எதிர்பார்ப்பின் எல்லைகள்
அந்த பேரூந்தின் நெரிசலில் ஏறிக் கொண்டாள். பயணிகள் காலை மிதிப்பதும் மனிதர்களின் வியர்வை மணமும் . அழும் குழந்தைகளுமாய் ஒரு மணி நேர பயணம் அவளுக்கு ஆரம்ப மாகியது ...அவள் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கிறாள். சில அவளது பணி நேரம் பகலிலும் இருவாரங்களுக்கு ஒரு முறை இரவிலும் அவள்து பணி இருக்கும்.............தோளில் தொங்க்கும் கைப் பை ..ஒரு மூலையில் ஒதுங்கியிருக்கும் மத்திய உணவு , ...இவற்றை ஒதுக்கி பேரூந்துக் கட்டணத்துக்கான காசை எடுத்து கண்டக்டரிடம் கொடுத்து டிக்கட் எடுத்தாள் . கை பிடிக்கும் கம்பிக்கு அருகே நின்று கொண்டாள் . அருகே இருந்த வயதான் மூதாட்டி இறங்கும் இடம் வரவே .
.
..அவள் உட்கார்ந்து கொண்டாள் .
அவளது சிந்தனை ...இருபது வருடங்களுக்கு முன் .நினைவு மீட்க சென்றது ..ஐந்து வயதுக் குழந்தை யாக் ஒரு கன்னியர் மடத்தில் சேர்க்க பட்டாள். .துறவிகளின் அன்பும் பாராமரிப்பும் தாய் தந்தை யற்ற இவளுக்கு பேராதரவாய் இருந்தது . ஒரு பாதிரியார் தான் இவளை அந்த மடத்தில் சேர்த்தார். போரின் போது தாய் தந்தை இறந்துவிட் ஒரு பற்றை மறைவில் இருந்து இவளை கண்டெடுத்தனர். பெயரை கேட்ட் போது தேவி என்று சொன்னாளாம். அப்பா பெயர் அப்பா என்றாளாம். அம்மா பெயர் அருள் தேவி அக்கா என்றாளாம் . அயல வீட்டார் தாயை கூப்பிடுவதை வைத்து இவளும் அவ்வாறே கூப்பிட்டு இருக்கிறாள். அந்த ஊரின் கூட்டுறவுக் கடையில்(ரேஷன் கடை அட்டையில் ) தேடியதில் , தாய் அருள் தேவி . தந்தை சகாய நாதன் இவள் சுதந்திரா தேவி ...என் அடையாளம் கண்டு கொண்டனர் அதையே பாதிரியார் மடத்தில் சேர்க்கும்போது பதிவு செய்து இருகிரார்...தேவி வளர்ந்து வருடாவருடம் அடுத்த் வகுப்புக்கு சென்று ...இறுதியாண்டு சித்தி ஏய்தினாள். வயது பதினெட்டு ஆகியது .. இந்த வயதுக்கு பின் அங்கு அனுமதிக்க் மாட்டார்கள் .
ஏதாவது ஒரு தொழில பழகி தன் காலில் நிற்க கற்றுக் கொடுத்து விடுதியில் இருந்து அனுப்புவார்கள். . மாத மொரு முறை அந்த விடுதிக்கு வரும் , bakery பேக்கரி உரிமையாளரிடம் சொல்லி வைத்தது வீண் போகவில்லை . அயலிலுள்ள நகரத்தில் . கடலுணவு பதனிடும் நிலையத்தில் . பொதி செய்யும் பகுதியில் இவளுக்கு வேலை கிடைத்தது. . ஒரு வாரம் மடத்தில் இருந்து போனாள். பின் அங்கு வேலை செய்யும் இன்னொரு பெண மூலம் மாத வாடகைக்கு ஒரு இடம் பெற்றுக் கொண்டு தனியே வாழ்ந்து வந்தாள்.அடுத்த் நிறுத்துக்கான் விசில் சத்தம் கேட்கவே ...திடுக்குற்றவள் ..இறங்கி கொண்டாள்.
பள்ளி வாழ்க்கை ,வேலை சற்று தன் தேவைகளை நிறைவு செய்ய ஊதியம் ,உணவுக்கும் வாடகைக்கும் வருடமொருமுறை துணி மணி வாங்கவும் போதியதாய் இருந்தது.... வேலை இருக்கு மட்டும் வேலை செய்யலாம் அதன் பிறகு ....அவள் வாழ்க்கை .....ஏனைய பெண்களை போல் கால காலத்தில் யார் திருமணம் செய்துவைக்க் போகிறார்கள் . சீர்தனம் ,அழகு , அந்தஸ்து என்று பார்க்குமிவ்வுலகம் இவளை ,
அதுவும் ஒரு அனாதையை யார் திருமணம் செயவார்கள்.......வேலை கிடைத்தது ந தன் காலில் நிற்பதே பெரிய செயல் .யார் தயவுமின்றி அவள்வாழ்க்கை செல்கிறது .
அதன்பிறகு ....அதன்பிறகு ....இவ்வாறே கேள்விகளே வாழ்க்கையாகி போகுமா ? ..துணையின்றி வாழ முடியுமா ? .வாழ்க்கை அர்த்தமுள்ள்தாகுமா? ?.எங்காவது ஒருவன் இவளுகாக் பிறந்திருப்பான்....அனுதாபம் உள்ள ஒருவனை சந்திப்பாள் ..நல்லவன் ஒருவன் கிடைப்பான் .என்ற் நம்பிக்கையுடன் வாழ்க்கை சுழல்கிறது .ஆயிரம் கேள்விகள் கேட்டு தனக்குள்ளே நம்பிக்கை என்னும் விடை தேடி, நம்பிக்கை தான் வாழ்க்கை. ..திருப்பங்கள் வரும் வ்ரை எல்லைகள் நீண்டு கொண்டே போகின்றன...

15 comments:
நம்பிக்கை வீண் போகாது..
யாரும் இன்றி அனாதையாய் இருந்த போது வழி பிறந்தது போல விரைவில் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும்
வலிக்குதுய்யா.....
.திருப்பங்கள் வரும் வ்ரை எல்லைகள் நீண்டு கொண்டே போகின்றன...
.....பொன்னான வரி .... இந்த ஒரு வரி, ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறதே...
அக்கா அருமையா எழுதி இருக்கீங்க
மிகவும் ரசித்து படித்தேன் ,...
ஒருவித ஈர்ப்புடன் முழுதும் படித்து முடித்தேன் ,...
நிச்சயம் இதெற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும் ....
துணிவும் நம்பிக்கையுமே அவள் வாழ்க்கைக்கு உதவியாகிறது.
இதுமாதிரி எத்தனை கதைகளைச் சுமக்கிறது எம் போர்க்காலம் !
//நம்பிக்கையுடன் வாழ்க்கை சுழல்கிறது .ஆயிரம் கேள்விகள் கேட்டு தனக்குள்ளே நம்பிக்கை என்னும் விடை தேடி, நம்பிக்கை தான் வாழ்க்கை. ..திருப்பங்கள் வரும் வ்ரை எல்லைகள் நீண்டு கொண்டே போகின்றன...//
இந்த வரிகள் தரும் நம்பிக்கையிலும் நிதர்சனத்திலும் தான் நம் வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது
நம்பிக்கை தான் வாழ்க்கை... நம்புங்கள்..
//திருப்பங்கள் வரும் வ்ரை எல்லைகள் நீண்டு கொண்டே போகின்றன...//
அர்த்தமுள்ள வார்த்தைகள்!
பகிர்வுக்கு நன்றி சகோ.
நம்பிக்கை வீண் போகாது..
super
காலம் அவளுடைய எதிர்பார்ப்புகளுக்கு பதில் கொடுக்கும்.
இன்று தான் உங்கள் பிளாக்
பக்கம் வந்தேன். நல்ல அருமையாய்
எழுதி இருக்கீங்க. படிக்கும் போதே மனது வலித்தது.
\\நம்பிக்கை தான் வாழ்க்கை. ..திருப்பங்கள் வரும் வ்ரை எல்லைகள் நீண்டு கொண்டே போகின்றன...///
நம்பிக்கைகள் வீண் போவதில்லை சகோதரி.
விரைவில் நல்ல திருப்பம் அமைய வாழ்த்துக்கள்!
Post a Comment