Followers
Tuesday, December 21, 2010
மார்கழித் திங்கள் அல்லவா
மார்கழித் திங்கள் அல்லவா ?
மார்கழி மாதம் என்றால் கடுங்குளிரும் , வெளி நாடுகளில் வாட்டும்பனி ..பொழிவும் ஒரு ஆண்டின் முடிவும் அடுத்த ஆண்டிற்கான் எதிர்பார்புகளுடனான .ஒரு மகிழ்வும் பழையன கடந்து புதியனவற்றை மகிழ் வோடு எதிர் நோக்கியிருக்கும் மகிழ்வும் மக்கள் மனத்தில் தென்படதொடங்கும். வெளி நாடுகளில் கார்த்திகை முடிவிலே சோடினைக்கான ஆயத்தங்கள் கடைத்தொகுதியில் விளம்பரதுக்கான் சோடினைகள் , மகிழ்ச்சியுடன் , பரிசு பொருட்களின் தேர்வு என்று சனக்கூட்டம் களை கட்ட் தொடங்கும்.
உங்களைப் போலவே நானும் மகிழ்வோடும் எதிர்பார்போடும் கிறீஸ்து பிறப்பின் மகிழ்வு உலகுக்கும் நாட்டும் வீட்டுக்கும் அமைதி சமாதானம் மகிழ்வு கொண்டு வரவேண்டும். என் எதிர்பார்ப்புகளுடன் கிறீஸ்து பிறப்பின் நாளை எதிர் கொண்டு , ஆவலுடன் இருக்கிறேன். என் குழந்தைகள் நத்தார் தினமாகிய இந்த நாட்களில் முன்பு சோடினைகள் செய்ய சொல்லி என்னவரை கட்டயபடுத்துவார்கள். இப்பொது வளர்ந்து விடார்கள் பரிசுப் பொருட்களுக்காக காத்திருப்பார்கள். வீட்டின் ஒரு மூலையில் கிறிஸ்மஸ் மரம் அலங்க்கரித்தாகி விட்டது .
இனி பரிசு பொருட்கள் வைக்க வேண்டிய தேவை மட்டுமே. இரவு ஜாம பூசையின் பின் அதைப் பிரித்து மகிழ்வார்கள் உறவினர் வருவார்கள் நாங்களும் போவோம். கேக் போன்ற சிற்றுண்டிகள் செய்வோம். கொடுத்ததும் , பெற்றும் மகிழ்வோம். நெருங்கிய உறவுகளுக்குப்ரிசு போருட்கள் கொடுப்போம். சற்று செலவு அதிகமான் மாதம் இருப்பினும் மறுமாதங்க்களில் இட்டுக் கட்டி விடலாம் என்ற ஆவலில் ...இவை சுமையாக் தெரிவதில்லை .
இது நன்றி சொல்லும் மாதம் என்று கூட சொல்வார்கள் ஆலயத்திலும் பூசை தொடங்க க முன் ஒரு நன்றி வழிபாடு இருக்கும். என் தாயகத்தில் வயல் வெளியில் தவளைகளின் கூச்சல் மழையின் சினுசினுப்பு ....வீதி வயல்வெளி என்று பாக்கி யில்லாமல் ஒரே வெள்ளக்காடாக் இருக்கும். இங்கு புலம் பெயர்வில் பனி மழை பொழிகிறது கால்கள் புதைகிறது ...குளிர் எலும்பு வரை ஊடுருவுகிறது. அதற்கேற்ற ஆடை அணிகள் என்று சந்திர மண்டல பயணி போல .....வாழ்க்கை தொடர்கிறது. வாழ்க்கையே ஒரு சாவல் அதை சமாளித்து தானே ஆக வேண்டும். .
தற் போது வீட்டில் வேலை சற்று அதிகம் பின்பு நேரம் கிடைக்காது அதனால் சில நாட்கள் முன்னதாகவே எழுதுகிறேன். எல்லோருக்கும் இனிய நாளாக் அமையட்டும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும். நததால் ( கிறிஸ்மஸ் ) வாழ்த்துக்கள்.
வெள்ளியிரவு விழித்திருங்கள் பரிசுடன் உங்கள்வீட்டு வாயிற்கதவு தட்ட் படும். ( விழித்திருபவர்களுக்கு மட்டும்பரிசு ).
Subscribe to:
Post Comments (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
என் இதயம் கவர்ந்தவளே கண்கள் கண்டதால் கவரபட்டதால் காதல் கொண்டதால் கருத்து ஒன்றி அதனால் இணைந்து கொண்ட இருவர் கருத்து வேறு பட்டாலும் ...
-
அஸ்தமனத்தில் ஓர் உதயம் ............. அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்க...
20 comments:
அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு மகிழ்ச்சி.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
//விழித்திருபவர்களுக்கு மட்டும்பரிசு//
:-)
வரும் நாட்களெல்லாம் உங்களுக்கும் நல்லதாகவே இருக்கும்.
சந்தோஷமாயிருங்கள் அக்கா !
மாதத்திற்கு ஏற்ற பதிவு நன்றி அக்கா...
கிருத்துமஸ் தின வாழ்த்துக்கள்.
எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள். நல்ல இடுகை. பகிர்வுக்கு நன்றி.
நல்ல பதிவு ... எழுத்து நடை அருமை ...
தங்களுக்கும் , தங்களின் உறவுகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல வாழ்த்துக்கள் ...
வெள்ளியன்று இரவு நான் கட்டாயம் விழித்து இருப்பேன் ....
\\என் தாயகத்தில் வயல் வெளியில் தவளைகளின் கூச்சல் மழையின் சினுசினுப்பு ....வீதி வயல்வெளி என்று பாக்கி யில்லாமல் ஒரே வெள்ளக்காடாக் இருக்கும். இங்கு புலம் பெயர்வில் பனி மழை பொழிகிறது கால்கள் புதைகிறது ...குளிர் எலும்பு வரை ஊடுருவுகிறது. அதற்கேற்ற ஆடை அணிகள் என்று சந்திர மண்டல பயணி போல .....வாழ்க்கை தொடர்கிறது. வாழ்க்கையே ஒரு சாவல் அதை சமாளித்து தானே ஆக வேண்டும். \\
இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி..
அனைவருக்கும் வாழ்த்துக்கள். பிறக்கும் ஆண்டு நல்ல வளமான ஆண்டாக அமையட்டும்.
//வாழ்க்கையே ஒரு சாவல் அதை சமாளித்து தானே ஆக வேண்டும்.//
சரிதான்.. :)
உங்களுக்கும் நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்..
எங்க வீட்டுக்கும் சாண்டா தாத்தாவ அனுப்பி விடுங்க
அக்கா உங்களுக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்....
கிருத்துமஸ் தின வாழ்த்துக்கள் அக்கா..
உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
வாழ்க்கையே ஒரு சவால்தான்.
புது வருட வாழ்த்துக்கள்.
சகோதரி,உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு
தகவல் உலகம்
கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.
மேரி கிறிஸ்மஸ்.
உங்களுடைய பகிர்வு ஏதோ ஒரு டீவி சேனலை பார்த்த உணர்வு போல தெரியுது வாழ்த்துக்கள்.
Post a Comment