நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Thursday, July 23, 2009

.இன்பம் எங்கே .....இன்பம் எங்கே.....

இன்பம் எங்கே.....இன்பம் எங்கே

மழலைக்கு தாயின் பால்முட்டி இன்பம்
சிறுமிக்கு பொம்மை மீது இன்பம்
மாணவருக்கு நல்ல பரீட்சை முடிவில் இன்பம்
பல்கலை மாணவருக்கு ராகிங் இன்பம்

மனம் கொண்ட மனையாளுக்கு பூவும் பொட்டும்
பட்டு சீலையும் நகை நட்டும் இன்பம்
கணவனுக்கு /காதலனுக்கு மனிவியின் /காதலியின்
(******** ) விரும்பியதை போட்டு வாசிக்க

தந்தைக்கு மக்கள் சான்றோர் எனக் கேட்பது இன்பம்
தாய்க்கு மக்களின் நல்ல எதிர்காலம் இன்பம்
பேரர்களுக்கு பேரப்பிள்ளைகள் இன்பம்
வயோதிபத்தில் வாலிபத்தை அசை போட இன்பம்

தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் ஈழ தாயகம் இன்பம்
களத்தில் எனக்கு பதில் வருவது இன்பம்
மனிதருக்கு இன்பத்தை தேடி தொலைக்கும் வாழ்வு
பாடையில் போனபின் நித்திய இன்பம்

6 comments:

VISA said...

//தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் ஈழ தாயகம் இன்பம்//
கண்கள் மூடி சிந்திக்க வைத்த வரி.தொடர்ந்து எழுதுங்கள். பிளாக் படிக்க சிரமமாக உள்ளது பான்ட் மாற்ற முட்ந்தால் சிறப்பு

நிலாமதி said...

நன்றி விசா ......உங்கள் வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும். தொடர்ந்து இணைந்து இருங்கள். நட் புடன் நிலாமதி

கீத் குமாரசாமி said...

நெசம்மாவே இன்பமா இருக்கு உங்க கவிதை

சந்ரு said...

நல்ல கவி வரிகள் நன்றிகள்... தொடருங்கள்..

நிலாமதி said...

கீத் உங்கள் வரவுக்கு நன்றி.

நிலாமதி said...

சந்துரு உங்கள் வருகைக்கும் பாராடுக்கும் நன்றிகள்.
இணைந்து இருங்கள்.