நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Thursday, June 24, 2010

ஒரு சில துளிகள்.

கவிதைக்கான ஒரு சின்ன முயற்சி ....


ஏக்கம் ....
மலர் ஒன்று காத்திருந்தது
தென்றலின் தொடுகைக்காய்
தென்றல் திசை மாறியதும்
வாடியது தன் தோற்றத்தில்

உற்சாகம் ...
புது வருகைகளினால்
மனம் துள்ளுகிறது
வருகை தரும் களிப்பு
கானம் பாட வைக்கிறது

சோகம்  ....

குயிலொன்று தன் துணையின்
 வரவுக்காய் கூவியழைத்தது
எதிர்பாட்டு கேளாமல்
சோகத்தின் கலவரத்தில்

சுமை .........

இதயங்களின் பாரம்
அழுகையில் குறையும்
அழுகையின் துளிகள்
அன்புள்ளத்தை சேரும்

எதிர்பார்ப்பு ......

தேக்கி வைத்த சோகம்
சொல்லி அழ ஏக்கம்
எதிர்பார்த்திருக்கும் நாளில்
மெளனமாய் வெடிக்கும். 

காத்திருப்பு .....

வழி மீது விழி வைத்து
உன் வரவுக்காய் காத்திருப்பு
மெளனமாய் பேசின் கண்கள்
ஆயிரம் அர்த்தங்களில்


12 comments:

seemangani said...

//சுமை .........

இதயங்களின் பாரம்
அழுகையில் குறையும்
அழுகையின் துளிகள்
அன்புள்ளத்தை சேரும்

எதிர்பார்ப்பு ......

தேக்கி வைத்த சோகம்
சொல்லி அழ ஏக்கம்
எதிர்பார்த்திருக்கும் நாளில்
மெளனமாய் வெடிக்கும்.

காத்திருப்பு .....

வழி மீது விழி வைத்து
உன் வரவுக்காய் காத்திருப்பு
மெளனமாய் பேசின் கண்கள்
ஆயிரம் அர்த்தங்களில்//

மூன்றும் சிறப்பு நெஞ்சத்தின் அருகில் ஆணியடித்து அமர்ந்து கொள்கிறது....வாழ்த்துகள் நிலாக்கா.

ஜெய்லானி said...

சூப்பர் கவிதை..!!

ஹேமா said...

எல்லாமே நல்லாயிருக்கு நிலா.இது புது முயற்சி மாதிரி இல்லையே.
வாழ்த்துகள் தோழி.

நிலாமதி said...

நன்றி....சீமாங்கனி ..ஜெய்லானி ....ஹேமா .....உங்கள் கருத்துக்கு.நன்றி...
உங்கள் ஊக்கம் என்னை மேலும் ஆக்குவிக்கும்.

VELU.G said...

சின்ன சின்னதாய் அழகான கவிதைகள்

சௌந்தர் said...

புது வருகைகளினால்
மனம் துள்ளுகிறது
வருகை தரும் களிப்பு
கானம் பாட வைக்கிறது//

அருமையான கவிதை தொடருங்கள் தோழி...

வெங்கட் நாகராஜ் said...

//காத்திருப்பு .....

வழி மீது விழி வைத்து
உன் வரவுக்காய் காத்திருப்பு
மெளனமாய் பேசின கண்கள்
ஆயிரம் அர்த்தங்களில்//

அருமை சகோதரி. மௌனம் சொல்லும் ஆயிரம் அர்த்தங்கள்.

தமிழ் அமுதன் said...

//இதயங்களின் பாரம்
அழுகையில் குறையும்
அழுகையின் துளிகள்
அன்புள்ளத்தை சேரும்//


அருமை...!

Madumitha said...

முயற்சி தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.

நிலாமதி said...

வெங்கட் ......மதுமிதா .......தமிழ் அமுதன் ....உங்களாதரவு கரங்கள் ,
என்னை மேலும் எழுத வைக்கும். நன்றிங்க

நிலாமதி said...

வேலு ....செளந்தர் ... உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி

இளந்தி... said...

Super....