாவை மறவோம்
கடைசி தமிழன் உள்ளவரை
பொங்கிடுவோம் தைப்பொங்கல்

5 comments:

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்...

சே.குமார் said...

அட்டகாசம்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

உண்மையான பொங்கல் அமைதி நிலவும் நேரத்தில்தான்.. அதற்கான நிஜமான பிரார்த்தனையுடன்..

seemangani said...

அருமை அக்கா பொங்கலோ பொங்கல்.....இனிய பொங்கல் வாழ்த்துகள்

ரங்கன் said...

அழகான வரிகள்..கொஞ்சம் வலியோடு..

பொங்கல் வாழ்த்துக்கள்..!!