அழகான அந்த சின்னஞ் சிறு கிராமத்த்து வாழ்க்கை அமைதியாகவும். மனோரம்மியமாகவும் இருந்தது . அதிகாலையின் ஆலய மணி ஓசை பறவைகளின் இனிய ஒலி ..காலையில் பரபரப்பான் அந்தக் கிராமம் நெல் வயல்கள் , பேரூந்துக்காக பயணிப்போர் துவிச்சக்கர வண்டியில் பாடசாலை செல்வோர் , என்று அந்தக் கிராமம் அதிகாலயிலே விழித்து விடும். இத்தகைய சூ ழலில் வாழ்ந்தவள் தான் காவியா...அதிகாலையில் எழுந்து காலைக் கடன் முடித்து , வீட்டு முற்றம் கூட்டி காலை உணவு உண்டு பாடசாலை செல்வாள். சில சமயம் நண்பியுடனும் சில சமயம் தனிமையிலும் செல்வாள். இத்தகைய நாளில் இரு கண்கள் அவளை கூர்ந்து கவனிக்க் தவறுவதில்லை . ஆம் அவ்வூரை சேர்ந்த வாத்தியார் பையன். கணேஷ் மிகுந்த .ஆவலுடன் சிநேகமாய் இருக்க முற்படுவான் அவள் அவ்வூரின் கட்டுபாட்டுக்குரிய வெட்கம் பயம் காரணமாக் விரைவாக் சென்று விடுவாள் இருந்தும் அவளது பதினைந்தாவது வயதில் ஒரு நாள் அவன் இவளைக் காதலிப்பதாக கடிதம் கொடுத்தான். பயத்திலும் வெட்கத்தில் அதை மறைத்து வைத்தாள் ஒரு நாள் நண்பிக்கு சொன்னாள் . அவளோ இது படிக்கும் காலம் அவன் மீது கோபம் இல்லை என்னை படிக்க விடு என்று பணிவாக் மடல் எழுதும்படி சொன்னாள் . அவனும் சம்மதித்து போகவே காதல் பார்வையே அவர்கள் மொழியானது.
.
.
உய்ர் கல்லூரிக் காலமும் வந்தது . பரீட்சை எழுதி முடிவுக்காக காத்திருந்த வேளை . அவ்வூரில் நடந்த யுத்த கால கெடுபிடிகளினால் ஊரின் நிலைமை நிலை மாறிப் போனது . மாலை ஆறுமணிக்கே ஊர் அடங்கி விடும் இளைஞ்சர்கள் பிடித்து செல்லப் பட்டார்கள். பலர் நாட்டை விட்டு ஓடினார்கள். பலர் அயல நாட்டு க்கு கடலாலும் கப்பலாலும் தப்பி சென்றார்கள் இளஞ்சர்கள் தப்பி செல்ல இளம்பெண்கள் படையினரின் வன் செயலுக்கு இரையானார்கள்.கவிதாவின் குடும்பமும் இதற்கு விதி விலக்கல்ல ஒரு வாறு தப்பி தலை நகருக்கு வந்தார்கள் கணேஷ் வெளி நாடு சென்று விட்டதாக மட்டும் கேள்விபடாள். .பலவருடங்களாக் எது வித தொடர்பும் இல்லை. இவளுக்கு திருமண் காலம் வந்ததும் பெற்றவர்கள் மாப்பிள்ளை தேட முற்பட்டனர் இதை அறிந்து ஒரு உறவுக்கார பெண்மணி மூலம் மூலம் தான் கணேஷ் விரும்பியிருப்பதாகவும் அவனுக்கே தன்னை மண முடித்து வைக்கும்படியும் கேடாள் பெற்றவர்களிடம். ஒரே பெண்ணான அவள் விருப்பத்தை செயல்படுத்த அவர்களும் விருபினார்கள். காலம் சென்று கொண்டு இருந்தது பேசும் திருமணம் எல்லாம் தட்டிக் கழித்து வந்தாள் .
பின்பு ஒரு நாள் கடின தேடலுக்குப்பின் கணேஷ் லண்டனில் இருப்பதாக செய்தி கண்டார்கள். ஒருவாறு அங்குள்ள் ஒருவரிடம் தொடர்பு ஏற்படுத்தி இவளது விருப்ப த்தை . தெரியப்படுத்தினார்கள். அவனது பெற்றவர்களும் அவனுடன் இருந்தார்கள் கவிதாவின் பெற்றவர்கள் மாப்பிள்ளை கேட்டு தூது சென்ற போது கணேஷ் இன பெற்றவர்கள் விரும்ப வில்லை . ஆனாலும் அவர்கள் விருப்பத்துக்கு எதிராக் தான். இவளை கலியாணம் செய்வதாக சொன்னான். அதற்கான் கால் நேரம் வந்ததும் அவள் திருமணமாகி லண்டன் சென்றாள். ஆரம்ப வாழ்க்கை சற்று இனிதாக் இருபினும் அவனில் பெரிய மாற்றங்களை கண்டு கொண்டாள்.
குடிவகை பாவிப்பவனாகவும் வேறு கெடட் பழக்கங்கள் உடையவனாகவும் இருந்தான் .
ஒரு குழந்தை கிடைத்தால் திருந்தி விடுவான் என்று கனவு கண்டாள் குழந்தை பேறும் கிட்ட் வில்லை . ஒரு நாள் நிறைந்தத மது போதையில் தள்ளாடி விழுந்தவனுக்கு முள்ளந்த்தண்டில் பலத்த அடி பட்டு நோய் வாய்ப்பட்டான் வைத்திய சாலையும் வீடுமாக் இருந்தான். பல மாதங்கள் சென்றன . இவள் தான் அத்தனை வீட்டு வேலைகளும்,குடும்பப் பொறு ப்புக்களையும் சுமந்தாள். ஒரு சிறு வேலையையும் தேடிக்கொண்டாள். இவளின் பெற்றவர்கள் கண்ணீர் விட்டனர். ஆழம் அறியாமல் காலை விட்டதற்காக . அவளும் தன் பிடிவாத்தை எண்ணி கவலைபட்டாள் என்ன செய்வது தன் தலை விதியை நொந்தாள்.இப்பொது அவள் தான் குடும்ப தேவைகளையும் பார்த்து அவனையும் வைத்திய சாலையில் கவனிக்கிறாள். என் காதல் வாழ்க்கை இது தானா? என்று கண்ணீர் .சிந்துவாள், அவனது மாறிய நடவடிக்கைகளைனால் தான் அவனது பெற்றார் பெற்றார் திருமணத்துக்கு விரும்பவில் லை என்று புரிந்து கொண்டாள். இப்பொது அவர்கள் இவளுக்கு ஆறுதலாக் உள்ளனர் . இனிய அவன் உறவுகளும் ஆறுதலாக் உள்ளனர்.
சில பெண்களின் தீர அறியாத மனோ நிலையும் மாற்றங்களை புரியாத வாழ்க்கை முறையும் பெற்றவர்களின் அறியாமையும் சில பெண்களை வாழ்வில் கண்ணீர் சிந்த வைக்கிறது. காலம் தான் அவனை மாற்றவேண்டும்."தாரமும் குருவும் தலை விதி" என்றால் நம் மதிநுட்பத்தால் அதை மாற்றுவோம். புதியதோர் உலகம் காண்போம்.....
13 comments:
பார்வையிலே
பரிதவித்து
பாவையின்
மனம் படிப்பிலே
தன்னம்பிக்கை வரிகள்
இறுதியில் சொல்லி இருக்கும் கருத்தும் அருமை.
//துவிச்சக்கர வண்டியில்//
இது சைக்கிளா?
நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.
காலச் சுழலில்
மாற்றங்கள் உலக நியதி
அதன் மெய் உணர்ந்து நாடிக்கொண்டால்
வேலியிட்டு தவிர்த்துக் கொள்ளலாம்
துங்க்ளையும் கண்ணீர்த் துளிகளையும்
"தாரமும் குருவும் தலை விதி" என்றால் நம் மதிநுட்பத்தால் அதை மாற்றுவோம்." மிகச் சரியான கருத்து. கதை அதற்கு வலிவு ஊட்டியுள்ளது.
அற்புதமாய் சொன்னீர்கள்
கடைசி வரிகளில் நிமிர்ந்து நிற்கிறீர்கள் சகோதரி..
சில காதல் திருமணங்கள் இப்படித்தான் ஆகின்றன.
கடைசி வரிகள் சிறப்பு!
என் பதிவுக்கு கருத்துப் பகிர்ந்த தினேஷ் குமார் ....சித்ரா .....சைவ கொத்துப் பரோட்டா .....செய்யது அலி ....டாக் எம் கே முருகாநந்தன் ...
நேசமுடன் காசிம் .....ஜெர்ரி ஈசானந்தா..... எஸ் கே . யாவருக்கும் என் சிரம் தாழ் நன்றிகள்
நம் மதிநுட்பத்தால் அதை மாற்றுவோம்."
புதியதோர் உலகம் காண்போம்.....
மிகச் சரி
//"தாரமும் குருவும் தலை விதி" என்றால் நம் மதிநுட்பத்தால் அதை மாற்றுவோம். புதியதோர் உலகம் காண்போம்.....//
அழகிய நடையில் கதை சொன்னவிதம் அருமை...கடைசியில் நல்ல ஒரு கருத்தை வைத்தது மிக அருமை... வாழ்த்துக்கள் அக்கா
படிப்பினை.
நல்ல எழுத்து எஅடை. கடைசி வரிகள் நெஞ்சை தொட்டுவிட்டது.
http://vijisvegkitchen.blogspot.com
Post a Comment