நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Wednesday, April 7, 2010

திரு நிறைச் செல்வி .....


வீடு ....உறவினர்களின்  கூட்டமாய் நிறைந்து காணப்பட்டது  .....மாடியிலும் ...நடை பாதை ..வழிகளிலும் ஓரங்களிலும் மங்கல பொருட்களால்  நிறைந்து இருந்தது. .சேரன் என்னும் சேரலாதன் எப்போது உறங்கினான் என்று, அவனுக்கே தெரியாது. ...........விடிந்தால் திருமணம் . உறவுகளும் ..பெரியவர்களுமாய் வீடு நிறைந்திருக்கிறது...தன் தங்கைகளை எண்ணும் போது அவனுக்கு பெருமிதமாய் இருக்கிறது....தாயாய் தந்தையாய் வளர்த்தவன் அவன் அல்லவா.... அவனது குடும்பமும் ....மற்றவர்களை போல தாய் தந்தை ஆசைக்கு ஒரு தங்கை என்று அமைதியாக் தான் போய் கொண்டு இருந்தது. மூன்றாவதாய்  ஒரு தங்கை வருமட்டும்.

அவள் பிறந்த வீடிலே தாயார் ...காலமாகி விடார். வைத்தியர்களின் கவன மின்மையோ .. தங்கை சுஜிதாவின் கெட்ட பலனோ ..........சேரனுக்கு ஆறு வயது ...மங்கை எனும் மங்கையர்க்கரசிக்கு மூன்று வயது.....அம்மாவின்  மரண வீடிற்கு ....இவனை ...சமய சடங்குகள்  முடித்து கொள்ளி வைக்க அழைத்து சென்றதாக் ஞாபகம்.. சரியாக் இல்லை...பின்பு கொஞ்சக்காலம் அம்மம்மாவுடன் வாழ்ந்தார்கள்... காலப்போக்கில் அவர்களும் காலமாகி விட ....பெரியப்பாவின் வீடில் அவரது இருகுழந்தைகளுடன் இவர்களும் தஞ்சமானார்கள் .  அப்பா பெரிய பட்டணத்தில் வேலைக்கு போனவர்தான்..ஆரம்பத்தில் பெரியப்பாவுக்கு செலவுக்கு பணம் அனுப்புவார்....
பின்பு அதுவும் நின்று விட்டது... பெரியப்பா தான் இவர்களை தாங்கினார்..அப்பா வேறு திருமணம் செய்தார் என்று ஊரவர்கள் சொன்னார்கள். சிலர் வெளி நாடு போய் விடார் என்றும் சொன்னார்கள். ஆனால் பெரியப்பா தான் இவர்களுக்கு எல்லாமும் ஆனார்..............

சின்னவள் சுஜி .........வளர்ந்து பாலர் பாடசாலைக்கு போனாள். .காலயில் வீடு பெருக்கி கொண்டு நிற்பவர்கள் இவள் முகத்தில் விழித்தால் அன்று ...விளங்காது என்று இவளுக்கு முன்னாலேயே பேசுவார்கள் . அண்ணாவாக  அவனும் அக்காவாக மங்கையும் பொறுத்து கொள்வார்கள்.பெரியம்மாவும் அன்பானவர் தான் ஆனால் தன் பிள்ளைகளில் விசேட கவனம் செலுத்துவது போல இருக்கும்..இவனுக்கு பதினெட்டு வயதான் போது ....மேற்படிப்புக்காக் பட்டணத்தில் சேர்த்து விட்டார்கள.  .விடுதியில் அவன் வாழ்வு தொடர்ந்தது.......விடுமுறைக்கு வந்தால் பெரியவள் கதை கதையாக் சொல்வாள். இவன் விடுதிக்கு போக முன் பெரியவள் பெரிய பெண்ணாகி  விட்டாள் ....   அன்று அழகிய மணமகள் கோலத்தில் பார்த்தவன் ..இவளை ஒருவன் கையில் கொடுக்கும் வரை நான் பொறுப்புடன் இருக்க வேண்டும் நன்றாக் படிக்க வேண்டும் .  உயர் உத்தியோகம் பார்க்க வேண்டும் என மனக்கோட்டைகளைக் கட்டி ஆசைகளை வளர்த்துக் கொண்டான்... அதற்கேற்ப வாழ்ந்தும் காட்டினான் ....

இன்று மெக்கானிக்கல் இஞ்சினியரிங் ...படிப்பு முடித்து அவன் ஒரு தொலைத்தொடர்பு கம்பனிக்கு உயர் அதிகாரியாக் இருக்கிறான்...மங்கை ஊரில் பட்ட படிப்பு முடித்து  உள்ள பள்ளியில் .ஆசிரியையாக் இருக்கிறாள். சின்னவள் பட்டணத்தில்  மருத்துவ படிப்பில் இரண்டாம் ஆண்டு.மூத்தவள் மங்கையை ....பெண் கேட்டு வந்தனர்...பெரியம்மாவின் உறவுக்காரர்கள்.பெண் பிடித்துப்  போகவே,நிச்சயதார்த்தம்,நாளை,திருமணம்...இதற்கிடையில் அவனுக்கும் பெண் கொடுக்க தயாராக இருந்தனர் ஊரவர்கள். ஆனால் தங்கைகளைக்காட்டி அவன் மறுத்து விட்டான் ........பெரியப்பா மட்டும் இல்லையென்றால்.....இவர்கள் வாழ்வு.........இந்தக்க்ளையான நேரத்திலும் பெரியம்ம்மா  இவனை எழுப்பினார் மேலும் ஆக  வேண்டிய வேலைகளை கவனிக்க் சொல்லி.. நண்பர்கள் இரவிரவாக் சோடனைகளில் ஈடு பட்டு இருந்தனர்.......அவர்களை போய் காலைகடன் முடித்து உடுத்தி வரும்படி அனுப்பி விட்டான் .  எல்லாம் நல்ல படியாய்  அமைந்துள்ளதா  என் மேலோட்டம் விட்டான் ..........

தம்பி..... நாதஸ்வரகாரர்கள் வந்து விட்டார்கள்  ....இன்னும் ரெடியாக வில்லை யோ ?என்று  பெரியப்பா வந்தார்............குளியலறையில் ....சென்று தாளிட்டு கொண்டவன்....யாரிந்த தேவதை ....யார் இந்த தேவதை ....என்ற பாடல் சத்தம் கேட்டதும்..........தனக்கான ..தேவதை எங்கு பிறந்த இருப்பாளோ என் ...மனம் துள்ளியது.......எல்லாம் ஒருபடியாய் சுபமே நடந்தேறியது.....தாலிகட்டியபின் பெரியப்பாவின் காலில் விழுந்து வணங்கும் போது....அருகில் நின்ற  இவனின் காலையும் தொட்டு   வணங்கினாள். ...........புல்லரித்து போனான்...

"திரு நிறைச்செல்வி ....மங்கையர்க்கரசி ....திருமணம்
கொண்டாள் இனிதாக ...

நாட்கள் வாரங்களாகி ..இரண்டு வாரங்கள் விடுப்பில் வந்தவன்...........விடுமுறை முடிவதை உணர்ந்தவன்....தன்க்கான் பயணத்துக்கு டிக்கட் ஒழுங்கு  செய்ய புறப்பட்டான். மனசு இலேசாக் கனத்தது ...பூ மழை  தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடந்தது ...............என் தங்கையில் நெற்றியில் மங்கல் குங்கும சிரித்தது.
.....என் இனியவளே எங்கிருந்தாலும் வாழ்க. .

ஒரு பக்க கதைகான் ஒரு சிறு முயற்சி........எப்படி இருகிறது?   ............

10 comments:

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ME THE FRIST

seemangani said...

மீண்டும்...நிலா அக்கா பானியில் அழகான கதை...எனக்கு முதலில் ''காகித ஓடம் கடல் அழைமீது போவது போலே...
பாட்டு நியாபகம் வந்தது அக்கா...அடுத்து நீங்க போட்டா எம் ஜி ஆர் பாட்டு தான்.....நல்லா இருக்கு தொடர்ந்து எழுதவும்...

சுல்தான் said...

கதை நன்றாக இருக்கிறது. மறந்திருந்த பாட்டுகள் நினைவில்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மிகவும் அழகாக சொல்லி இருக்கீங்க அக்கா. பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் மீண்டும் வருவேன்

சே.குமார் said...

கதை அருமை...

நல்ல முயற்சி... தொடருங்கள்.

வாழ்த்துக்கள்

ஹேமா said...

நிலா...கதை உங்கள் பாணியில் அருமை.ரசிக்கக் கூடியதாக இருக்கு.

நிலாமதி said...

உற்சாகபடுத்திய நட்புகள் ......சங்கர் .....சீமான் ....சுல்தான்.....சே குமார்
.....ஹேமா யாவருக்கும் என் நன்றிகள்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

angel said...

ம் நல்ல கதை இன்னும் கொஞ்சம் சைஸ் குறைக்கலாம் என்று எண்ணுகிறேன்

Cool Boy said...

பக்கங்கள் அனைத்தும் அருமை..
எம்மவர் வாழ்க்கையை அழகாக பதிவாய் சொல்லும் விதம் அற்புதம்..
உலகெங்கிலும் ஈழ தமிழர் புகழ் பரவ வாழ்த்துக்கள்..