பால நாயகியும் ராஜ குமாரனும் இணை பிரியாத தம்பதிகள்.அவர்களது மகிழ்வான் வாழ்வின் பயனாக் இரு ஆண்களும் இரு பெண க்களுமாய் நான்கு குழந்தை கள் .வாழ்வு சந்தோஷமாய் தான்போனது அந்த சம்பவம் நடக்கும் வரை . ராஜகுமாரன் அவ்வூரின் கிராம சேவை அலுவலராக பணியாற்றி கொண்டிருந்தார். .அவ்வூர் மக்களின் முகவரிக் கணக்கு அறிக்கைகள் பங்கீட்டு புத்தக பதிவு போன்றவை அவரிடம்தான் இருந்தன . அது ஒருபோர்க்காலம். அவரிடம் இரவு நேரங்களில் படை அதிகாரிகள். சில இளைஞ்சர்களின் விபரம் கேட்க அவரிடம் வருவதுண்டு ...மனச சாட்சிப் படி விபரங்கள் கொடுத்தாலும் சமுதாய இளையவர்களின் உணர்வுக் கேற்ப சில மாறுதல்களும் செய்து கொடுப்பார். அவ்வூர் பையன்களைக் காப்பாற்ற . படை யினர் கையில் சிக்கினால் பிறகு மரண காண்டம் தான். காப்பரண் களில் வைத்துச் சித்திர வதையில் உயிர் போக வதைத்து விடுவார்கள்.இதனால் சில இளைய வர்களுக்கும் ராஜகுமாரன் மீது ஒரு சந்தேகப் பார்வை. தங்கள் விபரங் களைக் கொடுத்து . விடுகிறார் என்று
. சில மாதங்களாக் மனைவி பால நாயகி சொல்லி பார்த்தாள்.அவரும் உடன் பட்டு தன் வேலையை ராஜினாமாச் செய்து ...வெளி நாடொன்றுக்கு சென்று விடார். போர்க் காலம் மீண்டும் உக்கிரமானது .தலை நகரில் இருந்து படையினர் பல வேறு கனரக வாகனக்களில் உம் ஆகாய விமான இறங்கு மூலமும் கிராமத்துக்குள் இறக்க பட்டனர். அவர்கள் மனித ரத்தம் காணும் வெறி கொண்டவர்கலாக் காணப்பட்டனர் . ஊர் மக்கள் ஊரை விட்டு அயல ஊருக்கு குழந்தைகள் முதியவவர்களைக் காவிக்கொண்டும் தள்ளு வண்டியில் ஏற்றிக் கொண்டும் இடம்பெயர்ந்தனர்.
பால நாயகியும் நான்கு குழந்தைகளையும் கொண்டு வயதான் தாய் தந்தையருடன் அயல கிராமத்துக்கு சென்றாள் .அங்கும் பலத்த் சிரமங்களுக்கு ஆளானாள். போதிய பணம் இல்லை. வெளிநாட்டில் இருக்கும் கணவனுடனான தொடர்பு இல்லை. ஒரு வாறு குழந்தைகள் உள்ள பெண்கள் தலை நகருக்கு செல்ல அனுமதிக்க் பட்டனர். வயதான் தாய் தந்தையரை ஒரு மாமன் முறையான் உறவின்ரிடம் பாரம் கொடுத்து தன் பயணத்தை தொடங்கினாள் அங்கு சென்றதும , ஒரு வழியாக கணவனின் தொடர்பு கிடைத்தது தலை நகரில் வீடு வாடகைக்கு எடுத்தது தங்கினர்.அகதியாக் சென்ற ராஜகுமாரனுக்கு அங்கு போதிய சலுகை கிடைக்கக் வில்லை. அகதி நிலை ஏற்றுக்கொள்ள் கால தாமதமாகியது வருடங்கள் உருண்டோடின.
கனடா நாட்டில் உள்ள ஒரு மாமன் முறை உறவினர். இவர்களை அங்கு எடுக்க ஒழுங்கு செய்தார். ஒரு சில வாரங்களில் அவர்கள் அங்கு சென்று விட்டனர் .துன்பம் வந்தாள் தொடர்ந்து வரும் என்பார்கள் அதே போல் இன்பங்களும் ஒன்றை தொடர்ந்து ஒன்று வரும் என்பார்கள். அதே வருடம் ராஜகுமாரனுக்கும் அந்நாட்டு வதிவிட அந்தஸ்து கிடைத்தது ,. மனைவி குழந்தைகளைக் காண கனடா நாட்டுக்கு குறுகிய கால விசாவுடன் வந்தார். அவர்கள் வாழ்வு வளமாகியது . மீண்டும் அந்நாட்டு அனுமதி யுடன் குடும்ப் இணைவு மூலம் அவருக்கும் அங்கு வதிய அனுமதி கிடைத்தது
காலங்களும் விரைவாய் சென்றது . ராஜாகுமாரனுக்கு சற்று புகைக்கும் பழக்கம் வெளி நாடு வந்த பின் ஆரம்பமாகியது. ஒரு நாள் தொடர் இருமல் வரவே வைத்யாரிடம் சென்ற போது ஒரு துக்கமான சேதி கிடைத்தது. அவருக்கு சுவாசப்பை புற்று நோய் ஆரம்பமா கியிருந்தது . மலர்ச்சி பாதையை நோக்கி சென்ற வாழ்வு மீண்டும் திசை மாறியது ....மூன்று வருடங்கள் போராடிய அந்த மனிதரின் வாழ வின் இறுதி நேரம்................மூத்தவன் யுனியில் நுழைந்து இருந்தான் இரண்டாவது மகன் உயர் கல்லூரி ரியிலும் , மகள்கள் இருவரும். ஆரம்ப பாடசாலயில் எட்டாம் வகுப்பிலும் படித்துக் கொண்டு இருந்தனர். . கணவன் வழி உறவினர்களும் அவளுக்கு உதவியாய் இருந்தனர்.இறுதி நேரம் உறவினர் நட்புகள் அடிக்கடி வைத்ய சாலை சென்று நலம் விசாரித்து வந்த்னர். ஒரு ஞாயிறு அதிகாலை ஒரு வித உணர்வு இவளுக்கு தோன்றியது .இரவுகளில் அங்கு வைத்திய சாலயில் தங்க விட மாடார்கள் வேகமாக தன் கடமைகளை முடித்தவள் ...இளைய மகள்கள் இருவரையும் கூடிக்கொண்டு வைத்திய சாலை சென்றாள்.தாதியர் மருந்து ஏற்றிக் கொண்டு இருந்தனர்.வைத்தியர் காலயில் வந்த போது இன்னும் இரண்டு நாட்களே உயர் வாழ்வார் என் சொல்லி சென்றதாக் சொனார்கள். மனம் சோகத்தால் நிறைந்தது , மகள் கள் இருவரும் காலடியில் இவள் அவரது தலைய்னைப்பக்க்மாய் காதுக்குள் சந்தோசமாய் செல்லுங்கள் . உங்கள்கடமைகள் அத்தனயும் நிறைவேற்றுவேன் என்றாள். சோகத்திலும் துவளாத் அந்த வீரப்பெண் சில நொடிகளில் அவரது .முகத்திலே ஒருவித ஒளி கண்களிலே பிரகாசம். இவளது கைகளைபிடித்திருந்தா அவரது கை சோர்ந்தது
தாதி வந்து வயர் களைக் கழற்றி ..முகத்தை துணியால் மூடினாள்.உடன் தொலைபேசியில் உறவுகளுக்கு அழைத்து சேதி சொல்லி மற்றிய ஆயத்தங் களை தொடர வீடு சென்றாள். எல்லா இறுதி நிகழ்வுகளும் அமைதியாய் நடந்தேறியது உறவுகளும் பிறந்து விடைபெற்றனர். இவளும் நான்கு குழந்தைகளும் தனித்து விடபட்டனர். பிள்ளிகளின் பொழுது பள்ளி வகுப்புக்கள் என் போயின இரவுகள் இவளதுபடுக்கையை கண்ணீரால் நனைத்தன. பிறந்த தினம் இறந்த தினம் அவருடன் வாழ்ந்த வாழ்வு அத்தனையும் ஒரு வித புகை போல். விண்ணை நோக்கி செல்கிறது. அன்புள்ள் தம்பதியர் உடலால் பிரியினும் உள்ளங்களும் நினைவுகளும் பிரிவதில்லை.அது ஒரு பிரிந்தும் பிரியாத வரம்.
14 comments:
ஒரு நீண்ட காவியத்தை
ஒரு பத்திக்குள் மிக சிறப்பாக
அடக்கிய எழுத்துத்திறன் மட்டும் இல்லை
அந்த உணர்வையும் உணர வைத்ததே
படைப்பின் சிறப்பு
உணர்வு பூர்ணமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
முகத்திலே ஒருவித ஒளி கண்களிலே பிரகாசம். இவளது கைகளைபிடித்திருந்தா அவரது கை சோர்ந்தது
...so sad!!!
சோகமான ஒரு கதை மூலம் உண்மை காதலின் அர்த்தத்தை புரியவைதுளீர்கள், வழமை போல் எழுத்துநடை மண் மனம் வீசுகிறது
வாழ்த்துக்கள் உங்கள் கற்பனா சக்தியும் உண்மை சம்பவமும் சேரும் போது ஒரு வித உணர்வுள்ள கதைகள் பிறக்கிறது
Yathavan
சோகமான கதை உணர்வுகளுடன், கற்பனையையும் சேர்த்து எழுதியிருக்கீங்க அக்கா பாராட்டுக்கள்
உணர்வு பூர்ணமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்ஒரு வித உணர்வுள்ள கதை...
மனம் வலிக்க வலிக்கச் சொன்ன ஒருவரின் வாழ்வு.ஏன் பிறப்பும் இறப்பும் நடுவில் வாழ்வும் என்று மனம் வெறுக்கிறது !
என் தளம் வந்த உறவுகள் ரமணி ஐயா.......... யாதவன் ........ஹேமா ....போளூர் தயா நிதி
...சித்ரா உங்களின் ஊக்க சக்தி என்னை மேலும் ஆக்கு விக்கும்.
Nicely written. It touched a lot. Thanks and wishes.
சோகமான ஒரு கதை மூலம் உண்மை காதலின் அர்த்தத்தை புரியவைதுளீர்கள்...
தொடரும் உங்கள் பதிவுலகப் பணி
இவ்வாண்டும் சிறப்பாகத் தொடர
எனது இதயம் கனிந்த
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பிரிந்தும் பிரியாத வரம் சோகம் சுமந்த கதை.
VERY NICE
என்ன ஆச்சு
பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு
அடுத்த பதிவை
ஆவலுடன் எதிர்பார்த்து...
வெறும் கதைகள் என்பதற்கப்பால் நம்மவர் வாழ்வியலின் பாதுகாக்கப்படவேண்டிய ஆவணங்களாகப் பதியப்படும் உங்கள் படைப்புக்கள் தொடர வாழ்த்துக்கள்.
அம்பலத்தார்
Post a Comment