சோகத்திலும் ஒரு தாகம்.................
by nilaamathy Today at 6:27 pm
சோகத்திலும் ஒரு தாகம்..........
செயற்ககைக் கைகளுடன் நான் டொக்டருக்குப் படிக்கலாமா?
2006ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பமாகியபோது வீட்டுக்கொருவர் போராட்டத்தில் இணைய வேண்டும் என்று என்னை புலிகளுடன் இணைப்பதற்கு பலர் முயற்சி செய்தார்கள். பாடசாலை விட்டு வரும்போது என்னை பலவந்தமாக வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். நான் ஒருவாறாக எனது சைக்கிளையும் விட்டுவிட்டு குறுக்கு வீதிவழியே வீட்டிற்கு ஓடி வந்து விட்டேன்.
இது 2008 ஜனவயில் நடைபெற்றது. அன்றிலிருந்து நான் பாடசாலைக்குப் போகவில்லை. அத்துடன் எனது தங்கைமாரையும் பெற்றோர்கள் நிறுத்தி விட்டார்கள். படிக்க முடியவில்லைவீட்டைவிட்டு வெளியிறங்க முடியவில்லை.எனது வாழ்க்கை மிகவும் விரக்தியாகவே இருந்தது. அத்துடன் மாலைவேளையில் நான் திருநகர் மைதானத்தில் ஒரு மணித்தியாலம் வரை உதைப்பந்து விளையாடுவேன்
. எல்லாம் தடைப்பட்டுப் போய்விட்டது. விரக்தியும் கோபமும் என்னில் நிறைந்து காணப்பட்டது.
எனது அப்பாவுடன் அடிக்கடி சண்டை பிடிப்பேன். அப்போதெல்லாம் நான் சொல்வது சமாதான காலத்தில் நாங்கள் வவுனியாவில் போய் இருந்திருக்கலாம்.இப்படி எத்தனை நாளுக்கு பள்ளிக்கூடம் போகாமலும், டியுசன் போகாமலும் மைதானத்திற்கு போகாமல் இருப்பது.இல்லாவிட்டால் நான் போய் அவர்களிடம் சேரப்போகிறேன். எனது பெற்றோர் என்னிலை பார்த்து கவலைப்படுவார்கள்.அவர்களால் செய்வதற்கு ஒன்றுமில்லை.
எமது வீட்டின் வேப்பமரத்திற்கு கீழ் 'பங்கர்' ஒன்று வெட்டியிருந்தேன். 'கிபிர்' சத்தம் கேட்டவுடன் நான் தான் முதலில் ஓடிப்போய் அதனுள் இருப்பேன். பின் தங்கைமார், அம்மா, அப்பா வருவார்கள். ஒருநாளைக்கு 5தடவையாவது அதற்குள் இருப்போம். கிபிர் சத்தம் கேட்டவுடன் எனக்கு என்னை அறியாமலேயே நெஞ்சு அடிக்கத் தொடங்கிவிடும் மூச்சு எடுக்க கஸ்டம். ஒரு அந்தரம் போல் இருக்கும்.
அத்துடன் அது பதிந்து குண்டு போடும் போது வீரிட்டுக் கத்துவேன். அவ்வளவிற்கு அதன் சத்தம் பயங்கரமானது.
இரவில் மட்டும்தான் கொஞ்சம் நிம்மதி.ஆரம்பத்தில் இரண்டு மணித்தியாலங்கள் வரை மின்சாரம் தந்தார்கள். அதனுதவியுடன் படித்தேன். சிறிதுநேரம் தொலைக்காட்சியும் பார்ப்பேன். தனியே 'நிதர்சனம்' தொலைக்காட்சி மட்டும் சேவையில் இருந்தது.
அதில் போராட்டம் சம்பந்தமான நாடகங்களும், படங்களுமே காட்டினார்கள். நாளாந்தம் ஷெல், விமான குண்டுவீச்சினால் கொல்லப்பட்ட மக்களின் கோரமான படங்களை காட்டுவார்கள். எனக்கு அவற்றைப் பார்க்கும் போது உடலே நடுங்கும்.வெறுப்பும், விரக்தியும் அரச படைகளின் மீது கோப உணர்வும் என்னை அறியாமலேயே வெளிப்பட்டன.
யுத்தம் நெருங்கி நெருங்கிவர நாங்கள் முதலில் திருநகரில் இருந்து இடம்பெயர்ந்து தர்மபுரத்திற்குச் சென்றோம். அங்கு ஒரு காணியில் தற்காலிக கூடாரம் செய்து இருந்தோம். மலசலகூடவசதிகள், சுத்தமான தண்ணி ஒன்றும் இருக்கவில்லை.மாரிமழையில் எமது கூடாரம் அடித்துச் செல்லப்பட்டது. இரண்டு நாட்கள் இரண்டடித் தண்ணியில் வாழவேண்டி ஏற்பட்டது.அத்துடன் ஒருவாறாக கடந்த டிசம்பல் நடந்த ழுஃடு பரீட்சைக்கு தோற்றினேன். தர்மபுரம் பாடசாலையில் பரீட்சை எழுதினேன். நல்ல பெறுபேறு வரும். உயர்தரத்தில் விஞ்ஞானம் படித்து டொக்டராக வேண்டும் என்ற எண்ணம் இன்னும் உள்ளது.
யுத்தம் பரந்தனையும் தாண்டி தர்மபுரம்வரை வர நாங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து விசுவமடுவிற்கு வந்து சேர்ந்தோம்.அப்பாவின் நண்பரொருவன் காணியில் தற்காலிக கூடாரமமமைத்து நானும் தங்கைமார் இருவரும் அம்மா, அப்பாவுடன் அதில் இருந்தோம்.
பெப்ரவரி 10ஆம் திகதி கடுமையான ஷெல் வீச்சு ராணுவம் விசுவமடுவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. வெட்டிய பங்கரிலும் நீர் நிறைந்ததால் அதனுள் இருக்க முடியவில்லை. மதியம் ஒரு மணியளவில் பங்கரில் இருந்து வெளிவந்தபோதுதான் இந்தப் பயங்கரம் ஏற்பட்டது.எங்கிருந்தோ வந்த ஷெல் நேராக எங்கள் கூடாரத்திற்கு மேல் விழுந்து வெடித்து எங்கும் அழுகுரல் இரத்த வெள்ளத்தில் நான் கிடந்து முனகினேன். என்னால் எழுந்து நடக்கவும் முடியவில்லை. பக்கத்தில் எனது சகோதரிகள் எதுவித சத்தமும் இன்றிக் கிடந்தார்கள். அப்பாவுக்கு மட்டும்தான் காயமில்லை. அவர் என்னை அழுது அழுது ஒப்பாரியுடன் தூக்கியபோது எனது இரண்டு கைகளும் எனது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. அவற்றை அசைக்க முடியவில்லை. வலது கையின் பெருவிரலை மட்டுமே என்னால் அசைக்க முடிந்தது.மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் நான் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, மறுநாள் கண்விழித்தபோது எனது உலகே இருண்டிருந்தது. நான் உயிருக்குயிராய் நேசித்த இரண்டு தங்கைகளும் செல்லினால் செத்து விட்டார்கள்.
அவர்களை அந்த பங்கரிலேயே அப்பா போட்டுப் புதைத்துவிட்டு, காயப்பட்ட என்னையும், அம்மாவையும் புதுக்குடியிருப்பிற்குக் கொண்டு வந்தார். எனது இரண்டு கைகளும் சத்திர சிகிச்சையால் அகற்றப்பட்டு, உடற் காயங்களிற்கு மருந்து போட்டு என்னை ஒருபக்கமும் அம்மாவின் வலதுகால் முழங்காலிற்கு கீழாக நீக்கப்பட்டு அம்மா எனக்கருகிலும் போடப்பட்டிருந்த இந்த அவலத்துடன் நாங்கள் செஞ்சிலுவைச் சங்க கப்பலில் ஏற்றப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் ஒரு வாரம் வரை பராமரிக்கப்பட்டு பின் எங்களை மன்னார் வைத்தியசாலைக்கு அனுப்பினார்கள்.
இப்போது எனது வாழ்க்கையே இருண்டு விட்டது. டொக்டராக வேண்டும் என்ற கனவு இப்போதும் இருக்கிறது.
செயற்கைக் கைகளுடன் நான் படிக்கலாமா டொக்டர்? எனக்கு உதவி செய்யுங்கள்.
வன்னிக் கதைகள் என்ற தலைப்பில் வைத்திய நிபுணரும் யாழ்.பல்கலைக்கழ உள மருத்துவத்துறைப் பேராசிரியருமான தயா சோமசுந்தரம் எழுதிவரும் பத்தியின் ஒரு பகுதிநன்றி:
வீரகேசரி

14 comments:
நம்பிக்கையூட்டும் படைப்பு
பாவப்பட்ட ஜென்மங்கள், படித்து வருத்தப்பட மட்டுமே செய்ய முடிந்த ஜென்மங்களாய் நாம், வேறு என்ன சொல்ல :-(
போர்ச் சூழ்நிலையில் ஒரு தனிமனிதனின் உணர்வுகளை அப்படியே படம் பிடித்து காட்டியது போல் இருக்கு./ நிலாக்கா பகிர்வுக்கு நன்றி....
மனதை உலுக்கி விட்ட பதிவு... கண்களில் நீர்.....
நம்பிக்கையூட்டும் படைப்பு.
படித்து விட்டு வருகிறேன்..
போரின் கொடூரத்தை உணர்ந்த அந்த மனதில் போராட்ட குணம் ஒன்று இருப்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். படிக்கும்போதே மனதில் ஒரு சொல்லமுடியாத சோகம்..இதை மட்டுமே நம்மால் தர முடிவதை நினைத்து வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.
பகிர்வுக்கு நன்றி!
கலங்க வைக்கும் பதிவு ...அக்கா
கடும் சோகம்!
நல்லது நடக்கட்டும்
//இப்போது எனது வாழ்க்கையே இருண்டு விட்டது. டொக்டராக வேண்டும் என்ற கனவு இப்போதும் இருக்கிறது.
செயற்கைக் கைகளுடன் நான் படிக்கலாமா டொக்டர்? எனக்கு உதவி செய்யுங்கள்.//
யாருக்கும் வர வேண்டாம் இந்த நிலை.
நம்பிக்கை வரிகள்..
நம்பிகையூட்டும் மிக நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
படித்து மனதிற்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. இந்த நிலை யாருக்கும் வர வேண்டாம்..!
உங்கள் படைப்புகள் மிக அருமை.
Post a Comment