நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Monday, April 5, 2010

சின்ன சின்ன முத்துக்கள் .......

இதுவும் சிறு கவிதையாக இருக்கலாம் .
...நீங்கள் தான் சொல்லணும்

தாய் மனசு ..........

விடுமுறையில் வந்த மகனுக்கு
பக்குவமாய் சமைத்து கொடுத்தாள்
இடைவெளியை இட்டு நிரப்ப .

நட்பின் வலிமை

ஆபத்தில் தெரியும்
கைம்மாறு
கருதாத
உதவும் கரங்கள்

பிரிவு ....

தொலை தூரம் சென்றாலும்
மடலில் அன்பு  தெரியும் போது
துள்ளிக்குதிக்கிறது மனசு

பசி ...

அம்மா உன் மதிய சாப்பாடு ..
அமுதமாய் இருந்தது  .
ஆறி இருந்தாலும் 

9 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த "மதிய சாப்பாடு" ருசியா
இருக்கு.

நிலாமதி said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க........

அண்ணாமலையான் said...

வெரி டேஸ்ட்டி...

மயில்ராவணன் said...

மடல் எங்கே இப்போல்லாம். மின்மடல் தான் இல்லைனா தொலைபேசிதான். நன்றாக இருக்கிறது கவிதை.முயன்றால் இன்னும் சிறப்பாக எழுதலாம். வாழ்த்துக்கள்.

seemangani said...

அட... பார்ரா...நிலா அக்கா கலக்கல் ஒரே சமையத்தில் அறுசுவையும் குடுத்துடீங்க...தொடரட்டும்...வாழ்த்துகள்...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////நட்பின் வலிமை

ஆபத்தில் தெரியும்
கைம்மாறு
கருதாத
உதவும் கரங்கள்////


மிகவும் அருமை .

Anonymous said...

நல்ல கவிதைகள்....

சே.குமார் said...

நிலா,
கலக்கல்...
ஒரே சமையத்தில் அறுசுவையும் குடுத்துடீங்க..!

dheva said...

நிலாமதி...உங்கள் கவிதை மிக அருமை.....!