கடலும் கடல் சாந்த நிலமும் கொண்ட அந்த நாடுக்கு திருமண்ம பேசி அனுப்ப பட்டவள் தான் வாசுகி . பாஸ்கரனை கைப்பிடித்து வளமாகவும் நலமாகவும் வாழ்ந்தார்கள். பாஸ்கரன் அந்நாட்டின் தொடர்பு நிலையத்தில் கணணி தொழில் நுட்ப பிரிவின் அதிகாரியாக பணியாற்றினான். இல்லறம் இன்பமாகவே போனது. இருவரும் தாயகத்தில் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றவர்களின் விருப்பப்படி வாசுகி மண ஒப்பந்தமாகி அந்த நாட்டுக்கு சென்றவள். ஆரம்ப காலத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்த வாழ்வின் பரிசாய் ஒரு பெண குழந்தைக்கு தாயானாள் . தனித்தனியான அவர்கள் வாழ்வு ஒரு குடும்பமானது . காலப்போக்கில் அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டாவது குழந்தையும் பெண குழந்தையாகியது . காலயில் பணிக்கு செல்லும் பாஸ்கரன் இடைவேளையின் போது தொலைபேசியில் அழைத்து பேசுவான். தான் பணியில் ஈடுபட்டு இருக்கும் போது மிக மிக அவசரமென்றால் மட்டும் அவளை அவனுக்கு அழைக்க சொல்வான். மற்றும் படி அவனே அழைத்துபேசுவான்.
சில நாட்களில் பணியின் ஈடுபாட்டில் அழைக்க மறந்து விடுவான். மாலையில் வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்பான்.
சில நாட்களில் பணியின் ஈடுபாட்டில் அழைக்க மறந்து விடுவான். மாலையில் வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்பான்.
இப்படியாக் இவர்கள் வாழ்வு சென்று கொண்டிருந் போது ..வாழ்க்கை செலவும் சற்று அதிகரித்தது . இதனால் வார விடுமுறைகளில் தனியார் நிறுவனக்களுக்கு கணனி திருத்தும் பணிக்கும் செல்வான். இதனால் வாசுகிக்கு சற்று மனக்கசப்பு எல்லா நாளும் வேலை . வார இறுதியிலும் செல்கிறாரே என்று. குழந்தைகளும் அவளை சமைக்கக் விடாது சிரமம் கொடுத்தனர். சில சமயம் வேலைக் களையால் வந்து .. சாப்பாட்டு மேசையில் பேச்சு வாக்கில் இருவர் குரலும் ஓங்கி ஒலித்ததும் உண்டு . இவர்கள் சத்தமிடுவதை குழந்தைகள் கண்டு தூங்க சென்று விடுவார்கள். வருடங்கள் ஓடி ஐந்து வருடங்களாகி விட்டது குடும்ப் த்துகாக் நேரம் ஒதுக்குவதில்லை . என்று வாசுகி குறைபட்டுக் கொள்வாள் . தன் வீட்டு நிலைமையை புரியவில்லை .என்று பாஸ்கரன் கடிந்து கொள்வான். எல்லோருடைய வீடுகளிலும் கோப தாபங்கள் மனஸ்தாபங்கள் இருக்கும் ஆனால் அவை சீர் செய்ய பட்டுவிடும். பிரச்சினைகள் நீடித்தால் பிரிவுக்கு வழி வகுக்கும். இன்றைய இளைய சமுதாயத்திடம் ஆண் களாய்இருந்தாலும் சரி பெண்களிடம் சரி சகிப்புத்தன்மை குறைந்து தான் விட்டது. சற்று மனஸ்தாபம் வந்ததும் மதுவிடம் தஞ்சமடைகின்றனர் .பாஸ்கரனும் விதி விலக்கின்றி மது வகை பழகிக் கொண்டான். இரவில் சாப்பிடாமலும் படுத்தான். அவன் உடல் நிலை சற்று நோய் கண்டது . ஒரு நாள் அவனது பல பள்ளி நண்பன் ஒருவன் கடைத்தொகுதியில் சந்தித்தான். அவனுக்கு இவர்களை ஊரிலே தெரிந்தது இருந்தது. இவனது கதை கேட்டு கவலை கொண்டான். அவன் மூலம் வாசுகியின் (ஐரோப்பிய நாடில் உள்ள )ச்கோத்தரனுக்கு கதை காற்றாய் பறந்தது. இப்போது மூத்த வள கஜானி முதலாம் வகுப்பிலும் இரண்டாவது மகள் கேசவி பாலர் வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தனர்.
அந்த வருட விடுமுறையின் போது லண்டனில் உள்ள மாமா வீடுக்கு சென்றவர்கள் விடுமுறை முடிந்தும் வரவே இல்லை. பாஸ்கரன் தான் அவர்களைக் கொண்டு சென்று விடான். ஆனாலும் வாசுகி வர மறுத்து விட்டாள். . அங்கு குழந்தைகளை படிப்பிக்க போவதாக் கூறிவிட்டாள் . . பாஸ்கரனும் பல முறை அழைத்துப் பார்த்தான் . அவர்கள் வரவில்லை வாசுகியும் பிடிவாதமாய் இருந்தாள். . குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு ஒரு கடைத்தொகுதியில் சிறு வேலைக்கும் சேர்ந்து கொண்டாள்.
வாசுகியின் மன மாற்றத்தை எண்ணி சகோதரன் கவலைப்பட்டான் . புத்தி சொல்லி பார்த்தான். கேட்கவில்லை ..பாஸ்கரனும் குழந்தைகளுக்கு வேண்டும் பணம் அனுப்பினான். தான் இருந்த வீட்டை வீட்டை விட்டு விலகி ... உணவுடன் தனி அறை பார்த்துக் கொண்டான். வருடம் இரண்டு உருண்டோடியது .தங்கள் பிறந்த நாளில் குழந்தைகள் தந்தையுடன் செலவிடுவார்கள். இரண்டு வருட பிரிவு நால்வரையும் பாதித்தது பாஸ்கரனை இன்னும் பாதித்தது .வேலை விட்டு வந்தால் வீடில் வெறுமை . குடி தான் தஞ்சம் மயக்கத்தில் உறங்கி விடுவான்............ஒரு நாள் ..மைத்துனனிடம் இருந்து ,ஒரு தொலைபேசி அழைப்பு ......... மூத்தவள் கஜானி பெரிய பெண்ணாகி விடாள் என்றும் ஊரில் இருந்து அத்தையும் அப்பம்மாவும் வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். . பாஸ்கரனுக்கு மகிழ்ச்சி யடைந்தான் . என்ன மனஸ்தாபம் இருந்தாலும் அவர்களிடம் போவது என்று வேலை தளத்தில் தெரிவித்து இருவார அனுமதி பெற்றுக் கொண்டான். வாசுகியும் தனிமையை உணர்ந்திருந்தாலும் அவளது பிடிவாதம் இடங்க்கொடுக்க் வில்லை . அந்த நாளும் வந்தது அங்கு சென்ற பாஸ்கரனுக்கு வீடு விழாக் கோலமாய் இருந்தது . மூத்த பெண அலங்காரம் செய்து தேவதை போன்று இருந்தாள். ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினான்.
உறவினர் எல்லாரும் சென்ற பின். குடும்பத்தார் ஒன்றிணைந்து வாசுகிக்கு புத்தி மதி சொன்னார்கள். அவளும் தான் தவறு உணர்ந்தாள். .உண்மையான் குடும்ப் அன்பு உள்ளவர்கள் ஒரு நாளும் பிரிவதி ல்லை எத்தனை மனத்தாங்கல் வந்தாலும் பிரச்சினைகள் வந்தாலும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவு தான் ஆரோக்கியமானது. குடும்பம் ஒரு அன்பால் செய்த மாளிகை . கணவன் மனைவி குழந்தைகள் தான் அதன் ஆரோக்கியமான் தூண்கள். நல்ல ஒரு குடும்பம் கோவில் போன்றது . சகல் செல்வங்களும் உள்ள ஆரோக்கியமான் கோவில்.
பிரிவு என்பது தன்னிலை ஆராச்சி செய்து முடிவு எடுக்கும் ஒரு இடைவெளி . பிரிவு என்றும் பிளவு அல்ல
13 comments:
வணக்கம் தோழி
உணர்வுகள் பிரிய
நினைத்தாலும்
உணர்ச்சிகள்
பிரிவதில்லை
நிழல்கள்
விலகினாலும்
நினைவுகள்
விலகுவதில்லை...............
நிலாமதி அக்கா....கடைசியில் சொல்லி முடித்த முத்தாய்ப்பே கதையின் வலிமை !
கடைசி பத்தி அனைவரும் கடைபிடிக்க வேண்டிய உணரவேண்டியவை... நம்மில் பெரும்பாலோர் வாழ்க்கையை அனுசரித்து வாழ்வதே இந்த குழந்தைகளுக்காகத் தானே..இவர்கள் என்ன விதிவிலக்க...
நிலாமதி அக்கா... ஒரு சமூகவிடயத்தை நாசுக்காக தெளிவு படுத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள்...
பிரிவு என்பது தன்னிலை ஆராச்சி செய்து முடிவு எடுக்கும் ஒரு இடைவெளி . பிரிவு என்றும் பிளவு அல்ல
......வாழ்க்கையில் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து. அதை அருமையாக கதையில் பிணைத்து சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
கணவன், மனைவிக்கு தேவையானப் பதிவு!
ஆம்"..பிரிவு என்றும் பிளவு அல்ல .." மனத்தில் பெருந்தன்மை மீந்திருக்கும் வரை.
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவு தான் ஆரோக்கியமானது
உணர்வுகளின் போராட்டத்தில் உறவுகள் விரிகிறது
அன்பெனும் பாலம் கொண்டு இணைப்பது பண்பாகும்
--
நல்ல கதை... தம்பதிகள் கண்டிப்பாக படித்து அறிந்து கொள்ள வேண்டிய கதை
ம்ம் நல்ல பாடம் சகோ!
//உண்மையான் குடும்ப் அன்பு உள்ளவர்கள் ஒரு நாளும் பிரிவதி ல்லை எத்தனை மனத்தாங்கல் வந்தாலும் பிரச்சினைகள் வந்தாலும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவு தான் ஆரோக்கியமானது.//
உண்மை நிலாக்கா...உயிரோடு கலந்து விட்ட உறவுகளுக்கு பிரிவு என்பது பிளவு அல்ல சிறப்பான பகிர்வுக்கு நன்றி கா...
பிரிவு என்றும் பிளவு அல்ல
நல்ல கதை வாழ்த்துக்கள் தோழி
தினேஷ் ,ஹேமா,தமிழரசி,ம. தி.சுதா, சித்ரா ,ஸ்ரீ அகிலா , டாக்.எம் கே முருகானந்தன் ,. யாதவன் ,சே குமார், பிரியமுடன் வசந்த்,
சீமான் கனி , ஆர் வீ சரவணன் உங்கள்வ்ருகைக்கும் கருத்துபகிர்வுக்கும் என் நன்றிகள் உங்கள் ஊக்கம் என்னை ஆக்குவிக்கும்.
Post a Comment