நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Wednesday, July 22, 2009

சின்ன சின்ன ......ஆசை

சின்ன சின்ன ......ஆசை

வானத்து நிலவை பிடித்துவிட ஆசை
பஞ்சு முகில் மீது சவாரி செய்ய ஆசை
பூங் காற்று போல உலகம் சுத்தும் ஆசை
மழைத்துளியை மாறி தாகம் தீர்க்க ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
தமிழ் ஈழ மண்ணில் பிறந்து விட ஆசை
வானத்தில் சிட்டாய் பறந்துவர ஆசை
அன்னையின் மடியில் தூங்கி விட ஆசை

முற்றத்து மண்ணில் விளையாட ஆசை
துள்ளிவரும் மானை பிடித்து விட ஆசை
சவர்க்கார குமிழி பிடித்து வர ஆசை
நீலக்கடல் நீரில் நீந்தி குளிக்க ஆசை

படித்த பள்ளி எண்ணி நினனவு மீட்க ஆசை
பனைமர நுங்கும் ,பழமும் தின்ன ஆசை
மாமரம் ஏறி காய் பறிக்க ஆசை
முக்கனியும் சுவைக்க மீளவும் ஆசை ....

5 comments:

கீத் குமாரசாமி said...

நல்லாருக்கு

சப்ராஸ் அபூ பக்கர் said...

///துள்ளிவரும் மானை பிடித்து விட ஆசை
சவர்க்கார குமிழி பிடித்து வர ஆசை////

எனக்கும் உள்ள அதே ஆசைகள் தான் இது.....

அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள், தொடர்ந்தும் எதிர் பார்க்கிறோம்......

Anonymous said...

நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க

நிலாமதி said...

சப்ராஷ் அபூ பக்கர் ...........உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி ...........

இளங்கவி said...

நிலா அக்கா

உங்கள் சின்னச் சின்ன ஆசைகளை மிகவும் ரசித்தேன், இவைகளெல்லாத்தையும் நாங்கள் தொலைத்து பல வருடங்களாகிவிட்டது, இனி எப்போது காண்போமோ தெரியாது....