Followers

Wednesday, August 12, 2009

உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் ( தொடர்ச்சி ) ...

உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் ( தொடர்ச்சி ) .......

நித்திலா என்ன செய்வாள் . ?.....அவள் இபோதெலாம் வகுப்புக்கு போவதில்லை ..பெற்றோர் தடுத்து விட்டனர்.கார்த்திகையும் வந்தது . மாமன் மகன் இடையில் வீட்டுக்கு வந்த போனான் . தலைநகரம் சென்று
கடவுசசீட்டு பெறுவதற்கான ஆயதங்களுடன், நிதிலாவை மாமன் மகனுடன் அனுப்பினர் , இது அவளுக்கு மனம் விட்டு கதைக்கும் ஓர் உறவாக இருந்தது . அவள் மனதை தொடக்கம் முதல் அழுகையுடன் சொல்லி முடித்தாள். சில நாட்களாக ஆதவனும் கடையில் தென் படுவதில்லை . அவனது தம்பி வியாபாரத்தை கவனித்தான். ஒரு வாரம் கழித்து நித்திலா கடவு சீட்டுடன் ஊர்வந்து சேர்ந்தாள் . வந்ததும் மாமன் மகன் தனக்கு கலியாண" பலன் "பார்த்ததாகவும் ...அடுத்த வருடம் தான் சரிவரும் என்றும் தெரிவித்து, மீண்டும் அவன் வெளிநாடு புறப்படான். ஒரு சில வாரங்களில் ஆதவனும் வெளிநாடு சென்று விட்டதாக கதை வந்தது நித்திலாவின் பெற்றார் நிம்மதியாக இருந்தனர்.

ஒரு நாள் வாயிலில் கடித்க்காரனின் மணிஒலி கேட்க சின்னையர் போய் வெளிநாட்டு கடிதம் மகள் பெயருக்கு வந்திருக்க இதை படித்து சொல் மகளே என் மருமகன் என்னவாம் என்றார். நித்திலா அழுகைகிடையில் ..விக்கி விக்கி அது ஆதவனுடையது என்றும், தாங்கள் கொழும்பில் பதிவு திருமணம் செய்ததென்றும், மாமன் மகனே சாட்சி என்றும் வீட்டில் பிரச்சனை வந்தால் தன்.....பெற்றோருடன் போய் வசிக்கும் படியும் எழுதியிருந்தார் . சின்னையரும் மனைவியும் ..குய்யோ....முறையோ, வெளிக்கிடு வீட்டை விட்டு
என்று ....ஏசினர் ...விடயம் ஊரில் பரவ ...ஆதவனின் சித்தி தன்வீட்டில் கூட்டிச்சென்று ..வைத்திருந்தார் .

வருடங்கள் இரண்டு உருண்டு ஓடின . ஆதவன் வந்து ஊரறிய ..அவ்வூர் கோவிலில் தாலி காட்டி , அழைத்து வந்தான் தன் வீட்டுக்கு . நித்திலாவின் பெற்றவர்கள் வரவே இல்லை. ... கால ஓட்டத்தில் அவள் ஒரு ஆண் மகவை பெற்று , தந்தைக்கு தெரியாமல் தாயை சென்று பார்த்து வருவாள் . காலப்போக்கில் ஊரில் படையினரின் ஆக்கிரமிப்பால் அவளும் பிள்ளையுடன் புலம் பெயர்ந்துவிட்டாள் ..

கொழும்பில் உள்ள தாய் தந்தையர் அவளுக்கு கடிதம் மேல் கடிதம் .
..ஏழு வயது பெயரனை பார்க்கவேண்டும் என்று .... நித்திலாவின் மனம் என்றும் அவன் வாழும் ஆலயமாக, தன் மனதுக்கு துரோகம் செய்யாத, புனிதவதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்

( கதை எப்படி உண்மை கலந்த கற்பனை .)


வாசகர் பின்வரும் கேள்விக்கு விடை சிந்தியுங்கள் .....

மாமன் மகன் செய்தது சரியா?
நித்திலா செய்தது சரியா ?
ஆதவன் செய்தது சரியா ?

நித்திலாவின் தாய் தந்தை செய்தது சரியா ,கலியாணத்தின் போது ?







4 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

ஏப்படியோ நித்திலா சந்தோஷமாக இருந்தால் சரி.


ஐம்பது சதவீதமான பெண்கள் காதலிப்பவனை கைபிடிப்பதில்லையே.

என் அனுபவத்தில் சொன்னேன்.

கவி அழகன் said...

நல்ல் கதை
உண்மைக்கதை
நடந்த கதை
நெஞ்சை தொட்ட கதை
வாழ்த்துக்கள்
இன்னும் எழுதுங்கள்
வாசிக்க நாங்கள் தயார்

நிலாமதி said...

யோ உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.

நிலாமதி said...

யாழவன்........உங்கள் வருகைக்கும் கருத்து பகிவுக்கும் என் பதிவுகளை காண காத்திருக்குமுங்கள் அன்புக்கும் நன்றி.