நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Thursday, July 23, 2009

மனங்களிலே பல ....நிறம் ..கண்டேன்

மனங்களிலே பல ...நிறம் ..கண்டேன்

உதிரத்தை பால் ஆக்கி வளர்த்தது ஒரு உள்ளம்
தோல் மீது போட்டு ,மார்பிலே அனைத்து
உயர் கல்வி தந்தது ஒரு உள்ளம்
முன்னும் பின்னும் காவலுக்கு ஒரு உள்ளம்.

அழகாய் அணிவித்து பார்த்து ஒரு உள்ளம் ...
விழியில் நுழைந்தது ..உயிரில் கலந்தது ஒரு உள்ளம் .
மழலை சிரிப்பால் உள்ளம் கவர்ந்தது ஒரு உள்ளம் ,
நடுக்கடலில் மூழ்கடித்தது ஒரு கல் நெஞ்சம் .

புண் ஆக்கி வெந்நீர் ஊற்றி கண்ணீர் பார்த்து
ஒரு தலை கவிழ்த்தது ஒரு உறவு ....
இத்தனைக்கும் மத்தியில் போராடும் ஒரு உள்ளம்
அது கண்ணீரில் நீராடி கரையாமல் காப்பது ஒரு மனது .

போராடி போரராடி ...மண்ணடி சேர்வது எப்போது .

3 comments:

சந்ரு said...

உங்கள் கவி வரிகள் நன்றாக இருக்கிறது தொடருங்கள் வாழ்த்துக்கள்...

இது நம்ம ஆளு said...

விழியில் நுழைந்தது ..உயிரில் கலந்தது ஒரு உள்ளம் .
மழலை சிரிப்பால் உள்ளம் கவர்ந்தது ஒரு உள்ளம் ,
நடுக்கடலில் மூழ்கடித்தது ஒரு கல் நெஞ்சம் .

போராடி போரராடி ...மண்ணடி சேர்வது எப்போது .

அருமை!

நிலாமதி said...

வணக்கம் இது நம்ம ஆளு ..........தங்கள் வரவுக்கும் கருத்துபகிர்வுக்கும் நன்றி ...