Followers

Monday, March 14, 2011

இடைவெளிகள் .

இடைவெளிகள்  

நீண்ட நாட்களாக ஒரு சிரிப்பு பதிவு போடணும் என்று ஆசை .அதிகம் சோகம் கலந்த பதிவுகள் போடுவதாகவும் ஒரு செல்ல கண்டனம். சரி இதை   பகிர்வோம்,   என விழைகிறேன். 

 ஈழத்து  போரினாலும் பொருளாதார தேவை நிமித்தமும  பலர் புலம்பெயர்ந்தனர். அந்த வகையில் ராஜசேகரன் கனடா நாட்டுக்கு மேற்படிப்பின் நிமித்தம் புலம் பெயர்ந்தான். தாயகத்தில் மனைவி மேகலாவும் குழந்தை (ஆறுமாதம் ) அபிசேக் கையும் பிரிய வேண்டியதாயிற்று . காலபோக்கில் ராஜசேகரன் கல்வி  நிலையில் உயர்ந்து  தனக்கென ஒரு தொழில் தேடிக்கொண்டான். குடிவரவு முறைப்படி  மனைவி மேகலாவும் குழந்தை அபிஷேக் உம் நான்கு வருடங்களின் பின் தந்தையுடன் இணைந்து  கொண்டனர். அவர்கள் ஒரு கோடை விடுமுறையின் போது நாட்டுக்கு வந்தனர். இங்கு புரட்டாதி  மாதம் பள்ளி தொடங்கும் காலம் . அபிக்கு நான்கு வயது முடிந்து இருந்ததால். அவனை பாலர் பாடசாலையில் சேர்த்தனர் . அவனும் நன்றாக் பள்ளி செல்ல விருப்பம் கொண்டவன். ஒரு தவணை முடிந்து அடுத்தவ வரடம் பங்குனி மாதம் ஆரம்பமாகியது. குழந்தையின் தேவைகளை கவனிக்க் வேண்டியிருந்ததாலும் , நாட்டின் நடை முறைகளை பழக வேண்டியிருந்ததாலும். மேகலா  பகுதி நேரம் ,   ஆங்கில் வகுப்புக்கு சென்று கொண்டிருந்தாள்.  தாயகத்தில் சில  இடையூருக ளால் ஆங்கில்க் கலவி தடைபட்டது . போதிய அறிவு பெற முடியாததாய் இருந்தது. இங்கும் பள்ளி முடிந்து அபியை போய் கூடிவரவேண்டியதாயிர்று . பள்ளி அண்மையி லி ருந்த்தால் பஸ் போக்குவரத்தும் கிடைக்கவில்லை
.இங்கு பன்னிரு வயதுக்கு கீழ் பட்ட  குழந்தை கள் தனித்து அனுமதிக்க் மாடார்கள்.பெற்றவர் பாதுகாவலர் துணையுடன் தான் அனுமதிப்பார்கள். 

அபி வீடுக்கு வந்ததும் மத்திய உணவை முடித்து. தாயார் பள்ளியில் நடந்ததை விசாரித்தார். வீட்டுப் பாடங்களும்  உடனுக்குடன் செய்யும் ஆவல் உள்ளவன். அன்று அவரது ஆசிரியர் ...உலர் வலய நாடுகள்,  கால நிலை போன்றவற்றை விளக்க படுத்தி இருந்தார் . ( tropical country and   seasons ). அந்த வார இறுதி நாளுக்கு (வெள்ளி )   tropical  உலர் வலைய நாட்டு  ஆடைகள் அணிந்துவ்ரும்படி கூறியிருந்தார். குழந்தை ..தனக்கு தெரிந்த முறையில் tropical country டிரஸ் அம்மா .........என்று சொன்னான். தாய்க்கு விளங்க வில்லை .  ஹவாய் என்று சொ ல்லி பார்த்தான்  ( இங்கு ஹவாய்  கடற்கரை  சுற்றுலாவுக்கு பெயர் போனது.  இளம் அழகிகள் கழுத்தில் மாலை,  இடுப்புக்கு கலர் கலராக் ஆடைகள்,  தலையில் தொப்பி வைத்து ஓர் வித் நடனம் ஆடுவர். ) இடுப்பில் கை வைத்தது நெளித்து ஆடிக் காட்டுகிறான். மகனின் நடனம் பார்த்து தாய்க்கு சிரிப்பு ...விழுந்து விழுந்து சிரிக்கிறார். எஸ் அம்மா ....மேலே அறைக்கு ஓடிபோய் .தலையில்  தொப்பி ,கழுத்தில் மாலையுடன் , கட்டை காற் சட்டை போட்டு வருகிறான். இப்பொது  ஓரளவு  தாய்க்குப்புரிந்த்து. .

மாலையில் அயல வீட்டு  சிநேகிதியின் மகள் இவனது பள்ளியில்  படிக்கிறார்.  அவர் இவனுடன் விளையாட வருவார் . நம் மேகலா தன் சந்தேகத்தை  கேட்டு தெளிகிறார். ஒரே சிரிப்பு . நானும் அந்த வீட்டுக்கு வார இறுதியில்  போய் இருந்தேன். நானும் சிரித்தேன். இந்தக் கதைக்கும் கரு கிடைத்தது. காலத்தின் கோலம் . தாயும் மகனும் ஒரு நாட்டுக்கு வருவது . தாய்க்கு முப்ப்து மகனுக்கு மூன்று வயது. குழந்தைகள் விரைவில் பிடித்து விடுவார்கள் அவர்களது ஆசிரியை ஆங்கிளத்தில் விளங்க படுத்த்வார். தாயும் பள்ளிக்கு பாஷை படிக்க வேண்டிய நிலை. மொழிப் பரீட்சயம் , நாடு பற்றிய அறிவு , ஒரே நேரத்தில் கிடைக்கிறது. குழந்தைகளுக்கு அவதானம் கூட . பெற்றவருக்கு ஆயிரம் பிரசினைகள். கலங்கமிலாத் பிஞ்சு உள்ளத்தில் விதைக்க படும் அறிவு விரைவில் பயன் தருகிறது. நானும் சிரித்தேன் நீங்களும் சிரிப்பு வந்தால் ஒரு வரி எழுதுங்கள். நன்றி . 

7 comments:

Yaathoramani.blogspot.com said...

சிரிப்பும் மட்டும் இல்லை
பல்வேறு சூழ் நிலைகளில்
நாடு விட்டு நாடு கடந்து செல்கிறவர்கள்
படுகிற அவஸ்தைகளும் கண்முன்
வந்து போனது நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

எம்மவருக்கு பார்த்திங்களா அக்கா எங்க போனாலும் ஒரு சிறப்பு இருக்கிறது.. ஹ..ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உண்மை தான் குழந்தைகள் வி விரைவில் ஆங்கிலத்தை பிடித்து விடுகின்றனர். ஆனால் நம்மால் முடியவில்லை.. இதே சூழ்நிலை எமது வீட்டிலும் சில நேரம் நடக்கும் நாம் ஆங்கிலத்தில் பேசினால் எமது உச்சரிப்பை தவறு என சுட்டிக்காட்டுவா என் பொண்ணு.

'பரிவை' சே.குமார் said...

Nalla nagaichchuvai pakirvu...

நிலாமதி said...

என் தளம் வந்து கருதுப் பகிர்ந்த் ரமணி ஐயா , மதி சுதா , தோழி பிரஸா , சே குமார். உங்களுக்கு என் நன்றிகள்.

arasan said...

அக்கா நல்ல பகிர்வு ...
இன்றைய நிலையை கூறி இருக்கின்றீர்

athira said...

நானும் நிலவில் கால் பதித்து சிரித்துவிட்டும் போகிறேன்.... தலைப்பில் புள்ளி மிஸ்ஸிங்கோ? கவனியுங்க...