Followers

Monday, September 13, 2010

அந்தஸ்த்து ...........



சின்ன வயதில் இருந்தே  பால குமாரனும் ஆனந்த ராஜாவும் நண்பர்கள்.ஆரம்ப பாடசாலை  முடித்து கல்லூரி   சென்று பின் பல்கலை கழகம் வரை  ஒன்றாகவே படித்தார்கள். பின்பு வேலை பார்க்கும் காலத்தில் பாலகுமாரன் ரயில்வேயிலும் ஆனந்த ராஜன் குடிவரவு குடியகல்வு நிலையத்திலும் பணிக்கு அமைந்தார்கள். இருப்பினும் தொலை பேசி மூலமோ மடல்கள் மூலமோ நட்பை தொடர மறப்பதில்லை. பருவ வயது அடைந்ததும் ஆனந்த  ராஜன் முதலில் திருமணம் செய்து கொண்டான்.  அவனுக்கு வாய்த்த மணமகள்  சற்று வசதியானவள் ..மூன்று அண்ணாக்களுக்கு ஒரே தங்கை .

காலம் வேகமாக் தன் வேலையை செய்தது .பாலகுமாரனும் தன் தங்கை திருமணம் முடிய ஊரில் ஒரு ஆசிரியையாக் உள்ள பெண்ணை திருமணம் செய்து  கொண்டான்.திருமணமான பின் அவர்கள் குடும்பம் வேலை என்று பொழுதுகள் வாய்பாக் அமையவில்லை தொடர்பு கொள்ள. இருபினும் சில மாதங்களுக்கொருமுறை கொண்ட தொடர்புகள் வருடம் ஒரு முறையாகியது.
இதற்கிடையில் ஆனந்த ராஜனுக்கு லண்டனுக்கு போகும் வாய்ப்பு வரவே மனைவியின்  எண்ணப்படி அங்கு  சென்று விட்டான்  ஆரம்பத்தில் வேலை வாய்ப்பு மிகவும் கஷ்டமாய் இருந்தது ஆனாலும் அவனது திறமையால் தபாற்கந்தோர் நிர்வாகியாக் வேலை கிடைத்து.மனைவி மாலினியும் அங்கு சென்று வாழ்க்கை சந்தோஷமாக் ஓடிக்கொண்டிருந்தது .

பாலகுமாரன்மனைவியுடன்  அன்பான் வாழ்க்கை நடத்தி ஒரு பெண குழந்தைக்கு தந்தையானான். ஆனந்த ராஜன் மாலினி தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இதுவரை கிட்ட் வில்லை . ஒரு நாள் ஆந்த ராஜனிடம் மனைவி மாலினி ..தான் வீட்டில் இருக்க பிடிக்காமல் படிக்க போவதாக கேட்டாள் . அவனும் சம்மதம் தெரிவிகக் வே அவள் மருத்துவக்கலூரியில் சேர்ந்து படித்தாள்.  படிப்புச் செலவுக்கு தந்தையிடம் இருந்து பணம்  பெற்றுக் கொள்ள அவள் கேட்ட் போதும் கணவன் ஆனந்தராஜன் ராஜன் மறுத்து விடான். அவன் பகல் நேர பணி முடிந்து வீட்டுக்கு வந்தால் இவள் கல்லூரியில் இருப்பாள். தனது நேரத்தை பயனுள்ள முறையில் செலவு செய்யவும் வீட்டு பணத்தேவையை ஈடு கட்டவும் இரண்டாவது வேலைக்கு செல்ல தொடங்கினான் அவர்களது வாழ்வு இயந்திர மயமானது  வீட்டுக்கு வந்தால் அவள் இல்லை எந்நேரமும் கல்லூரி  என்று இருப்பாள். இப்படியாக் ஐந்து  வருடங்கள் ஓடி விட்டது . இடையில் கரு தங்கும் சந்தர்ப்பம் வரவே மாலினி விரும்பவில்லை . கலைத்து விடாள். ஒருவாறு அவள் மருத்துவபட்ட்ம் பெற்று அயல நகரத்தில் ஒரு மருத்துவ நிலையத்தில் பணிக்கு அமார்ந்தாள் . எல்லாம்  முடிந்தது தனக்கு இனி நல்ல காலம்  என்று எண்ணியிருந்தான் ஆனந்தராஜன் .. காலம் விரைவாக ஓடியது திருமணமாகி பத்து பத்து வருடங்க ளாகியது  மீண்டும் அவள் கருத்தரித்து ஒரு பெண குழந்தைக்கு தாயானாள். மாலினி தனது பணி நேரத்தை இரவு நேர பணியாக்கி  கொண்டாள். பகலில் குழந்தையை பார்ப்பாள். பின் இரவு ஆனந்த ராஜன் குழந்தையை பார்க்க இவள் பணிக்கு செல்வாள். இப்படியாக் குழந்தை வளர்ந்து ஆறு வயதை அடைந்தாள் . பின்பு மாலினியில் வாழ்வில் மாற்றம் கண்டது. குழந்தைக்கு அப்பா தரம் குறைந்தவர் என்பது போல்  காட்டிக் கொண்டாள். தனது நண்பர்கள் வீட்டு விழாக்களில் குழந்தையை மட்டும் அழைத்து செல்வாள். தனது பரம்பரை பெருமை பற்றி பெருமிதமாக்  பேசிக் கொள்வாள். . ராஜனை மதிப்பதேயில்லை . ஏதும் விழாக்களுக்கு போனால்  மற்றைய  நட்புகளுக்கு கணவனை அறிமுகம் செய்ய மாட்டாள் . ராஜன் மிகவும் வேதனைபட்டான்.  ஒரு நாள் நண்பன்  பாலகுமாரனுக்கு நீண்ட கடிதம் எழுதினான். அவளின் போக்கு சரிவரவில்லை  என்றும். விவாகரத்து பெறபோவதாகவும் ஊருக்கு வந்து வேறு பெண்ணை கலியாணம் செய்ய போவதாகவும் எழுதினான். அதற்கு குழந்தையை காரணம் காட்டி இன்னும் சற்று பொறுக்குமாறு பால குமாரன் கடிதம் எழுதினான்
ஒரு நாள் அவனது பேருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு குழந்தையையும் அழைத்து கொண்டு மாலினி வீட்டை விட்டு போய் விடாள். காலம் உருண்டது ஒருவருடமாகியது . ஆனந்த  ராஜன் மிகவும் கவலைப்பட்டான் அவளை இரண்டு வேலை செய்து படிப்பித்தான்  குழந்தையை கவனித்தான் .  சமையல் வேலையும் ஒழுங்காக செய்ய மாடாள் சில நாட்கள் கடையிலும் சில நாட்கள் தனக்கு தெரிந்த முறையிலும் சமைத்து சாப்பிட்டு  இருக்கிறான். குழந்தை மீது மிகவும் விருப்பம். என்ன செய்வது ...எனக்கு அமைந்த வாழ்வு என்று கவலைபட்டு கொண்டு  இருக்கும்போது ..குடும்ப் அலுவலகத்தில் இருந்து அவனுக்கு விவாக்ரத்து விண்ணப்பம்   வந்தது. அவன் என்ன செய்வது குழந்தையை பிரிய விருப்ப்மில்லை .தொடர்ந்து வாழ்வும் முடியாது .....
முடிவு தெரியாமல் கலங்கு கிறான்...........

...அவளை மேலும்படிக்க் வைத்து தப்பா..........அவளின் ஆசைக்கு விட்டது தப்பா ....காலம் தான் முடிவு சொல்ல வேண்டும். உங்கள் முடிவு என்னவாய் இருக்கும் சொல்லுங்களேன்.............

14 comments:

'பரிவை' சே.குமார் said...

இது எங்கோ நடந்தது போல் தெரிகிறது. தன்னைவிட வசதியான குடும்பத்தில் பெண் எடுத்ததும் அவளை படிக்க வைத்ததும் தவறில்லை. ஆனால் அந்த காலகட்டத்தில் அவனும் தன்னை வளர்த்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. மேலும் அவள் படிக்கிறாள் என்று தாங்கியதுதான் அவனது இந்த நிலைக்கு காரணம்.

குழந்தையும் அவனிடத்தில் இல்லை... விவாகரத்து பெற்று கொள்வதே நல்லது.

Asiya Omar said...

என்ன சொல்வது?ஒரு சமயம் வெளியுலகில் அடிபட்டு மாலினி திரும்பி வரலாம்.விவகாரத்தை சிறிது காலம் தள்ளி வைக்கலாம்.

சீமான்கனி said...

காரியம் கைமீறி போய்விட்டது அக்கா அவளை படிக்கவிட்டது எல்லாம் சரிதான் அதற்க்காக இவனும் அப்படியே இருந்தது தவறு...இனி அவர்கள் இணைவது கடினம் தான்...உங்கள் முடிவு என்ன அக்கா???

ஹேமா said...

நிலா அக்கா....எங்களை நாங்கள் நோண்டி மணந்து பார்க்கிறமாதிரி ஒரு சம்பவம்...கதை.பெண்களுக்கு உரிமை,சுதந்திரம் இல்லை இல்லை என்கிறார்கள் சிலர்.ஒன்றும் இல்லாமலுமில்லை.தரவும் தேவையில்லை.இருப்பதைச் சரிவரப் பயன்படுத்திக்கொள்வதில்லை.தங்கள் தவறுகளை மறைக்க ஆண்களையும் சமூகத்தையும் குறைசொன்னபடி இருக்கிறார்கள் சில பெண்கள்.
அதுபோல ஒன்றுதான் இந்தக் கதை !

தினேஷ்குமார் said...

வணக்கம்
//இடையில் கரு தங்கும் சந்தர்பம் வரவே மாலினி விரும்பவில்லை கலைத்து விட்டாள்.// அந்த சமயத்தில் அவன் விவாகரத்து செய்திருக்க வேண்டும் விதி விளையாடிவிட்டது
ஒரு குழந்தை அழுவதையே பார்க்க முடியவில்லை ஆனால் கருவில் அழித்தவரை காரணமில்லாமல் தள்ளிவைப்பது தப்பில்லை என்னைபொறுத்தவரை
அவ்வரியை படிக்கும்போதே நீர்தளும்பியது கண்ணுள்

logu.. said...

\\நிலா அக்கா....எங்களை நாங்கள் நோண்டி மணந்து பார்க்கிறமாதிரி ஒரு சம்பவம்...கதை.பெண்களுக்கு உரிமை,சுதந்திரம் இல்லை இல்லை என்கிறார்கள் சிலர்.ஒன்றும் இல்லாமலுமில்லை.தரவும் தேவையில்லை.இருப்பதைச் சரிவரப் பயன்படுத்திக்கொள்வதில்லை.தங்கள் தவறுகளை மறைக்க ஆண்களையும் சமூகத்தையும் குறைசொன்னபடி இருக்கிறார்கள் சில பெண்கள்.
அதுபோல ஒன்றுதான் இந்தக் கதை !\\
Rippeeettu

Sriakila said...

பணம், பணம், பணத்தை மட்டுமே தேடி அலைந்தால் வாழ்க்கையில் நிம்மதி எப்படி இருக்கும்?

என்னைப் பொருத்த வரை இவர்கள் இருவருமே வாழ்க்கையை வாழவே ஆரம்பிக்கவில்லை. எதை விட்டுக் கொடுக்க வேண்டும்? எதற்காக விட்டுக் கொடுக்க வேண்டும்? என்ற வரைமுறை இல்லாமல் குடும்பம் நடத்தினால் இப்படித்தான்.

தவறுதலாக எழுத்துப்பிழை நிறைய இருக்கு நிலாமதி. கரெக்ட் செய்தால் படிப்பவர்களுக்கு இன்னும் நன்றாகப் புரியும்.

Vijiskitchencreations said...

நானும் இதே தான் சொல்லவந்தேன். அதை இவங்க சொல்லிட்டாங்க. Sriakila கூறியது...பணம், பணம், பணத்தை மட்டுமே தேடி அலைந்தால் வாழ்க்கையில் நிம்மதி எப்படி இருக்கும்?

www.vijisvegkitchen.blogspot.com

நிலாமகள் said...

தன் அதிக பட்ச உழைப்பையும் வருவாயையும் மாலினிக்கான எண்ணம் ஈடேற செலவிட்ட ராஜன் போற்றுதலுக்குரியவன்.
வசதி வாய்ப்பும், தோள் கொடுக்க சகோதரர்கள் இருப்பதும் போதுமெனில் அடுத்த கட்டமாய் தாம்பத்திய வாழ்வில் ஈடுபடாமலிருந்திருக்கலாம் மாலினி. அவரது எடுத்தெரிந்த போக்கு அக் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய தகப்பன் அன்பை இழக்கச் செய்கிறது.
இச் சம்பவம், இடாலோ கால்வினோவின் சிறுகதை ஒன்றை நினைவுபடுத்துகிறது. தமிழில் மொழிபெயர்த்த சத்யன், அதற்கு, 'ஒரு தம்பதியின் சிக்கல்கள்' என்று பெயரிட்டிருப்பார். அக்கதை நாயக நாயகியர் ஆர்த்துரோவும் எலைட்டும் பகல் வேலைக்கும், இரவு வேலைக்கும் மாறி மாறி போகவேண்டியவர்கள். ஒருவர் வர, மற்றொருவர் கிளம்பும்படி வாழ்க்கை. கிடைக்கும் குறுகிய நேரங்களில் தத்தம் அன்னியோன்னியத்தை ஆத்மார்த்தமாகப் பரிமாறிக்கொள்வது மிக இதமாயிருக்கும் படிக்கும் போது.
ராஜனுக்கும் மாலினிக்கும் குழந்தையற்ற தொடக்க காலத்தில் இருந்த அன்னியோன்ய இழை எவ்விதம் சிதைவடைந்திருக்க கூடும்?
குழந்தையின் எதிர்காலத்தில் ஒரு நண்பனுக்கிருந்த(பால குமாரன்) அக்கறை பெற்ற தாய்க்கும் வரப் பிரார்த்திப்போம்.

thiyaa said...

அருமையா இருக்கு

ம.தி.சுதா said...

பெண்களுக்கான சுதந்திரம் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்... பதிவு அருமை.. சகோதரி.. உங்களை ஈழத்திற்கு அழைக்கிறேன்.. அதவாது என் ஓடையில் நனைய அன்புடன் வரவேற்கிறேன்.. பிடித்திருந்தால் மற்றவருக்கும் என்னை அறிமுகப்படுத்துங்கள்.. mathisutha.blogspot.com

மங்குனி அமைச்சர் said...

ஆசியா ஓமர் மேடம் கருத்தை நான் ஆமோத்திககிறேன்

r.v.saravanan said...

கதை அருமை நிலா

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT...!!!