நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Tuesday, June 15, 2010

மண்ணில் வந்த மலர்களே

  .

தவமாய் தவமிருந்து
தாய்  உன்னை பெற்றவள் ,
மகிழ்வுற்ற காலத்தில்
என் இல்லம் தேடி வந்து
என்னையும் மகிழ்வித்த மலர்களே

என் விரல்கள்  பஞ்சு போன்ற
 உங்கள் பிஞ்சு விரல்கள் தீண்டுகையில்
என் உள்ளம் மகிழ்வால் மிஞ்சி விடும்
பூவொன்று மலர்ந்தது போல்
 கன்னங் குழிய சிரிக்கையில்
கவலை எல்லாம் மறைந்து விடும்

ஒன்றுக்கு இரண்டாய் பெண்
புஷ்பங்களை கொடுத்த
அந்த இறைவனின் கருணையை ,
என்ன வென்பேன் மனம் நிறைய
வாழ்த்துகிறேன் பிஞ்சுகளை  

நோய் நொடியின்றி சிறப்போடும்  
வளமோடும் நலமோடும் வாழ்க.
பல்லாண்டு,பாரிலே புகழ் பெற்று
ஈன்ற தாய்க்கும் ,  உறவினர்க்கும்
என்றும் மகிழ்ச்சி தங்குக.

குறிப்பு :    என் வீடில் உறவினர் வருகை ...
அந்த மகிழ்வால் எழுந்த கவி தா வரிகள்.

9 comments:

ஹேமா said...

கலா...அந்தச் சின்னக் குஞ்சுகளுக்கு உங்கள் வாழ்த்தோடு என் வாழ்த்தும் சேரட்டும்.

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள்

நிலாமதி said...

உங்களுக்கு நன்றி ..ஈரோடு கதிர் ....ஹேமா

Sangkavi said...

//ஒன்றுக்கு இரண்டாய் பெண்
புஷ்பங்களை கொடுத்த
அந்த இறைவனின் கருணையை ,
என்ன வென்பேன் மனம் நிறைய
வாழ்த்துகிறேன் பிஞ்சுகளை//

வாழ்க வளமுடன்...

seemangani said...

அந்த ரெட்டை தேவதைகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் ...

நிலாக்கா அதிரடி ஆரம்பம்...

விக்னேஷ்வரி said...

வாழ்த்துகள்.

நிலாமதி said...

சங்கவி .............சீமான்கனி ...விக்னேஸ்வரி ....உங்கள் வரவுக்கும்பதிவுக்கும் நன்றி

விஜய் said...

//என் விரல்கள் பஞ்சு போன்ற
உங்கள் பிஞ்சு விரல்கள் தீண்டுகையில்
என் உள்ளம் மகிழ்வால் மிஞ்சி விடும்
பூவொன்று மலர்ந்தது போல்
கன்னங் குழிய சிரிக்கையில்
கவலை எல்லாம் மறைந்து விடும்//

மிக அருமையான வரிகள் ....நல்ல எழுதறீங்க அக்கா

நிலாமதி said...

தம்பி விஜெய் ......... உங்கள் வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி .