நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Tuesday, January 4, 2011

திருப்பங்கள்திருப்பங் கள் 

நம் வாழ்க்கையில் சில சம்பவங்கள்  திருப்பங்கள்,  மாற்றங்களை ஏற்படுத்து கின்றன. அந்த வகையில் இதோ ஒரு இளைஞ்சனின் வாழ்வில் ஏற்பட்ட திருப்பம். 

மீனட்சியின் ஒரே ஒரு மகன் தான் பால சங்கரன் . இளவயதில்  தந்தையை தொலைத்தவன். ஏனைய குடும்பம் போல மீனாட்சியும் பாலகுமாரனை கைபிடித்து வாழ்ந்தவள் தான் . காலபோக்கில் ஒரு நாள் பட்டணத்துக்கு வி யாபாரம் செய்ய போனவன், போனவன் தான் ஒரு வித பதிலும் இல்லை.அவளும் தேடிக் களைத்து  விடாள். மூன்று வயது பாலச்ங்கரனுக்கு அப்பாவை நினைவில்லை. வருடங்களுருண்டோடி வய்து பதினாறு  ஆகிவிட்டது. ஆரம்பத்தில் வாழ்க்கையை சமாளித்தவள் ஊராரின் கேலிக்கும்  புண்படுத்தும் வார்தைக்க்ளுக்கும் பதிலின்றி தவித்தாள். தன் முயற்சியால் இருவரின் வயிற்றைக்  கழுவ கூலி வேலைக்கு போனாள். . அம்மாவை நினைத்தும் ஊராரின் வசைப் பேச்சுக்களை எண்ணியும்.
சங்கரனுக்கு இள  வயதிலேய சோகம் வெறுப்பு  

மற்றைய சிறுவர்களுடன்  சேர்ந்தது விளையாட தயக்கம் எந்நேரமும் சோர்ந்தும் தயங்கி கொண்டும்  இருப்பான். என்ன கஷ்ட படாலும்  அவனைப் படிக்க  வைக்க தாய் பெரும் பாடு பட்டாள் . "உன்னை நம்பித்தான் ராசா  உயிரை வச்சு  இருக்கேன் "என்பாள். பள்ளியில்  இருந்து வரத்தாமதமானாலும் கலங்குவாள். வயது ஏற ஏற அவனுக்குள் ஒரு விரக்தி . ஒரு நாள் நானும் அம்மாவும் சாப்பாட்டில் விஷம் வைத்து அதி உண்டு இறந்து விடுவோம் என் எண்ணிக்கொள்வான். அதற்காக் ஒரு விஷபாட்டிலும் , வாங்கி காற்சடைபையில் வைத்திருப்பான்.வேளை வரும்வரை காத்திருந்தான். 

வழக்கம்போல் ஒரு நாள் பள்ளி விட்டு வரும் போது ஒரு கல் தடுக்கி கீழே விழுந்து விட்டான் . விஷ பாட்டில் விழுந்து உருண்டோடியது . அவனுக்கு பின்னால் வந்த சக மாணவர்கள் காணாதபடி எடுத்து மறைத்து  விடான் காலில் சிராய்ப்பு காயங்கள். அதில் ஒரு சக மாணவனும் அவன் நண்பனும்  ஓடோடி வந்து இவனை தூக்கி சிதறிய புத்தகங்களை ஒன்று கூட்டி  எடுத்து கொடுத்தனர் . அந்த சக மாணவன் பார்த்திபன், தன் வீட்டுக்கு  வந்து  மருந்து போடும்படி மிகவும் வற்புறுத்தி கேட்டான். சங்கரனுக்கு எழுத்து நடக்க முடியவில்லை . துணையின்றி.ஒருவாறு பார்த்திபனின் வீட்டுக்கு  சென்று மருந்திட்டு மீண்டும் அவனை அவன் வீடில் கொண்டுபோய் விட்டனர். தாயார் அவனை கண்டு பதறிப் போனார். அன்றில் இருந்து பால சங்கரனும் பார்த்திபனும் நண்பர்கள் ஆயினர். பார்த்திபனின் பெற்றார் சற்று வசதியானவர்கள். இருவரும் சேர்ந்து பரீட்சை நேரங்களில் பார்த்திபன் வீடில் இருந்து படிப்பார்கள். 

பால சங்கரன் மனசு மெல்ல மெல்ல தைரியம் பெற்றது. படிப்பில் தான் முன்னேற்றம் பெறவேண்டும் என் எண்ணிக்கொண்டான் . காலங்கள் செல்ல செல்ல அவர்கள் பல்கலைக் கழகம்  சென்று ,  விஞ்ஞான துறையில் தேர்ச்சி பெற்றனர். அதற்கான் பட்டமளிப்பு விழாவும் நெருங்கியது . அவர்களின் பெற்றவர்களும் விழாவுக்கு அழைக்க் பட்டார்கள். பால சங்கரனின் தாய் மறுக்கவே , அவனது பகுதி நேரவேலையில் கிடைத்த் பணத்தில் அழகான் சாரி வாங்கி கொடுத்து அழைத்து சென்று தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டான் .
 மீனாட்சி க்கு உள்ளூர பெருமை.. பட்டமளிப்பு நேரம் வந்ததும் வரிசைக் கிராமமாக் அழைத்து பாராட்டுப் பத்திரம் கொடுத்தனர் . பால சங்கரன் முறை வந்தது.கம்பீரமாய் சென்றவன் அதிபர் காலில்விழுந்து  வணங்கி  தனது  வேண்டுகோள் ஒன்றை நிறைவேற்றும்படி கேட்டான்.  தனக்கு இரு நிமிடங்கள் பேச அனுமதிக்கும்படி கேட்டிருந்தான். கண்களில் கண்ணீர் மல்க என் திறமையை வளர்த்து , நட்பு பாராட்டி ,  அந்தஸ்த்து பாராமல் அணைத்து  இந்த அளவுக்கு வளர என்னை ஏணிப்  படியாக  ஏற்றி விட்டவன் அருமை நண்பன் பார்த்திபன் தான். இன்று அவனது நட்பும் கரிசனையும் கிடைத்திராவிடால்...இந்த நிலைக்கு  வந்திருக்க் மாடேன். என்றன் நாத்தழுதழுக்க . அரங்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் கை தட்டி ஆரவாரித்தார்கள்.  மீனாட்சி கண்ணீரை துடைத்துக் கொண்டாள். 

வாழ்வில் சிலருக்கு ஏற்படும் திசை திருப்பம் தான், முன்னேற்றத்தின் படிகளாகின்றன. 

18 comments:

யாதவன் said...

சொந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்த காரணத்தால் வலைப்பக்கம் வர முடியவில்லை
நெஞ்சு வலிக்கிறது, உண்மையில் அழ வைதுது விட்டிர்கள்
உங்கள் கதை மண்வாசனையுடன் இருக்கிறது
எல்லா கதையிலும் தந்தையை அல்லது தயை இழந்தவர்கள் சமந்தமாகவே எழுதுகிறீர்கள் என்ன காரணம்

சங்கவி said...

திருப்பங்கள் வாழ்வின் நிஜங்கள்...

ஜெய்லானி said...

//நம் வாழ்க்கையில் சில சம்பவங்கள் திருப்பங்கள், மாற்றங்களை ஏற்படுத்து கின்றன//

மனிதனை நல்லவனாகவும் சில நேரம் கெட்டவனாகவும் அதே மாற்றி விடுகிறது .. அருமையான கதை :-)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. நன்றி.

Chitra said...

வாழ்வில் சிலருக்கு ஏற்படும் திசை திருப்பம் தான், முன்னேற்றத்தின் படிகளாகின்றன.


...so true....

சே.குமார் said...

Nalla Pakirvu... pakirnthaa ungalukku nanri....

ம.தி.சுதா said...

////அரங்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் கை தட்டி ஆரவாரித்தார்கள். மீனாட்சி கண்ணீரை துடைத்துக் கொண்டாள். ////

நான் கூட தட்டிக் கொண்டேன்...

இளம் தூயவன் said...

நிச்சயம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நல்ல நட்பு முக்கியம்.

ஆனந்தி.. said...

நல்ல மெசேஜ் நிலா...

ஹேமா said...

திருப்பங்கள்தான் வாழ்வின் சுவாரஸ்யமே !

ஜீ... said...

Nice! good post!

நிலாமதி said...

என் பதிவுக்கு வருகை தந்த நல்ல உள்ளங்கள்....சங்கவி ...ஜெய்லானி ....வெங்கட் நாகராஜ் ...சித்ரா...சே குமார்..மதி சுதா... இளம் தூயவன் ...ஆனந்தி ....ஹேமா...ஜி

.ஆகியோருக்கு நன்றிகள்.

wellgatamil said...

திருப்பங்கள் வாழ்வின் நிஜங்கள்...


http://usetamil.net

அந்நியன் 2 said...

வாழ்வில் சில திருப்பங்களை நாம் சந்திக்க நேரிடகிறது அதில் நல்லவையும் இருக்கு கெட்டவையும் இருக்கு அந்த வகையில் இந்த திருப்பம் முதலிடத்தை பிடிக்கின்றது வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் said...

நன்றி மறப்பது நன்றன்று - என்னும் குறளை நினைவுப்படுத்திய அருமையான பகிர்வு. நன்றி சகோதரி.

தோழி பிரஷா said...

தங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html

Sriakila said...

நல்லா இருக்கு நிலாமதி! பகிர்வுக்கு நன்றி!

Dr.எம்.கே.முருகானந்தன் said...

எதற்கும் துவண்டு விடாது
முயற்சித்தால் வாழ்வு முன்னேறும்.
கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்த வேண்டும்.
நல்ல கருத்துக்களை முன் வைக்கும் பகிர்வு.