நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Thursday, June 17, 2010

வஞ்சகரின் உலகம்.

வஞ்சகரின் உலகம்.

அமைதியான அந்தக்குடும்பத்தில் நட்பாக் வந்து இணைந்தாள் . பாமினி என்னும் பெண் . கையில் ஒரு கைக்குழந்தை . கணவன் கார் கம்பனியில் வேலை . அந்த தொடர் மாடிக்கு குடிவந்தார்கள். வந்து அயல வீடு என்பதால் கோமதியின் குடும்பத்துடன் உறவு கொண்டாடி .நட்பை வளர்த்துக்கொண்டாள்.   கோமதி அந்த நாட்டு க்கு வந்து ஐந்து வருடமிருக்கும்.  பாமினியும் அவளது நாட்டை சேர்ந்தவள் அவள் மொழி பேசுபவள் என்பதால் ...இரக்கத்துடன் அணைத்து கொண்டாள் கோமதி ....கோமதிக்கு இரு மகன் கள் ஆறு வயதிலும் மூன்று வயதிலும். குழந்தைகளை  கவனிக்க் வேண்டியிருபதால் அவள் வேலைக்கு செல்வதில்லை . கோமதி மூத்தவனை பாடசாலை பஸ்ஸில் பள்ளிக்கு அனுப்பி மதியம் சின்ன்வனுடன் காத்திருந்து மகனைக்  கூட்டி வருவாள்.  பாமினி ... ஒரு மாலை நேரவேலையில் சேர்ந்து கொண்டாள். நன்றாக் கார் ஓடுவாள். கோமதி பாமினியின் கணவனை காண்பதேயில்லை .இரவில் வந்து அதிகாலையில் சென்று விடுவான் . அவனுடன் பேசியதும் கிடையாது . ஒரு நாள் அவர்கள் ஒரு திருமண் வீடுக்கு செல்லும் போது தூரத்தில் அவன் தோற்றம் கண்டாள். கோமதி ....

பாமினி மாலையில் வேலைக்கு செல்லும் போது குழந்தை ( பாமினியின் ) கோமதி வீட்டில் தங்குவாள். இரவு ஒன்பது மணியளவில் குழந்தயை எடுக்க வருவாள். இப்படியே இவர்களது நட்பு வளர்ந்தது. ஒரு நாள் கோமதியின் குழந்தைகளும் பாமினியும் குழந்தையுடன் ஒரு கடைத்தொகுதிக்கு சென்று வந்தார்கள். வீடுக்கு வந்ததும் கோமதி கணக்கு பார்க்க தனது கைபையை தேடினாள். காணவில்லை . ஓடிசென்று ....பாமினியிடம் கேட்க அவள் தானும் காணவில்லை  எனறாள்.கார் தரிப்பிடத்துக்கு சென்று அங்கு காரை திறந்து பார்த்த போது ...அங்கு இருந்தது இருக்கையின் அடியில் . கைப்பையின் ..திறக்கும் இடம் ( சிப்பர் )....திறந்தே இருந்தது . யாரோ ..எதையோ தேடியமாதிரி ....கோமதி ...எல்லாம் இருக்கிறதா என் மீண்டும் ..பரிசோதித்து ...எடுத்துக்கொண்டாள். பணமும் அதிகம் இருக்க்வில்லை ....கைப்பை கிடைத்த மகிழ்வில்.... அதை பற்றி பாமினியிடம் அவள் எதுவுமே கேட்கவில்லை. கோமதி கணவனிடம் சொன்ன போது .....முன் பின் தெரியாதவர்களிம் அவதானமாக இருக்கும்படி எச்சரித்தான். ....காலம் உருண்டோடியது .....பாமின் குடும்பம் அவர்கள் கட்ட தொகுதிக்கு குடிவந்து ...ஆறு மாதமாகியது .....

 பாமினி குடும்பம் ....விடுமுறைக்காக ஐரோப்பா சென்றார்கள்.  பின்பு வந்து ...கணவனின் உறவினர் வீடுக்கு மாடிப்பகுதி காலியாக் இருப்பதால் அங்கு குறைந்த வாடகை செலுத்தி அங்கு குடிபோக போவதாக் சொன்னாள்.அடுத்த வாரமே இடம் மாறி விட்டனர்.
ஒரு நாள் அந்த நாட்டு தொலை பேசி கம்பனியில்  இருந்து கோமதிக்கு அழைப் பு ...வந்தது . பாமதி யுடன் பேச வேண்டும் என்று ...அப்படி எவரும் தன் வீடில் இல்லையென்று சொல்லி விட்டாள். மீண்டும் ஒரு நாள் அழைப்பு ....இவர்கள் தொலைபேசிக்கு.. பின்பு இவளது பிறந்த திகதி ....மற்றும் தன்ன்றிமுக விபரங்களை கேட்ட போது அது கோமதியின்தாக் இருந்தது .... பெயரின் முதல் எழுத்துக்கள் மட்டும் மாற்றம் செய்யபட்டு ....பெற்று  ...அவளது சுய விபரங்களைக்க் கொடுத்து .தொலைபேசி ...டி வீ அனுமதி ....என்பன் பெறப்பட்டு  இருந்தது ....கட்டணமாக் ஆயிரத்து இருநூறு ....(1200dollers) ..செலுத்தத் படவேண்டும் என் கம்பனி கேட்டுக்கொண்டது ......கோமதி அதிர்ந்து போனாள். தன் வீட்டு  தொலைபேசிக்கட்டனம் தனது கணவன் பெயரில் இருக்கிறது ... தனக்கு இன்னோர் இணைப்பு எடுக்க வேண்டிய தேவை இல்லை என்றும் அது யாரோ சதி காரர் செயதவேலை என்றும் வாதாடினாள். கம்பனி நம்ப வில்லை . கோமதியின் நிலை ........மிகவும் சங்கடமாகியது . கணவனும் நான் அப்போதே சொன்னேன் கேடாயா?
பாம்புக்கு பால்  வார்த்த கதையாகி விட்டது ..எந்த புற்றில் என்னவகை பாம்புகளோ ?   .கோமதி கணவனின் வருமானத்தில் மிகவும் சிக்கனமாகவே வாழ்ந்தார்கள் இவ்வளவு தொகைக்கு என்ன செய்வாள்......பணத்தைக்கட்டாவிடால் இவளது கிரெடிட் ( நம்பகத்தன்மை ) பழுதாகி விடும் . ..சிறுக் சிறுக் கட்டலாம் என் தீர்மானித்து இருக்கிறாள். கோமதி ....என்ன செய்யலாம் ......? ...

பாமினி ..குடும்பத்தின் மீதே சந்தேகம் வந்தது.  அவளை எங்கே தேடுவது அவள் பெயர் தவிர எதுவும் தெரியாது ......இந்த உலகில் இப்படியும் சில மனிதர்கள்.கொஞ்சிக் கொஞ்சி பேசி மதி மயக்கும் . வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் ..நாம தான் அவதானமாக் இருக்கணும் . யாரைத்தான் நம்புவதோ ...

குறிப்பு ...ஒரு சம்பவத்தை அடிப்படியாக் வைத்து எழுதியது ..
.கதை உண்மை பெயர் கற்பனை ..

12 comments:

seemangani said...

உண்மை சம்பவமா...??இது போல் தனியாக இருக்கும் தருவாயில் ஜாக்கிரதையாகத்தான் அக்கா இருக்க வேண்டும்...நல்ல பகிர்வு மீண்டும் உங்கள் பதிவுகளை காண்பது மகிழ்ச்சி...வாழ்த்துகள் நிலாக்கா...

ஜெய்லானி said...

அச்சோ..பாவம் கோமதி.!!

யோ வொய்ஸ் (யோகா) said...

good post akka

ஜெஸ்வந்தி said...

இப்படியும் மனிதர்கள்.

ஹேமா said...

இப்பிடியும் நடக்குதா நிலா.
செய்யமுடியுமா ஒரு மனுஷரால.
கவனமாத்தான் இருக்கவேணும்.

நிலாமதி said...

சீமாங்கனி ....ஜெய்லானி ...ஜெஸ்வந்தி ....யோ வாய்ஸ் யோகா ....ஹேமா ...உங்கள் அனை வருக்கும், வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி .

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நம்ப நட, நம்பி நடவாதே என்பார்களே முன்பு.
சரியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.

தமிழ் மதுரம் said...
This comment has been removed by a blog administrator.
தமிழ் மதுரம் said...

வெளிநாட்டில் உள்ள நிஜமான சம்பவத்தை வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள். ’கிறைம்’/ துப்பறியும் நாவல் படிப்பது போல கதையினையும் ஆர்வம் மேலிடப் படிக்கும் வண்ணம் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் பாட்டி!

திருப்பூர் மணி Tirupur mani said...

பாமினி ..குடும்பத்தின் மீதே சந்தேகம் வந்தது. அவளை எங்கே தேடுவது அவள் பெயர் தவிர எதுவும் தெரியாது ......இந்த உலகில் இப்படியும் சில மனிதர்கள்
:-)

திரவிய நடராஜன் said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள். நேரமிருந்தால் எனது வலை பக்கத்திற்கு வரலாமே. நான் ஒன்னும் பாவம் செய்த ஆத்மா இல்லை.
http://lawforus.blogspot.com

விஜய் said...

அக்கா விழிப்புணர்வை ஏற்படுத்தும் அற்புதமான பதிவு ...
உண்மை சம்பவத்தை எடுத்து சென்ற விதம் மிக்க அருமை அக்கா ..
வாழ்த்துக்கள் , இன்னும் நிறையா எழுதுங்க , மீண்டும் வருவேன்