Followers

Monday, November 15, 2010

பசி தீர்க்கும் தாய்மை



நம் பசி தீர்க்க தன்
பசிக்கு உணவு
நாடிச்  சென்றவள
சென்றும் பல நாழியாச்சு

நலமோடு வரும் வரையில்
நாம இருப்போம் ஒற்றுமையாய்
நகர்ந்து சென்று ஓடாதே
நன்றும் தீதும் காத்திருக்கும்

நிறத்தில் வேறு கண்டாலும்
நிஜத்தில் நாம் உறவுகள்
பத்திரமாய் நாம் இருப்போம்
சென்ற வழி பார்த்திருப்போம்

பதறாதே சோதரி
பகல் பொழுது சாய முன்
பசி தீர்க்கும் தாயவள்
பாயந்து ஓடி  வந்திடுவாள்

20 comments:

எல் கே said...

நல்லா இருக்குங்க

Ungalranga said...

கவிதை அருமை..!!

வாழ்த்துக்கள்!!

சிவகுமாரன் said...

நீங்கள் எதை நினைத்து எழுதினாலும் எனக்கு ஈழத்து சோகம் தான் நினைவுக்கு வந்து நெஞ்சை பிசைகிறது. இந்தக் கவிதை கூட

தமிழ்க்காதலன் said...

அருமை.. அருமை. இந்த மென்மை தாங்கும் உணர்வுகள்... தந்த எச்சரிக்கைகள்.... அற்புதம். நல்ல நடை. வாழ்த்துக்கள். தொடருங்கள்.

Sriakila said...

ப்சி தீர்க்கும் தாய்மை அருமை!

sathishsangkavi.blogspot.com said...

..பதறாதே சோதரி
பகல் பொழுது சாய முன்
பசி தீர்க்கும் தாயவள்
பாயந்து ஓடி வந்திடுவாள் ..

உண்மைதான்...

தமிழ் உதயம் said...

தாய் எங்கிருந்தாலும் சேயின் பசி தீர்க்க ஓடி வருவாள்.

வெங்கட் நாகராஜ் said...

பதறாமல் சிதறாமல் அழகாய் வந்து விழுந்து இருக்கின்றன வார்த்தைகள் உங்கள் கவிதையில். படத்திற்கு ஏற்ப நல்ல சிந்தனை.

ADHI VENKAT said...

அழகான கவிதை.

ஹேமா said...

கவிதையின் சாயலில் உலகம் மனிதத்தோடு வாழ்ந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் !

Muruganandan M.K. said...

உணர்வ்வோட்டம் உள்ள நல்ல கவிதை.

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை..!!

yarl said...

சோகம் இழையோடும் உருக்கமான கவிதை.

சிவராம்குமார் said...

நல்ல சொல்லாடல்! அருமை!!!

thiyaa said...

super கவிதை

தமிழ்த்தோட்டம் said...

மிகவும் அருமையா இருக்கு அக்கா வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

ஃஃஃஃநிறத்தில் வேறு கண்டாலும்
நிஜத்தில் நாம் உறவுகள்
பத்திரமாய் நாம் இருப்போம்ஃஃஃஃ
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

Anonymous said...

கவிதை கவிதை ஆஹா.. ஆஹா.. கவித்துவம் என் நெஞ்சை தைக்குதே.. மன்னிக்கவும் இன்ரு தான் உங்கள் பக்கம் வந்தேன் அருமை அணைத்து தேன். வாழ்த்துக்கள்.

செய்தாலி said...

எனக்கு ரெம்ப பிடித்திருக்கு இந்த சித்திரமும் கவிதையும்

அனீஷ் ஜெ said...

அருமையான கவிதை...

வாழ்த்துக்கள்....

இப்படிக்கு அனீஷ் ஜெ