Followers

Saturday, July 24, 2010

வேதனை தான் வாழ்க்கையா?

தாயொருத்தி பெற்று விட்டாள் தலை மகனாக ..
துள்ளித்   திரிந்து பள்ளிப்படிப்பும் முடித்து .
கெட்டும் பட்டணம்  போ என ஆன்றோர் வாக்கு
சிரமேற்கொண்டு தொழில் தேடித் புறப்பட்டான்
ஓரளவு இருபாஷைகளின்  அறிவு இருந்ததலால்
தொழில் துறையும் கிடைத்தது. காலங்கள் கடந்து போக ..
 வாலைப்பருவமதில் வகையாக் வாழ்வதற்கே
மங்கை நல்லாள் வளைக் கரம் பிடித்தான் .
வஞ்சகமின்றி வாழ்கையில்  நான்கு கண்மணிகளை
 வகைக்கு இரண்டாக் . நலமுடன்  பெற்றான்
மங்கை நல்லாள் வளமுடனே வாழ்கையில்
 பணியிட  மாற்றம் பெற்று தொலை தூரம்  போக
இட்டனர் கட்டளை ,வகை தெரியாது கலங்கிய தலைவன்.
 கொண்ட பணி சிரமேற் கொண்டு .இடம் மாறிச் சென்று
 பணி புரியும் காலத்தில் வஞ்சகர் சேர்க்கையால்
பணியிடம் பதவி ..பறி போயிற்று ..

வாழ்வுக்கு வகையின்றி தள்ளாட
வாழ்க்கை  பெரும் பாறாங்கல்லாயிற்று
மங்கை நல்லாள் காணி பூமி நகை நட்டு கடன் பட்டு ...
வெளி நாடு அனுப்பி வைத்தாள். திரவியம் தேட
 புறப்பட்ட கப்பல் சூறாவளிக்குட்பட்டு ..திசை மாறி போனது..
சிலர் மாண்டனர் பலர் உயிர் கண்டனர்.
 புகலிடம் பெற்றனர் வெள்ளைக் கார  நாட்டிலே
அகதி அந்தஸ்தும் சிலருக்கு கிடைத்தது
பாவி இவன் வாழ்வு .பல் கேள்வி பதில் சொல்லி
பலனேதும்ற்று புகலிடக் கோரிக்கை  புறக்கணித்தாயிற்று
பணிபுரிய முடியவில்லை திரும்பி போக மனமில்லை .
 மங்கை நல்லாளும் மணியான் குழந்தைகள் நான்கும்
கடன் சுமையால் இருந்த வீடும் ஏலம் போனது.
வாடகை குடியிருப்பில் வாடினாள் பெண்ணவள்.

உற்றாரும் சக் உறவும் எது வ்ரை உதவுவார்
கொண்டவன் கோலமும  அலங்கோலமாய் ஆனது .
குடியும் மன நிலையும் குழம்பியது இறுதியில்
 சித்தம் கலங்கி தஞ்சமானான்  மருத்துவ மனை .
.வழியேதும் இன்றி வாடுகிறான். தனிமையில்
 தனிமை ஒருபுறம் பிரிவு மறு புறம் ...
மாறுமா வாழ்க்கை வராதா ஒரு வாழ்வு ............

குறிப்பு ": புலம் பெயர்ந்த் ஒரு ஈழத்தவனின்  வாழ்வு....(கேட்ட கதை )
 .கதையா ?கவிதையா...?...நீங்கள் தான் சொல்லணும். ...

10 comments:

சீமான்கனி said...

Me the 1st....

சீமான்கனி said...

கவிதைநடையோடு வாழ்வின் உணர்வுகளை சொல்லும் வாழ்வின் கதை அழகு நிலாக்கா....வாழ்த்துகள்....

பிரபாகர் said...

சகோதரி,

உங்களின் எழுத்துக்களில் பெரும்பாலும் துயரின் வெளிப்பாடே இருக்கிறது.

கவிதையோ, கதையோ... மனதைத் தொடும்வண்ணம் இருக்கிறது!

பிரபாகர்...

'பரிவை' சே.குமார் said...

kavathai nadaiyil oruvanin vazhkkaik kathai...

nanru.

ஹேமா said...

எங்கள் வாழ்வு எத்தனை விதமான கதைகளை உருவாக்கிவிட்டு வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்கிறது நிலா !

Guruji said...

வாழ்த்துகள்....


http://ujiladevi.blogspot.com

pinkyrose said...

அகதி என்பது எவ்வளவு பெருங்கொடுமை!
நிலாக்கா இது எப்பொழுது தீரும்?!

தினேஷ்குமார் said...

இகோர்வை கண்டதும் கண்ணில் நீர்த்துளி தளும்பியதேன்

சௌந்தர் said...

கதையா ?கவிதையா...?...நீங்கள் தான் சொல்லணும். ...//கவிதையான கதை

நிலாமதி said...

தளத்துக்கு வந்து கருத்துப்பகிர்ந்த ...சீமாங்கனி .......பிரபாகர் ...சே குமார்...ஹேமா....உஜிலா
...பிங்கி ரோஸ் .தினேஷ் குமார்...செளந்தர் .... ..உங்களுக்கு என் நன்றிகள். . .