ஈன்ற பொழுதில் .............
அன்று மாலை ராகவனும் மனைவி சாரதாவும் குட்டி பாப்பா , அனு என்கிற அனுஷ்காவும் அன்று மாலை நடக்க இருக்கும் ஒரு பிறந்த நாள் விழாவுக்காக ஆயத்தமாகி கொண்டு இருந்தனர். இங்கு அனுவை பற்றி சொல்லியே ஆகவேண்டும் . ராகவனுக்கு முதல் பெண் குழந்தை...அவன் அம்மாவுக்கு முதல் பெற்றது பெண்ணாக இருந்ததில் சற்று வருத்தம் தான் . இருபினும் ராகவனுக்கு அதிலெல்லாம் , கவலையில்லை . வேலை முடிந்து வரும் அப்பாவை காண ஓடோடி வருவாள். காலில் சொக்ஸ் ( காலுறை) கழற்றுவது , அம்மாவின் தேநீரை அவன் பருகி இடயில் ஒரு மிடறு பங்கு போட்டு கொள்வது என்று அவன் உலகமே அவள் தான் . நல்ல குறுகுறுப்பான பெண் குழந்தை . வேலையில் சற்று தாமதமானாலும் , அவள் இரவு படுக்கும் நேரமானாலும் தந்தையின் மோட்டார் பைக் சத்தம் கேட்டால் துள்ளி ஓடி வாசலுக்கு வந்து விடுவாள் "அனுக்குட்டி "என்று அவன் அழைத்தால் அவன் வேலை களையெலாம் பறந்து விடும் ..
பாலர் வகுப்பு படித்து கொண்டிருந்தாள் . நான்கு வயது எட்ட இன்னும் சில மாதங்கலே இருந்ததன . பாடசாலயில் சொல்லிக்கொடுக்கும் சிறு பாட்டுக்களை அம்மா தூங்க வைக்கும் போது பாடிக்காட்டுவாள். அவர்கள் தாயாராகி விடவும் , அவர்களை அழைத்து செல் வாடகை வண்டி , வாயிலுக்கு வரவும் சரியாக இருந்தது. அங்கு சென்றதும் அனுஷ்காவுக்கு ஒரே கொண்டாடம் . சோடனைகள்... அவளை போலவே அம்மா அப்பாவுடன் குழந்தைகள். அன்று பிறந்தா நாள் கொண்டாட இருப்பவர் ஒரு பாட்டி தன எழுபதியிந்தாவது பிறந்த நாள். அவருக்கு விருப்பம் இல்லாமலே பேரார்களால் ஆயத்தம் செய்ய பட்டது. சிற்றுண்டி பரிமாறபட்டது .சிந்தாமல் அழகாக் சாப்பிட்டாள். ராகவன் விருந்தின் போது மருந்தாக் சில குடிவகை எடுப்பார். அதனால் தான் அவர்கள் வாடகை வண்டியில் வந்தனர்.மாயா ஜால வித்தைக்காரன் , வித்தை காடினான். கை கொட்டி ரசித்தாள். சங்கீத கதிரை போன்ற , போட்டி விளையாட்டுக்களும் இருந்தன . பாட்டிக்கு கொள்ளை சந்தோசம். இறுதியாக இரவு உணவு உண்பதற்கு முன் ஒரு சிறு போட்டி .........சிறுவர்கள் பாட்டுப்பாடி மகிழ்விக்க வேண்டும். சிலர் பிகு பண்ணினார். சிலர் வெட்க பட்டனர். சிலரை இழுத்து வந்து பாட வைத்தனர். அவர் அமைந்துள்ள வரிசையில் , அனுஷ்காவின் முறை வந்தது. தாய் சாரதா .........அவளை பாடிக்காட்டும்படி , கேட்க , கம்பீரமாக் எழுந்து சென்றாள். .எல்லோரும் அனுக்குட்டியை பார்த்து கைதட்டினார்கள். பாடினாள்.........
அப்பா வை போல இவ்வுலகில்
யாரோ உள்ளார் அன்புடையார் ...
காலும் கையும் சோராமல்
கருத்தாய் என்னை காத்திடுவார்
தட்டி தட்டி கொடுத்திடுவார்
தாலோ தாலோ தூங்கேன்பார். ...............
..சாரதாவுக்கு ஒரே ஆச்சரியம் . கடந்த முறை பெற்றார் தினவிழாவுக்கு பாடிய அம்மாவைப போல் என்ற பாடலை இவள் அப்பாவை போல் என்று பாடுகிறாளே என்று . ராகவன் சத்தம் கேட்டு ஓடோடி வந்து கட்டி அணைத்தான். குட்டி அனுஷ்கா எல்லோருடைய பாராட்ட யும் பெற்றாள். ........
.ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன மகளை .......
.பாடகி என் கேட்ட தந்தை. ..
Followers
Subscribe to:
Post Comments (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
என் இதயம் கவர்ந்தவளே கண்கள் கண்டதால் கவரபட்டதால் காதல் கொண்டதால் கருத்து ஒன்றி அதனால் இணைந்து கொண்ட இருவர் கருத்து வேறு பட்டாலும் ...
-
அஸ்தமனத்தில் ஓர் உதயம் ............. அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்க...
12 comments:
ஐ...நான்தான் பாஸ்ட் ....அழகான கதை....
அருமையா கதை சொல்லறிங்க நிலா அக்கா...
கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு....
குழந்தைகள் என்றாலே அழகுதான்....
அவர்களின் மழலை பேச்சு...ஆஹா....ஆனந்தம்....
சிறு சிறு கதைகள் முலம் பல பல விசயங்களை சுவாரசியமாக எழுதுறிங்க ..
தந்தை மகள் உறவை அழககா சொல்லி உள்ளிர்கள்..
வாழ்த்துக்கள் ..
வாழ்த்துக்கள்
ராஜ ராஜன் உங்க வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.......
யோ...........உங்க வரவுக்கு நன்றி......
//.ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன மகளை .......
.பாடகி என் கேட்ட தந்தை. .. //
ஆகா...அருமையான வரிகள்...
நல்ல சுவாரசியம் மிகுந்த கதை...வாழ்த்துக்கள்...
உங்கள் நடை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
க .பாலாஜி .....உங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி
ஜெஸ்வந்தி.உங்க வருகைக்கும் ஊக்கபடுத்துதலுக்கும் மிக்க நன்றிகள்.
விதைப்போம் அன்பை விருதுகள் மூலம்
http://maaruthal.blogspot.com/2009/09/blog-post_04.html
நன்றி
தரமான படைப்பாக உள்ளது பாராட்டுகள்
தியா உங்க வரவுக்கும் பதிவுக்கும் நன்றிகள். உங்கள் வரவு என்னை மகிழ்ச்சி படுத்துகிறது
Post a Comment