Followers

Tuesday, November 17, 2009

பிடித்தவர்கள் ..........பிடிக்காதவர்கள் பற்றிய தொடர் பதிவு ..........

பிடித்தவர்கள் ..........பிடிக்காதவர்கள் பற்றிய தொடர் பதிவு .........

கிட்ட தட்ட இரு வாரங்களுக்கு முன்  பதிவுலக நண்பர் ராஜ ராஜன் என்னையும் ஒரு பதிவு போடும் படி அழைத்து இருந்தார்.........எனக்கு உடல் நலமுமில்லை . எழுதும் மன நிலையும் இல்லை இருபினும் இன்னும் காலம் தாழ்தல் ஆகாது என்பதினால் இன்றாவது ஒரு பதிவு போடுவோம் என உடகாந்தேன்.

தொடர் பதிவின் விதி முறைகள்.

  • (1)தமிழக பிரபலங்களாக இருத்தல் வேண்டும் 

  • (2)இரண்டு முதல் ஐந்து பதிவரை அழைத்தல் வேண்டும். 

  • (3)எழு முதல் பத்து கேள்விகளுக்கு விடையாக   இருத்தல் வேண்டும். 

அரசியல் வாதிகள். 

பிடித்தவர் .........இதுவரையில்லை
பிடிக்காதவர் ....கலைஞ்சர் ( ஈழ தமிழ் மக்கள் விடயத்தில் , எவ்வளவோ
எதிர்பார்த்தோம் )
நடிகர்கள் 

பிடித்தவர் .........கமல் ....விக்ரம் ...பாரத ....சூர்யா ( சில நல்ல படங்களுக்காக)
பிடிக்காதவர்கள். ..........சொல்லும்படியாக இல்லை
கவிஞ்சர் .......

பிடித்தவர் ........பாரதி
பிடிக்காதவர் .........அதிகம் தெரியாது.
 இயக்குனர் .........

பிடித்தவர் ....பாரதிராஜா ,,,,,,,,கே.எஸ் .பாலசந்தர் ( சில் படங்களுக்காக)
பிடிக்காதவர் .....அறியப்படவில்லை
நடிகை 

பிடித்தவர் .........மனோ ரமா
பிடிக்காதவர் .... ஒவ்வொருவரும் ஒரு வகையில் பிடிக்கும்

இசையமைப்பாளர் 

பிடித்தவர் ..........நம்ம பிரபலம் எ ஆர் ரகுமான்
பிடிக்காதவர் ........சொல்ல தெரியவில்லை.
எழுத்தாளர் 

பிடித்தவர் ..........இப்போது வாசிக்க நேரம் வாய்ப்பு இல்லை. 
பிடிக்காதவர் .......குறிப்பிட்டு சொல்ல தெரியவில்லை

நான் அழைப்பது ...........நேரமும் எழுதும் திறனும் இதை தொடர விரும்பும் பதிவுலக நண்பர்களை . நன்றியுடன் நிலாமதி

Tuesday, November 10, 2009

கடைசி வரை யாரோ ?

  நாட்டின்   தலை  நகரில் ஒரு பிரபல் மருத்துவமனை . அந்த மருத்துவ மனைக்குரிய தோற்று நீக்கி நெடி ......மருத்துவமனையின் நடை பாதையில் மனிதர்களின் நடமாட்டம். ..எல்லோரும் பரப்பரபாக் ஓடிக்கொண்டும் நடந்து கொண்டும் இருந்தனர் ....வைத்தியர்கள் .. தாதியர்கள். நோயாளர் காவு வண்டிகள். சக்கர நாற்காலியில் சிலர். ..நோயாளரைக் காண வரும் உறவுகள் பலர் . பார்வையாளர் நேரத்தில் வரும்  சிலரை வேடிக்கை பார்த்த வண்ணம் அவர் இருந்தார். .ஞானரட்ணம் ஐயாவுக்கு மட்டும் யாரும் பார்க்க வருவதாயில்லை .

அவரது நினைவலைகள் பின்னோக்கி சென்றன. அவர் தலை  நகரில் ஆடை தைத்து கொடுக்கும் ஒரு நிறுவன் மேர்பார்வையாளராக் இருந்தார். காலக்கிரமத்தில் அவர்க்கும் திருமணம் நடந்தது . மனைவி இரு குழந்தைகள். இவர் விடுப்பு கிடைக்கும் போதெல்லாம்  வந்து ஊரில் இருக்கும் மனைவி பிள்ளைகளை பார்த்து செல்வார். ஏனோ சில் காலமாக் அவர் வரவு குறைந்தது .......கணவன் மனைவிகிடையில் பிரச்சினை என்று பேசிக்கொண்டார்கள். இருவரும் ஆண் குழந்தைகள். அவர்கள் கல்வியிலும்  சிறந்து விளங்கினார்கள். மனைவியே தாயாகவும் தந்தையாகவும் இருந்து வளர்த்தெடுத்தாள்.

அவர் வரவு இல்லாவிடாலும் மாதாந்தம் அவள் பெயருக்கு காசோலை வரும் . சில பள்ளி விழாக்களில் , அறிவு தெளிந்த மூத்தவன் கவலைப்படுவான் மற்ற் பையன் களுக்கு அப்பா வருகிறார் . எனக்கு அப்பா  வருவ தில்லையே   என்று . ஊராரும் கேட்டு களைத்து விடார்கள். அவருக்கு வேறு பெண் இருப்பதாகவும் பேசிக் கொண்டார்கள். ஆரம்ப கல்வி முடிந்ததும் பெரியவன் மேற்படிப்புக்காக் அயலிலுள்ள , நகரத்துக்கு படிக்க சென்றான். அவன் அங்கேயே தங்கி படிப்பதால் , மேலதிக செலவை தகப்பனிடம் கடிதம் மூலம் கேட்டு வாங்கினான். வருட இறுதி , நீண்ட நாள் விடுமுறை வரும் போது , தம்பியையும் அழைத்து கொண்டு தலை  நகருக்கு தந்தையிடம் போய் விடுவான். ஒருவாறு , மேற்படிப்பும் முடிந்து ,தலைநகரில்  ஒரு வேலையும் பெற்றான். இப்படி இருக்கும் காலத்தில் அவன் நண்பர்கள் வெளி நாடு சென்றனர். அதற்கும் , தந்தையிடம் கேட்டு , பணம் பெற்று , வெளி நாடு சென்று விடான்.

அண்ணவை தொடர்ந்து தம்பியும் சென்று விடவே .ஊரில் தாயார் தனித்து விடபட்டார்.  காலகிரமத்தில் அண்ண தான் விரும்பிய் பெண்ணயும் கலியாணம் செய்து குடியும்  குடிதனமும் ஆனான். இளையவன் தாய் மீது மிகுந்தா  பாசம் உள்ளவன்.  காலக்கிரமத்தில் இளையவன்  பல சிரமத்துக்கு மத்தியில் தாயாரை தன்னுடன் அழைத்து கொண்டான். எல்லோரும்  வாழ்க்கையில் , வளமாகவும் நலமாகவும் வாழ்ந்தனர். சில வருடங்கள் செல்ல தந்தை நோய் வாய் பட்டார். அவரது சேமிப்பு செலவழிந்தது . இப்போது பிரச்சினை தலை  தூக்கியது.  நோய் வாய்ப்பட்ட  தந்தையை யார் கவனிப்பது. ? இதற்கிடையில் , இளையவன் தன் குடும்பத்துடன் தந்தையை பார்க்க சென்ற போது . அவருக்கு சொந்தமாக் இருக்கும் தலைநகரத்து வீட்டை  தன் பெயருக்கு எழுதி கொண்டான். அண்ணா தம்பியருக்கிடையில் பிரச்சினை .யார் தந்தையை பார்ப்பது என்று. தாயை நான் பார்க்கிறேன் நீ தந்தையை பார் என்று தம்பியும்..........உனக்கு தான் வீடு தந்தார் நீ தான் பார்க்க வேண்டுமென்று அண்ணாவும் சண்டை........ஒருவாறு , உறவினர்கள்  சமாதானம் செய்து இருவரும் தந்தையை ஒரு தூரத்து உறவினர் உதவியுடன்,  சிறிது பணம் அனுப்பி ........ஒரு  நோயாளர் பராமரிப்பு இல்லத்தில் சேர்த்து விட்டனர்.

ஐயா ஞானரட்ணம் , பார்த்து கொண்டிருக்கிறார். தன் தள்ளாத  வயதிலும் மூத்தவன் வரானா? இளையவன் வரானா? என்று ......பெற்ற  தந்தையை , பிள்ளைகள்  படுத்தும் பாடு .......வெளி நாட்டு வாழ்க்கை .....அன்பு இல்லாத மனைவி .......முதியோர் இல்லங்களில் , பெற்றவர் வாடுவது நோய் துன்பத்தால் மட்டும்  மல்ல அன்பு அற்ற  , பாசம இல்லாத  பிள்ளிகளின் மனப் போக்காலும் தான் ...இவர்கள் முதுமை அடையும் போது ( பிள்ளைகளாய் இருந்தர்வர்கள் ) இவர்கள் நிலை என்னவோ ?.........வீடு வரை உறவு  ...வீதி வரை மனைவி ....காடு வரை பிள்ளை ....கடைசி வரை யாரோ ? ..

Wednesday, November 4, 2009

நெஞ்சு நிறைந்த சோகமும் ,நிம்மதியற்ற வாழ்வும்.........

கால ஓட்டத்தில் பிறந்தது கார்த்திகை .........
மழைக்கால ஆரம்பம் ,மண்   மீது தூறல்கள்
ஒவ்வொரு இதயத்திலும்  இனம் தெரியாத சோகங்கள்.
மத நம்பிக்கையில் கார்த்திகை மறைந்தவர்களுக்கானது
ஈழத்து மக்களின் , வீர வேங்கை களின் நினைவுகளும்
பிறந்த தினமும் ஒரு சேர  மகிழ் வுற்றா ஒரு பொழுதும்
மண் ண்ணில் விதைத்த  மா வீரருக்காய் ,
என்  இதய மெளனங்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நொடி.

எத்தனை  எதிர் பார்ப்புக்களுடன் மண் சென்ற வீரர் ...
கார்த்திகை தோறும்  கல்லறைத் தீபங்கள்.
மலர்களுடன் , கண்ணீர் அஞ்சலிகள்
இறுதிப் போரிலே , மண் சென்ற மக்களே
சிந்திய  குருதியாறே..சீறிப் பாய்ந்த கந்தக குண்டுகளே ....
சிந்துகின்றோம் கண்ணீர் , சிந்தையிலே துன்பங்கொண்டு
மண்ணுக்காய் மரணித்த  மக்களிற்கு நித்திய  சாந்தி கொடு ........

 ஐயோ என்ற அவலைககுரலை ஐ நாவும் கேட்கவில்லை
ஆறுதலும் தரவில்லை , அயவலன் கூட அடக்க ஆள் அணி
கொடுத்தானே ஒழிய யாருமே ஏனென்று கேட்கவில்லை ..
எங்களை வைத்து அரசியலா? அனாதையாய்  போனதா தமிழ் இனம்.
நெஞ்சு நிறைந்த சோகமும் ,நிம்மதியற்ற  வாழ்வும்
சமூக சீரழிவும் , அகதி வாழ்வும் தான் எஞ்சியதோ ?
மீளுமா தமிழ் இனம் , தளிர்க்குமா எம் இனம்?


வாழ நினைத்தால் .வாழலாம்

வாழ நினைத்தால் .வாழலாம்

.வாழ்க்கை ....(..வா +..வாழ் .+..வாகை ...)

வாழ்க்கை  ........என்ற சொல்லை நினைக்கும் போது முதலில் வா என்கிறது .பின் வாழ் ....என்கிறது.அதற்கும் பின் வாகை அதாவது வெற்றி வாகை சூடி நீயும் வாழு என்கிறது.என்ன அழகான தத்துவமுத்துக்கள்.அவனும் வாழ தான் நினைத்தான்.

ராகவனுக்கு வயது நாற்பது ,வைத்திய சாலைக்கு   உரியஅந்த நெடி ...அவனுக்கு பழக்கமாகி இருந்தது, முழங்கால் சத்திர சிகிச்சைக்காக படுத்து இருந்தான்,அவன் மனம் பலவாறு சிந்தித்தது .தனிமையும் அமைதியும் மனதின் ஆழத்தை ஆராய சிறந்த இடம் என்பார்கள். அன்பான மனைவியும் மகனும் வீடில் , அவள் வர மாலை ஐந்து மணியாகும்.இவனுக்கு மறுபக்கத்தில் உள்ள கட்டிலில் நேற்று இரவு ஒரு விபத்துசம் பவதுக்காக் அவனைஅனுமதித்து இருந்தார்கள் .அவனது மறைப்பு போடப்பட்டு இருந்த தாலும்,அதிக நேரம் அவன்தூங்கியதாலும் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை . நாளை காலையில் விசாரிக்கலாம்என்று இருந்து விட்டான்,ராகவன்.

சில மாதங்களாக அவனது வலது முழங்கால் மிகவும் வலி கொடுத்ததால் வைத்தியரிடம் போய்வருவதே அவன் முதல் வேலையாக இருந்தது. இறுதியாக எதற்கும் குணமாகாமல் ஒரு சத்திரசிகிச்சை செய்ய வேணும் என்று டாக்டர் சொல்லியிருந்த தால்  இன்று அவன் வைத்திய  சாலைக்கட்டிலில் ..நாளை மறு நாள் சத்திர சிகிச்சை . அவன் வாழ்கையே வெறுத்த ஒரு நிலைக்குபோய் இருந்தான். காரணம் அவனுக்கு சர்க்கரை வியாதியும் இருந்தது. புண் ஆறுமா ,தொற்றினால் (infection) அவதி பட வேண்டுமா என்று எண்ணிய படியே நித்திரையாகி விட்டான்.

மறு நாள் விடிந்தது .மனைவி மாலா பழங்களும் .மாற்று துணி களும் கொண்டுவந்து வைத்து விட்டு போயிருக்கிறாள்.தாதி மார் வந்து அன்றாட கடமைகளைசெய்து விட்டுபோயிருந்தனர் .அயலில் உள்ள கட்டிலில் பேச்சு குரல் கேட்கவே அவன் அவனது உதவி ஆள் மூலம் அறிந்ததில் இருந்து ....பக்கத்துக் கட்டில் .நோயாளி இருபதுவயதானவன் என்றும் விபத்தினால் இடது முழங்க்காலோடு அகற்ற பட வேண்டும் என்றும்அறிந்து கொண்டான்.

அப்போது தான் அவன் நினைத்தான் நான் நாற்பது வயது வரை வாழ்ந்துவிட்டேன்இவன் இன்னும் வாழ்கையின் இன்பங்களை காணாத வயது.... இவனை யார் மணமுடிப்பர்கள் ?கால் இழந்த ஒருவனை ?  வாழ்வின் இன்பங்களை இளமையின் சந்தோஷங்களை , இழந்து விட போகிறான் என்று.பலவாறாக சிந்தைகளை ஒடவிடான்.  எனக்கோ காலில் சத்திர சிகிச்சைஅவனுக்கோ.... இடது காலையே   எடுக்க போகிறார்கள். இறைவா என்ன சோதனை ...

கடவுள் தந்த அழகிய வாழ்வை , வாழ எவ்வளவு எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கிறது. அப்போது வான் அலையில்ஒலிக்கிறது .......

வாழ நினைத்தால் வாழலாம் ..
.வழியா இல்லை பூமியில் ..
ஆழக் கடலும்சோலையாகும்

ஆசை இருந்தால் நீந்தி ....வா.........

Tuesday, October 27, 2009

அஸ்தமனத்தில் ஓர் உதயம் .............

அஸ்தமனத்தில் ஓர் உதயம் .............

அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்கு. இருந்தாலும் கோவில் மணியோசை அவரை இன்னும் தூங்கவிடாமல் எழுப்பியது. நேரம் மணி ஆறு என்று கடிகார முள் காட்டியது எழுந்து பல துலக்கி காலைக் கடன் முடிக்கவும்  சாரதா கோப்பியுடன் முன்னே வந்தாள். அந்த ஊரில் இவரை மாஸ்டர் என்று அழைப்பார்கள் இவர் அந்த ஊரின் ஆரம்ப பாடசாலையின் தலைமை  ஆசிரியர்.பாட சாலை வேலைகளுடன் ஊர்  நற் பணி யிலும் பெரும் பங்கு வகிப்பவர். இப்போது இளைப்பாறி ........வீடோடு இருக்கிறார். காலைக் கோப்பி முடிந்ததும் அன்றைய  தினசரியில் மூழ்கி விடுவார். இன்று தினசரி வர தாமதமாகியது. வாயில் ஒரு வெண் சுருட்டை பற்ற வைத்தவர் கடந்த காலங்களில் மூழ்கினார்.

அப்போது , கம்பீரமான தோற்றம், மாஸ்டர் ........என்றால்  அத்தனை மதிப்பு .கண்டிப்பும் கண்ணியமும் மிக்கவர். ஊரில் முக்கிய கூட்டங்களில் முன் நின்று தலைமை தாங்குபவர். அந்த ஊரில் தை மாதத்தில் அதிக வேலையிருக்கும் பாடசாலை  அனுமதிகள். இடமாற்றங்கள் புதிய நியமன்கள் என்று. அவருக்கு ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள் .கல்வி ...கலைகளில் திறமை சாலிகள். நன்றாக படித்து , உயர்கல்வி பெற்ற பின் மேற படிப்புக்காக அண்ணாவை தொடர்ந்த  தங்கையும் ...சென்று பட்டம் பெற்று உயர் உத்தியோகம் பெற்று ....ஊருக்கு வந்து கலியாணம் கட்டி சென்று விட்டனர். இவர் மனைவி மாமலரும் ...அதன் பின் நோயாளியாகி விடார். அவர் வீடில் , இவர் பிள்ளைகளோடு , பிள்ளையாக யாக வாழ்ந்தவள் தான் சாரதா , மாமலரின் தங்கை.

மாமலர் மாஸ்டரை முடித்த மறு வருடமே , அவர்களின் தந்தை மாரடைப் பில் காலமாகிவிட்டார் .   ஒருவர் பின் ஒருவராக. பெற்றாரை இழந்த தனித்து விடப்பட்ட இளம்பெண்ணை , மாஸ்டர்  தான் பொறுப்புடன் கூட்டி  வந்து ஒரு உடன் பிறவா சகோதரியாக வளர்த்து வந்தார்.காலம் செல்ல செல்ல சாரதா பருவ பெண்ணாக் வளர்ந்து வந்தாள். தேவையான் கல்விகளும்  பெற்றாள்  ஆனால்திருமணம்பேசியதும் ஒவ்வொன்றாக  தட்டிக் கழித்துக் கொண்டே வந்தாள். சில காலம் தன் வருமானதுக்காய் ஊர் பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுத்தாள்.ஊரவர்களும் பலவாறு மாஸ்டரையும் இவளையும் இணைத்து பேசினார்கள். அவள் இதை சட்டை செய்வதே இல்லய் .  அந்த ஊரில் ஒரு நாள் ராணுவம் தரை இறங்கியது. ஊரவர்களுடன். அவர்களும் இடம் பெயர்ந்தார்கள். ஆனால் அவர்களது ஊருக்கு திரும்பி போகும் நிலை வரவே இல்லை. இடப் பெயர்வினாலும் போதிய மருத்துவ வசதியின்மையாலும் நோயாளி மனைவி மாமலர் இறந்து விட்டாள் . மீண்டும் ஒரு இடப்பெயர்வு. எந்த வேளையிலும் மாஸ்டர்,   மனைவியின் தங்கையை ஆதரித்தே  வந்தார். முன்பு மறை முகமாக் பணிவிடை செய்து வந்த சாரதா........இப்போது அவருக்காகவே வாழ்ந்தாள். ஒரு நாள் மாஸ்டர் சிந்தித்தார் . தான் இல்லாத காலத்தில் இவளுக்கு யார் துணை ....தனித்து  விடப்படுவாள் ,  பொருளாதாரக் கஷ்டமும்  இவளை வாட்டும்,   என்று சிந்தித்து ஒரு முடிவெடுத்தார். பதிவு கந்தோரில் இவளை மனைவியாக ஏற்றுக்கொள்ள சம்மதம் கேடார். அவளும் சம்மதிக்கவே. அறுபது வயது சாரதாவும் , எழுபதின் ஆரம்ப ராஜரத்னம் மாஸ்டரும் தம்பதிகளாயினர். ஒரு நல்ல நாளில் ஊர் கோவிலில் , மாலை மாற்றி தாலியை அணிவித்தார். மனதார அவருடன் வாழ்ந்த் ஒரு தலைக்காதல் வாழ்வின் இறுதி பகுதியில் .( அஸ்தமனத்தில்) நிறைவேறியது . பெரும் பேறாக கருதும் தாலிப்பாக்கியம் அவளுக்கு கிடைத்தது  , அவளுக்கு கிடைத்த தாலிப்பாக்கியம்  ,வாழ்வின் ஓர் உதயமாக , .அஸ்தமனத்தில் அவளுக்கு வாழ்க்கை தொடங்கியது . .

பேப்பர் காரப்பையன் பேப்பர் எனறு அழைத்தும்.......கனவுலகிற்கு சென்று இருந்த மாஸ்டர் .......நினைவு திரும்பினார்.

Monday, October 26, 2009

ரயில் பயணத்தில் .... ......

ரயில் பயணத்தில் ..........

குறிப்பு :.....  சில வாரங்களாக எதுவுமே எழுத முடியவில்லை. உறவுக்குள் ஒரு இழப்பு அயல் ஊர் ...பயணங்கள் ...பின்பு அன்பான் சில பொறுப்புகள்.   வீடில் சில் அலுவல்கள் என்று வலைத் தள பக்கம் வரவேயில்லை. வந்தாலும் ஒரு சிலதை வாசித்து விட்டு  போய் விடுவேன் இன்று ஏதும் எழுதனும் என்று தோன்றவே ஒரு சிறு பதிவு . உங்களுடன்........

செந்தூரன் அன்று காலை அவனது ஊர் நோக்கிய பயணம். பயணப்பை டிக்கட் எல்லாம் சரி பார்த்தபின் டாக்க்சி பிடித்து ரயில் நிலையம் வந்தடைந்தான். மூன்று வருடங்களுக்கு பின் , ஊர் நோக்கி புறப்டுகிறான். இது வரையில்  படிப்பு கலாசாலை  விடுதி என்று இருந்தவன் கடைசியாக  புரபசராக பதவி கிடைத்தபின் .........இப்போது ஊர் நோக்கி .............

செந்து .......எனும் செந்தூரனுக்கு பெண் பார்த்து , பெற்றார்கள்  அவனை இந்த முறையாவது ஊருக்கு  தீபாவளிக்கு வரும்படி வற்புறுத்தி அழைத்து இருந்தார்கள். ஒரு வார விடுப்பில் செல்கிறான். அன்று திங்கள் கிழமை . முதல் வகுப்பில் புக் செய்து இருந்தான். கிழமை நாள் என்பதால் அதிக சனக்கூட்டம் இல்லை. தன் சீட் தேடி அமர்ந்தான். சுற்று முற்றும் பார்த்தான் யாரும் தெரிந்தவர்கள் இல்லை . கையில் ஒரு புத்தகத்தை எடுத்து , வாசிக்க ஆரம்பித்தான். சடேன்று ஒரு வயதான அம்மாளுடன் ஒரு இளம் பெண் , அவனது இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்தாள். அந்த அம்மாள் அவள் தங்கி இருக்கும் வீடுக்காரியாக இருக்க வேண்டும்., என்பது பேச்சு வாக்கில் புரிந்தது . அவள் விடை பெற்றதும்  சற்று நேரத்தில் ரயில் புறப்பட ஆரம்பித்து. அவசரமாக் தன் பயணப் பையை தலைக்கு   மேல் உள்ள பலகையில் பொருத்த  முயன்றாள் முடியவில்லை. மீண்டும் முயற்சிக்கையில் இவன் ..... May I help you .?........yes please. ..thanks. இதன் மூலம்  அவர்களது பரீட்சயம் ஆரம்பமாகியது. மாதங்கி தனது கல்லூரிப்படிப்பு முடிந்து  தனது ஊர் நோக்கி செல்கிறாள். பரீட்சை முடிவுக்காக காத்திருபவள். தனது ஊர் நோக்கி செல்வதாகவும் , தான் ஒரு உறவுக்கார அம்மாவின்  வீடில் தங்கி இருந்து படித்த  தாகவும் பேசி கொண்டதில் இருந்து தெரிந்தது.   சிறிது நேரம் பேசிக் ்கொண்டு இருந்தவள் தன் புத்தகத்தில் மூழ்கினாள். அது ஒரு எட்டு மணி நேரப்பயணம். காலை  எழு மணிக்கு புறபட்ட்வர்கள். மாலை  நான்கு , நாலரை மணியாகும்  அவர்கள் பயணம் முடிய . ... அவனது ஊருக்கு ....முன்னிய தரிப்பில் அவளது தரிப்பு ...அவள் இறங்க வேண்டி வரும்.அழகான் படித்த பெண் . இனிமையாக் பேசுகிறாள்.வீடில் பெண் பார்க்கிறார்கள். இவளை போல் ஒரு பெண் அமைந்தால்...........ரயிலின் தாலாட்டு .அவனை சற்று உறங்க செய்தது .........

.திடீரென டிக்கட் பரிசோதகர் .தட்டிஎழுப்பவும் . தனது இருக்கையில் இருந்து  எழுந்து தனது . டிக்கட்டை காடினான். இதன் பிறகு   அவன் உறக்கம் கலைந்து விட்டது.....மாதங்கி தொடர்ந்து படித்து கொண்டே இருந்தாள். அடுத்த தரிப்பில் மதிய உணவு வேளையாதலால் சற்று நீண்ட நேரம் இருந்தது ரயில் புறப்பட . அவன் எதாவது சாப்பிட வாங்க வேண்டி புறப்பட்ட வேளையில்,  இறங்க தலைபட்ட்வனை  அந்த குரல்  அழைத்து ..........பிளீஸ் .........எனக்கும் ஒரு தண்ணீர் போத்தல் வாங்கி வருவீர்களா? மறுப்பு சொல்லாமல் , இறங்கினான் காசு கொடுக்க முற்பட்டவளை தடுத்தான்.இறங்கி சென்றவன்.   தனக்கு இரண்டு பண்ணும் ஒரு சோடாவும் வாங்கி கொண்டான். அவளுக்கு தண்ணீர்  போத்தலுடன் வந்தவன் அதை கொடுத்தும்,  நன்றி சொல்லி வாங்கி கொண்டாள்.
நேரமும் விரைவாக ஓடிக்கொண்டே இருந்தது . வெளியில் செல்லும் போது வாங்கிய அன்றைய தினசரியை புரட்டி கொண்டு இருந்தான். அடுத்ததாக ,   அவளும்  இறங்க வேண்டிய, நிறுத்தம் வந்தது . அவள் இறங்கி  நன்றி தெரிவித்த போது மீண்டும் ஒரு பொழுதில் சந்திப்போம் என்றாள். சற்று நிமிடங்கள் ஓடின அவன் நினைவு மட்டும் அவளையே சுற்றி சுற்றி வந்தன. இறுதியாக அவனது ஊருக்கான தரிப்பு வரவே அவன் இறங்கி கொண்டான். வீட்டை அடைந்தவன் சென்று கால் முகங்கழுவி ,தேநீருக்காக தயாரான போது , அம்மா சில படங்களுடன் வந்தாள். படங்களை பார்த்தது ம அவனுக்கு அதிர்ச்சி .. அவளது படமும் இருந்தது . அவளுக்கு தெரியாமல் அவளது தந்தை அவளுக்கு திருமணப்பேச்சில் ஈடுபட்டிருந்தார். எனபது . ......அவள் வீட்டை  அடைந்ததும் தான் தெரியவரும். .இரு குடும்பமும் பேச்சு வார்த்தை நடத்தி செந்து ........மனம் கொண்ட அதே பெண் மண மகளாக  வாய்த் தாள் . திருமணம் இனிதே நிறைவடைந்தது .

ரயில் பயணம் (சிநேகம் ) பாதி வழியில் முடிந்து விடும் என்பார்கள். ஆனால் இவர்களையும் இணைத்து வைத்தது அந்த ரயில் பயணம் (சிநேகம்) தான்.

Tuesday, October 6, 2009

நன்றி சொல்ல உனக்கு ( உங்களுக்கு )

நன்றி சொல்ல உனக்கு ( உங்களுக்கு ) வார்த்தையில்லை எனக்கு ...........

மனதில் இனம் தெரியாத ஒரு உணர்வு, வார்த்தைகளாக் வெளி வரும் இந்த வேளையில் .நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தையில்லை  எனக்கு .......இன்றோடு நான் எழுதிய ஐம்பதாவது பதிவு ..........இந்த வருடம் சித்திரை திங்கள் ஐந்தாம் திகதி எனது முதற்பதிவு .......ஐந்து மாதங்களில் நான்  பதியும் ஐம்பதாவது பதிவா ?.......திகைத்து போகிறேன். அதுவும் நண்பர்கள் சிலர் ஞாபக் படுத்திய பின் .......என்னாலே  என்னயே நம்ப முடியவில்லை. பொறுமையாக் நான் கிறுக்கும் சிறு கதைகளுக்கு எல்லாம் பினூட்ட்மிட்டு ...கருத்து சொல்லி என்னை தட்டிக் கொடுத்த உறவுகளுக்கு .என் உள்ளத்தால் சொல்லும் வார்த்தை" நன்றி"  உங்களுக்கு .......

நான் வலைப்பதிவுக்கு தட்டித் தடுமாறி வந்து திகைத்து நின்ற போது வழி காட்டிய  உள்ளங்களையும் நினைத்து கொள்கிறேன். மேலும் எனக்கு ஊக்கமளித்த வாசகர்களுக்கும் இந்நேரம் மறக்கவில்லை . தமிளிஷ் தமிழ் மணம் மூலமாகவும் வாசகர்களை நான் கவர்ந்துள்ளேன் என்பதை நினைக்கும் போது , என் பதிவுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே எனக்கு தோன்று கின்றன. மேலும் என்னை வளர்த்து , பல படைப்புகள் தர அந்த எல்லாம் வல்ல இறைவன் என்னை உடல் நலமுடன் வாழ வைக்கவேண்டும் என கூறி விடை பெறுகிறேன். நட்பான வணக்கமுடன் உங்களில் ஒருத்தி நிலா மதி

Monday, October 5, 2009

இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள்.

இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத    உள்ளங்கள்.

அழகான தேம்சு நதியின் காற்றுக்கு பெயர் போன அந்த நரகத்தில் முன்பே குடியேறிய ஒரு குடும்பத்துக்கும் அண்மையில் புலம் பெயர்ந்த வசதியுள்ள அந்த குடும்பத்துக்கும் இனணைப்பு பாலமாக அமைந்தது அந்த சம்பந்தம். நடராஜா வாசுகி தம்பதிகளுக்கு சுகித்தா அருமையான செல்லப்பெண் . சமையல் தவிர அத்தனை கலைகளும் அவளுக்கு இருந்தன . ஆடுவாள் பாடுவாள் , கூடவே செல்வ செழிப்பும் இருந்ததால்நன்றாக  படித்து படமும் பெற்று க்கொண் டாள்  . தந்தைக்கு செல்ல பெண்ணாய் இருந்ததால் அவளுக்கு வேண்டுமளவு சுதந்திரமும் கொடுத்தார். சில் வருடங்களுக்கு முன்பே குடியேறிய ரங்க நாதன் சாவித்திரி குடும்பத்துக்கு தூரத்து உறவு . இவர்களுக்கு மூன்று ஆண் மக்கள். புலம் பெயர்ந்து சென்று இருந்தார்கள். நாடுப்;பிரச்சனையால். அடிக்கடி நடராசாவும் ரங்கநாதனும் சந்தித்து கொள்வார்கள். காலபோக்கில் நட ராஜ பெண்ணுக்கு மாபிள்ளை தேடுவதில் மும் முரமாய் இருந்தார்.பேச்சு வாக்கில் , சாவித்திரி ஏன் தூரத்துக்குள் போவான். நம்ம் பையன் சுதாகரை  , கட்டி வைக்கலாமே என்று ஆசையுடன் கூறினாள். ரங்கநாதனுக்கும் இது சரிஎனபடவே. நட ராஜனிடம் ஒரு நாள் இதைக் காதில் போட்டு வைத்தார். இரு குடும்பமும் பேச்சு வாக்கில் ஒத்து போகவே நட ராஜனின் ஒரே ஒரு செல்லப பெண்ணுக்கும் ரங்கநாதனின்  மூத்த மகன் சுதாகருக்கும் மிகவும் கோலா கலமாக திரு மணம் இனிதே நிறைவேறியது .

நாட்களும் சொல்லிக்கொள்ளாமல் ஓடிச்சென்றன. ஆனால் இருவரின் மனங்களும் ஒன்றிணைய வில்லை. சுகியும் விட்டுக்க்கொடுபதாயில்லை  அவளின் போக்கு , ஆங்கிலப்படம் ....டான்ஸ் , பார்டி களில் ஈடுபட்டது. கணவனை யும் அழைப்பாள். அவனுக்கு இது விருப்பமற்ற  செயல் . அவள் நண்பிகளுடன் கிளம்பி விடுவாள். சில சமயம் கணவன் வீடுக்கு வந்தால் இவள் ஒரு குறிப்பு எழுத்தை வைத்தது விட்டு  கார் எடுத்து கொண்டு நண்பிகளிடம் போய்விடுவாள். இதற்கிடையில் அவள் கருத்தரித்தாள்.
இதையறிந்ததும் ரங்க நாதன்  குடும்பம் மிகவும் ஆவலுடன் தங்கள் பேரபிள்ளையை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவள் சுகி இப்போது தேவையில்லை என்று கலைக்க முயற்சித்தாள். டாக்டாரிடம் சென்ற போது நாட்கள் தள்ளி போனதால் கலைக்க முடியாது என்று சொல்லி விடார்.. வேண்டாத கருவாக சுகி கருவைச் சுமந்து ஒரு ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள். அதன் பின்பும் அவள் மாற வில்லை. குழந்தையை தன் தாயிடம் பராமரிக்க விட்டு விட்டு தன் எண்ணம் போல திரிந்தாள். அவள் கணவன் சுதாகருக்கு சகித்து கொள்ள   முடியவில்லை. அவர்களுள் லேசான பிளவு ஏற்பட தொடங்கியது கணவனுக்கு சமைத்து வைக்க மாடாள். அவன் பாதி நாட்கள் தாய் வீடுக்கு சென்று விடுவான். நடராஜனுக்கு செல்ல பெண்ணை கண்டிக்க முடியவிலை. சுகி இன்னும் , பொறுப்பு அற்றவளாகவே   இருந்தாள். சுதாகருக்கும் வாழ்கை  கசந்து விட்டது இரண்டு வருடங்கள் சென்றன . சுகி தாயுடனும்  சுதாகர் தன்   தாயிடமும் வாழத்தொடங்கினர்.

காலம் உருண்டோடியது .இரண்டு வருடங்களான. இரு குடும்பங்களிடையே  .பழைய உறவு அற்று போய் இருந்தது   ஒரு நாள் சுகிக்கு தபாலில் , விவாகரத்துக்கான கடிதம் வந்தது . இருவரும் , சுய விருப்பத்தின் பேரில் விவாகரத்து பெற்றனர். குடும்பங்களை இணைக்கும் எனற , இணைப்பு ப்பாலம் , இரு மனங்களையும் இணைக்க வில்லை .

காலப்போக்கில் அவனுக்கு( சுதாகர் ) கீழ் உள்ள தம்பி மாருக்கு திருமணம் செய்ய விருப்பதால் , அவனும் இளம் வயது என்பதாலும் , அவன்இணைய  மூலம் ஒரு பெண்ணை தேடி மணம் முடித்தான். அவள் ,தான் சாரங்கி , அவள்  எல்லா விதத்திலும் இவனுக்கு பொருத்தமானவளாய் இருந்தாள். குடும்பம், சந்தோஷமாய் இருந்ததில் , ஏனைய அவன் தம்பி மாருக்கும் காலா காலத்தில் திருமணம் நடந்தது. அவர்களின் , அன்பான் விடுக்கொடுபுள்ள உறவில இரு வருடந்தில் ஒரு பெண் குழந்தை வதனாவை பெற்று எடுத்தனர்.சுகி திருந்திய பாடாய் இல்லய். அத்தனை  கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாய் இருந்தாள் . அவளது போக்கின் காரணமாக தந்தை நட ராஜன்  நோய் வாய்பாட்டு , இறந்து போனார்.

ரங்க ராஜன் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்தது. ஒரு தடவை , அவர்கள் ஒரு திருமண விழாவுக்கு சென்று திரும்பும் வழியில் , மழை வேறு , பொழிந்து கொண்டு இருந்தது . வழியில் ஒரு கார் பெரிய மரத்துடன் மோதிக் க்கானபட்டது . சுதாகர் இறங்கி பார்த்தபோது அது .........சுகி என்று உணர்ந்தான். உடனே அவன் வாகனத்தை திருப்பி , அவளை ஏற்றிக்கொண்டு வைத்தயசாலையில் சேர்த்தான். அவள் அளவுக்கு மீறிய போதையில் இருந்தாள்.பிடரிப்பக்கம் பலமாக  அடிபட்டு இருந்ததால் சிகிச்சை பயனற்று ,இறந்து விடாள். சுதாகர் அவள் நிலையை எண்ணிக் கவலைப்பட்டான்.

காலம் வேகமாக சென்றது. சம்பவம் நடந்து ஐந்து வருடங்களாகி விட்டன. சுதாகரின் செல்லமகள் வதனாவுக்கு மூணு வயதாகி விட்டது . அவளது பிறந்த நாளுக்கு சில பொருட்கள் வாங்கி விட்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு சிறுவன் பாடசாலை பையுடன் மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தான் அழுது கொண்டு.
நேரம் மாலை  நேரம் இரவை அண்மித்து கொண்டு இருந்தது ........அந்த சிறுவனை தனியே கண்டதும் சுகுமாருக்கு தன் மகன் எண்ணம் வந்தது . காரை  நிறுத்தி  அண்மையில்  சென்று பார்த்தான். என்ன ஆச்சரியம் .........அது அவனது மகன் கோகிலன்.சுகுமாருக்கு தாங்க முடியாத துயரம்...........சிறுவன் அழுது கொண்டு தனக்கு அம்மாவும் இல்லய் அப்பாவும் இல்லய் ..........அம்மம்மாவீடுக்கு போக பிடிக்க வில்லை என்று அழுது கொண்டே சொன்னான். இறுக கட்டி அணைத்து முத்தமிட்டு தன் வீடுக்கு கூட்டி வந்தான். தன் மாமியாருக்கு தகவல் அனுப்பினான். முறைப்படி கோர்ட்டு உத்தரவுடன் மகனை பெற்றுக்கொண்டான்.

கோகிலனுக்கு வத்னாவை மிகவும் பிடித்து கொண்டது ....... வதனா கோகிலன், இணை  பிரியாத சகோதரர்களாக விளையாடுவதை ......சாரங்கா பார்த்து ரசித்தாள். .பிறந்த நாட பரிசாக தன் அண்ணா தனக்கு கிடை த்ததை எண்ணி .மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

இணைத்து வைத்த திருமணக்களால் இணைந்து போக முடியாத உள்ளங்கள் ....பிரிந்து விடுகின்றன. சில விட்டுக்கொடுப்புகளுடன் சமுதாயத்துக்காக வாழ்கின்றன. ..இரு மனங்களும் இணயாத விட்டுக் கொடுப்பற்ற உறவுகளால் எத்தனை  குடும்பங்கள் சீர் குலைகின்றன......


Saturday, September 26, 2009

வேப்ப மர உச்சியில்............

வேப்ப மர உச்சியில்............

அந்த ஊரின்  துடிப்பான இளையவர்கள் சேர்ந்து . கொள்ளும் இடம்.  புதிதாக ஒரு எண்ணம் தோன்றவே  ராகுல் அண்ட் கம்பனி தீட்டினார்கள் ஒரு திட்டம்.   மச்சான் ஆவி.........இருக்காடா ......சென்ற வருடம் முதலியார் மாணிக்கம் , குச்சொழுங்கை ...வேப்பமரத்தின் நிழல் வழியே வந்த போது பேயடித்தது உண்மையாடா ......?   பல வாறு சிந்தனைகள் ......கதைகள் ....மறுத்தல்கள் நடுவே வீரமுள்ளவன் ....அவ்வூர் சேமக்காலையில் (கிறிஸ்துவ் மயானம்).வரும் வெள்ளி இரவு ,நள்ளிரவு  பன்னிரண்டு  ஐந்து( 12 .05  ) நிமிடமளவில் வேப்பங்கன்று நடுவதாக தீர்மானிக்க பட்டது.......இந்த மாணவ குழுவில் ஐவர் இருந்தனர் ராகுல் அதில் துடிப்பான இளைஞ்ன் ஆவி இல்லை ..........என்றுவாதிடுபவன். மாணவர்கள் தங்களிடையே மச்சான்" .....என்று அழைத்து கொள்வர் .இது கூட்டாளி ..தோஸ்த்து என்று பொருள் படும்.

அந்த நாளும் வந்தது .......காலையில் ஒன்றுகூடிய போது ராகுல் தான் அங்கு சென்றுவீரம் காட்டுவதாக, வேப்ப  மரம் சுடலையில் நாட்டுவதாக முடிவு செய்ய பட்டது........இதில் சிலர் இறுதியாண்டு கல்லூரி பரீட்சைமுடிவை எதிர் பார்ப்பவர் சிலர் இறுதியாண்டு படித்துகொண்டிருப்பவர்கள். அப்போதுகைத்தொலை பேசி வசதியெல்லாம் இல்லை.  சைக்கிள் தான் அவர்கள் வாகனம்.

மாலை இருள் கவிழ்ந்ததும் ,கன்று  நடுவதற்கு குழி தோண்டுவதற்கு ,மண் வெட்டி , பிக்கான், அலவாங்கு ..........மூன்றுஅடி உயர வேப்பங்கன்று (கல்லூரியில் புரஜக்டு க்கு தேவை என் வீடில் களவாடினது.)...........கொண்டு போய் சேம காலையின்  ஒரு சுவர் ஒரமாக மறைத்துவைக்கபட்டது....இரவு எட்டு மணியில் எல்லோரும்கூடி முடிவெடுத்தபின் கலைந்துவிட்டனர் ..........ராகுலனுக்கு தூக்கமே வரவில்லை .......வீடில் இறுதியாண்டு  பரீட்சைக்கு ப்படிப்பது போல பாவனை செய்தான். வீட்டில் எல்லோரும் உறங்க சென்றுவிட்டனர். மணி இரவு பதினொன்றே முக்கால் , அறைக்குள் சென்று ,அரைக்காற்சட்டை போடுக் கொண்டு  அதன் மேல் .சாரம் (லுங்கி)அணிந்தான். .நெஞ்சு சம்மட்டிய் கொண்டு அடிப்பது போல அடித்து கொண்டது. பூனை போல வீட்டு மதிலால் ஏறி மறுபக்கம் குதித்தான் . மடியில் செருகியிருந்த்த் டார்ச் லையிற் ...பத்திரமாக இருப்பதை  உறுதி செய்துகொண்டான். கைக்கடிகாரம் மணி பன்னிரண்டு காட்டியது. முன்னரே கொண்டு வைத்திருந்த பொருட்களை மதிலால் உள் நோக்கி வீசினான். பின் தானும்குத்தித்து ..........அவர்கள் குறித்த திசை நோக்கி பொருட்கள் எடுத்துக்கொண்டு நடந்தான் அந்த இளம் குளிரிலும் நெற்றியால் வியர்வை வழிந்தது . உட்காந்து முதலில் புல்லை மண்வெட்டியால் செருக்கினான்.இரண்டு சதுர அடிக்கு  செதுக்கிய பின் ...இடையில் தண்ணீர் விடாய் போன்ற உணர்வு....பின் அலவாங்கினால் இரண்டு குத்துக்கள் போட்டதும் கற்பாறை தென்படவே  அதை தனக்கு  பின் குற்றி செருகி விட்டு பிக்கான் எடுத்து கிண்ட தொடங்கினான். இரண்டு மூன்று கிண்டல் போட பின்னாக இருந்து அவன் சாரத்தை  யாரோ இழுப்பது போன்ற உணர்வு. பயம்  .....தனித்த  உணர்வு...ஒருவாறு தன்னை  தேற்றி மீண்டும் ஓங்கி நிலத்தில் குழி பறிக்கும் முயற்சி. மீண்டும் பின்னால் பிடிதிளுப்பது போன்ற உணர்வு..........அந்த வேளையில் தூரத்தே ஒரு நாயின் ஊளைச்சத்தம். நாய்களின் கண்களுக்கு பேய் தென்படும்  என்று பாட்டி கதை  சொன்ன ஞாபகம். ஒரு வேளை ஆவி தன்னை நோக்கி வருகிறதோ ............... சாரத்தை கழற்றி விட்டு ஒரே ஓட்டம் ....வீடு போய் சேர்ந்து எப்படி படுத்தான் என்று தெரியவில்லை. மறு நாள் காலை அவனை தாய் தட்டி எழுப்பிய போது உடல் அனலாக கொதித்து. அவ்ள்மீண்டு போர்த்திவிட்டு ...குடிநீர்க் .கசாயம் வைக்க சென்று விடாள். காலையில் நண்பர்கள் சென்று பார்த்த போது ராகுலனின் சாரம் அலவாங்கினால் குத்தபட்டு   (சாரத்தின் தலைப்பு  பகுதியில் அலவாங்கு இறங்கி இவன் அசையும்
போது பின் நோக்கி இழுத்தது ).காணப்பட்டது ஓஹோ ...........மச்சான் இரவு இங்கு வந்திருக்கிறார்.போட்டியில்  வெல்லும் எண்ணத்துடன் என்று நண்பர்கள் கூடி கதைத்து கொண்டார்கள். அன்று மாலை ராகுலனை காணவில்லை  என்று வீட்டுக்கு  சென்ற போது அவன் காய்ச்சலில் இருப்பதை  எண்ணி தங்களுக்குள் சிரித்து கொண்டார்கள். தாங்கள் போய் பார்த்ததையும் சொல்லி எள்ளி நகையாடினார்கள்.

உண்மையில் பேய் என்பதே இல்லய் அவரவர் மனப் பயம் தான் அருண்டவன் கண்க்கு இருண்டதெல்லாம் பேய் ......... பேய் பிடித்தவர்கள் என்பது உண்மையில்  மன நிலைக் கோளாறு  .மன அதிர்ச்சியால் ஏற்படுவது ..........முற்றும். .

மண் வெட்டி ..........ப வடிவ மரப்பிடி  போட்ட மண் கொத்தும் கருவி .........
அலவாங்கு .............இரண்டு மூணு கிலோ உள்ள முனை கூர்மையான இரும்பு கம்பி
பிக்கான்........இரண்டு முனையும் கூர் உள்ள பிறைவடிவ மரப்பிடி  போட்ட இரும்பு

இந்த பாடல் நினைவு வருகிறது ........

.சின்ன பயலே சின்ன ப்பயலே சேதி கேளடா...............
வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதென்று ....
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க .....
வேலையற்ற வீணர்களின் தேவையற்ற வார்த்தைகளால்
உன் வீரத்தை  முளையினிலே  கிள்ளி வைப்பாங்க.............

Tuesday, September 22, 2009

பாடம் சொன்ன பாப்பா .....(குழந்தை ).

 பாடம் சொன்ன பாப்பா (குழந்தை )

      வாயிலில் தந்தையின் மோட்டர் வண்டியின் ஒலி கேட்கவே குட்டி அக்ஷயா , ஓடோடி சென்று வாயில் கதவை (கேட்) திறந்து விடாள். பின் தந்தையின் மடியில் உட்கார்ந்த அந்த சிறு  இடை வெளியில்பயணம் செய்தாள். சத்தம் கேட்ட லக்ஸ்மி , வாயிற் படிக்கு செல்லவும் குட்டி அக்ஷயா தாவி , தோள் மீது உட்கார்ந்து கொண்டாள். . வேலைக்களையால் வந்த மாதவன் , குளித்து வரவும் , அப்பாவின் தேநீருக்கு பங்கு க்கு நின்றாள் தானும் ஒரு மிடறு குடித்து சுவைப்பதற்காக என்று . மூன்று வயதான் அக்ஷயா , நல்ல அழகான் பெண் அலை போன்ற அழகான் கேசம், முத்து பற்கள். நீலக்கண்கள் என்று எல்லா அழகையும் சேர்த்து பிறந்திருந்தாள். வீடிலே எல்லோருக்கும் அவள் செல்ல பிள்ளை . தேநீர் வேலை முடிந்த்ததும் , லக்ஸ்மி இரவு உணவு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தாள். மாதவன் அன்றைய தினசரியில் மெய் மறந்திருந்தான்.

        சிறுமி அக்ஷயா , தனது விளையாட்டு பொருட்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள். அவளது அப்பப்பா , பின் வீட்டு தோட்டத்தில் இருந்து நாளை சமையலுக்கு தேவையான , காய் கறிகளை ஆய்ந்து கொண்டு வந்திருந்தார். விளையாட்டு பொருட்கள் சலித்து போகவே  , மூணு சில்லு  சைக்கிள் வண்டியை உருட்டிகே கொண்டு இருந்தாள் .
சிறிது நேரம் செல்லவே அதிலும் சலித்து போய் . படுக்கையறைக்குள் சென்று விடாள்.வாயிலில்  மணிச் சத்தம்கேட்கவே ..........மாதவன் சென்று பார்த்தான்.

வீடுகாரர் எல்லோரும் தங்கள் வேலையில் மும்முரமாக்  இருந்தனர். அவளது பாட்டி தனது பழைய சீலைகள் உள்ள பெட்டியை திறந்து ,  அதை ஒழுங்காக அடுக்கி கொண்டு இருந்தார். சிறுமி அக்ஷயாவைகானவே இல்லய் .திடீரென , மாதவன் தன் குழந்தை நினைவு வந்தவனாய் , படுக்கை  அறையில் சென்று பார்த்தான் . அவன் கண்ட காட்சி அவனை  அதிர்ச்சிக்குள்ளாக்கியது .........குட்டி அக்ஷயா ..........கண்ணாடி முன் நின்று ,கண்ணில் தந்தையின் கூலிங் கிளாசும் , கையில் குழாய் போல (சிகரட் ) சுருட்டிய வெண் பெப் பர் , வாயில் வைப்பதும் எடுபப்துமாக  அப்பா போல பாவனை செய்து கொண்டிருந்தாள்.
மாதவன் ரகசியமாக் அவளை குழப்பாமல் , வீட்டார் அனை வருக்கும் காட்டினான் . மாதவனுக்கு அன்று இரவு ஒரே குழப்பமாக் இருந்தது .தன்னை  பார்த்து தன் மகள் செய்து விடாளே என்ற கவலை ......காலயில்  கண் விழித்ததும் தீர்மானித்தான் ஆரம்பத்தில் கஷ்டமாக் தான் இருந்தது . தான் விடா முயற்சியால் கொஞ்சமாக் குறைத்து பின்பு  ஒரு நான்கு மாதத்தில் முற்றாக விட்டு விடான்.

தந்தைக்கு பாடம் சொல்லி தந்த குழந்தை ...

..( கதை உண்மை) புகை பிரியர்கள் மன்னிக்கவும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

Friday, September 18, 2009

நான் என் வரலாறு கூறுதல்.



நண்பர் ராஜராஜன் என்னை நான் பதிவர் உலகுக்கு  வந்த வரலாறு பற்றி
எழுத  சொல்லியதற்கிணங்க. இதோ சில வரிகள். 

எனக்கு படிக்கும் காலத்தில் ஆடல்... பாடல் ...நாடகம்.... நாட்டுக் க்கூத்து மேடை பேச்சு என்பன நன்றாக வரும் . எனது முதலாவது  கலைத் திறமை ஒன்பது வயதில் என் ஒன்றுவிட்ட சகோதர பையன் களுடன் ஆண் வேடம் போட்டு வில்லுபாட்டு நடத்தியது என் ஊரவாரின் பாராட்டை பெற்றேன். எனக்குள்ளே கலையுலகவாழ்வு உள்ளடங்கி இருந்தது . இளம் வயதில் சின்ன் கதைபுத்தகங்கள். வாசிப்பேன். எனது மூத்த சகோதரி வாங்கும் குமுதம் கல்கி  ஆனத்தவிகடன் என்பன் எழுத்துக்கூட்டி வாசிப்பேன் . எனக்கும் அவருக்கு பத்து வயது வித்தியாசம் இடையில் ஆண் சகோ தரன்கள். பின்பு உயர்வகுப்பு முடிந்து  ஆசிரிய பயற்சிக்கு சென்று ஆசிரியையாக கடமையாற்றியபின் திருமணம் வந்தது. என் வெளியுலகவாழ்வு குறைந்து  இருகுழந்தைகள் வீடு.... வேலை என்று ஒரு முற்று புள்ளி வந்தது . ஓய்வு நேரங்களில் முன்பு கற்று இருந்த தட்டெழுத்து பயிற்சி கைகொடுக்க் அதை மாணவ மாணவிகளுக்கு சொல்லி கொடுத்தேன். பொழுது போக்காகவும் , பயனுள்ளதாகவும் இருந்தது .திடீரென ஒரு நாள் நம் நாட்டு ப  பிரச்சினை உச்சக்கட்ட்மடைய ..என் இரு கைக்குழந்தை  தைகளுடனும் .இடம்பெயர்ந்தேன். எதுவுமே என் வீட்டில்  எடுக்கவில்லை அன்று தொடங்கிய ஓட்டம் ஒவ்வொரு ஊராக சென்று புலம் பெயர்ந்து கனடா மண்ணிலே காலடி பதிக்கவைத்து . என்னவனுக்கு எங்கள் உயிரை தவிர வேறெதுவுமே வேண்டி  இருக்கவில்லை. சில காலங்களில் சற்று நோய்வாய் படேன். வெளியுலகமும் குறைவாக இருந்தது. என் பிள்ளைகளும்  வளர்ந்து வர அவர்களுக்கு கணனி வாங்கி கொடுத்தார்.

நான் மீளவும் கணணி  கற்று ஒரு தடவை "யாழ் இணையம் "எனும் ஒரு தளத்தின் அறிமுகம் கிடைத்து தமிழ் எழுத கற்று கொண்டேன். சில தடவை தமிழ் எழுத தனி விசைபலகை வாங்கவேண்டுமோ என் நினைத்ததுண்டு. அங்கும் சிலர் அறிமுகமாகி கூகிள் வழி மொழி மாற்றி மூலம் (.google transliterte ............) தமிழ் எழுதுகிறேன் இடையில் தமிழிச் போன்ற தளங்களும் வாசிப்பேன். ஒரு நாள் சில மாதங்களுக்கு முன் .blogger....wordpress ..... .என்பதை ஆராய்கையில் இதனுள் நுழைந்தேன். பகலில் மருந்து மாத்திரைகளினால் தூங்கி  எழுந்த நான் கண்ணியில் நுழைந்த பின்பகல் தூக்கம் மறந்தேன் என் னுள்ளே ஒரு உற்சாகம் ஒருவகை மலர்ச்சி .......கணணி ஒரு கடல் என்று கண்டு கொண்டேன். இதன் மூலம் ஆரம்பத்தில் சந்துரு, கிருத்திகன்  அபூ யோ சீமான் கனி  கதிர் ....எனும் நண்பர்கள்  அறிமுகமாகி(யாராவது விடுபடால்   மன்னிக்கவும் )  இன்று நாற்பத்தியேழு நட்புகளை கொண்ட ஒரு குழுவே உண்டு . தமிழ் நாட்டு  உறவுகள் கருத்து எழுதும் போது தொப்புள் கொடி உறவுகளின் அருகாமையை உணர்கிறேன்.அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கூட எழுதுகிறார்கள் என்று என்னும்போது என் இறக்கைகளால் வானில் பறப்பது போன்ற உணர்வு. இந்த வலைப்பதிவுக்கு வந்து சில அதாவது ஒரு சில மாதங்கள் மட்டுமே இடையில் சில் நுணுக்கங்களை இணைக்க தெரியாமல் தி ண்டாடியதும் உண்டு.

மீண்டும் பாடசாலை வாழ்க்கை போன்ற ஒரு உணர்வு.  நட்புக்கள் ....மடல்கள் ....பாராட்டுக்கள். வலை உலகம் ஒரு தனி உலகம். இணைந்திருப்போம் நண்பர்களாக.நீங்காத நினைவுடனும் மாறாத அன்புடனும். காலமெல்லாம்
கணனி நீடூழி வாழ்க .

Thursday, September 17, 2009

பார்வைகள் ....பலவிதம்.

பார்வைகள் ....பலவிதம்.

       நிரா எனும் நிரஞ்சலா அழுது வீங்கிய கண்களுடன். காணப் பட்டாள் . என்னம்மா நடந்தது என்று மாமியார் வினவ விம்மலும் விக்க்லுகுமிடையில் இதோ சொல்கிறாள் கேளுங்கள். கவலையிலாமல் துள்ளி திரிந்த பள்ளிப்பருவம் ,நிராவையும் சுகந்தனையும் காதலர்கள் ஆக்கியது . இளமை வேகம் , பயமறியாத பருவம். ஒருநாள் நிரா வீட்டை விட்டு சுகந்தனை நம்பி வந்து விடாள். அப்போது சுகந்தன் உயர்கல்வி  வகுப்பு படித்து கொண்டிருந்தான் . பகுதி நேரமாக் ஒரு கடைத்தொகுதியில் சிறு வேலையும் செய்து கொண்டு இருந்தான்.அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நண்பர்களின் உதவியுடன் பத்தொன்பது வயது நிராவும்,  இருபத்தியொரு வயது சுகந்தனும் பதிவு திருமணம் செய்து கனடா நாடில் ஒரு சிறு நிலக் கீழ்   குடியிருப்பில் வாழ்கையை தொடங்கினர். சுகந்தன் இரு சகோதரிகளுக்கு அண்ணன். அவனது தாய் தந்தையரும் பெண் வீடாருக்கு பயந்து ஏற்றுக்கொள்ள்வில்லை. கடைசியில் சுகந்தனின் தந்தையின் அனுமத்யுடன் , சுகந்தனின் தாய் அவர்களது வீடில் ஒரு அறையில் வசிக்க அனுமதித்தாள்.  மீளவும் வாழ்கை தொடங்கியது இருவரும் படிப்பை நிறுத்தி விட்டனர் .

.     ஒரு நாள் நிரா அவனது தங்கையுடன் , ஒரு கலை விழா பார்க்க ஆசை பட்டாள் சுகந்தன் தனக்கு வேலை  என்றும் தங்கையுடன் அனுப்பி வைத்தான். அங்கு சுகந்தனின் நண்பனொருவனை கண்டனர். அவன் இன்னும் சிலருடன் காண ப்பட்டான் அவன் வந்து இவர்களுடன் உரையாடினான். அதில் ஒருவன் "குட்டி யாரடா .......வளைச்சு பார்க்கலாமா ?   என்று கேட்க சுகந்தனின் நண்பன் அவள் தன் நண்பனின் மனைவி என்று கூறினான்.

சில் வேடிக்கை நிகழ்வுகளை பார்த்து விட்டு  அத்தோடு விழா  நிறைவுற்று அவர்கள் வீடு வந்தார்கள். சுகந்த்னின் நண்பன் நடந்தவற்ரை .சுகந்தனை கண்ட போது  கூறி விடான். தொடங்கியது பிரளயம் ...நிராவுடன் வாக்கு வாதப பட்டான் , அன்று சற்று  மதுவும் அருந்தி இருந்தான் . காரணம் அவள் கையிலாத சட்டை யும் ஜீன்சும் அணிந்து இருந்தாள். அந்த விழாவுக்கு. நீ ஏன் அவ்வாறு போனாய் .........என்று அவன் கேட்க
நீ என்னை பார்த்த அதே ஆடைகள்  தான்.  நான் கவ்ர்சியாக், எதுவும் புதிதாக வாங்கஇல்லை  என்றும் வாதிட்டாள்  சுகந்தன் கோவத்தின்  உச்சத்தில் அவளை அறைந்து விடான். அதனால் தான் அவள் அழுது கொண்டு இருந்தாள்.  பக்குவமடையாத மனம் , இளம் வயது , சகிப்பு தன்மையற்ற குணம் இந்த இளம் தம்பதிகளை வேதனையில் ஆழ்த்தி விட்டது. அறியாத வயது புரியாத் உறவு பிஞ்சிலே பழுத்த வெம்பல்கள்.

வாழ்க்கை இலகுவானதல்ல. எதிர் நீச்சல் போட்டு வாழவேண்டும். அது ஆயிரங்காலத்து பயிர். ஆல் போல் தழைத்து அறுகு  போல் வேரூன்றி நின்று நிலைத்து நீண்ட காலம் வாழவேண்டும்.
பள்ளி வயதிலே பருவ வெறியிலே
துள்ளி வருவது துன்பம் தருவது காதல். .
மனமும் உடலும் பக்குவ பட்டு
திருமணத்தில் முடிய வேண்டும் காதல்.
காலமெல்லாம் காதல் வாழ்க .

Tuesday, September 15, 2009

காதல் ...........அழகு ....கடவுள்...... பணம்

காதல் ...........அழகு ....கடவுள்...... பணம்

.பதிவர் உலக நண்பர் யோ அவர்கள் என்னை  இது பற்றி எழுத அழைத்ததால் , அன்பான அழைப்பை தட்டி கழிக்க   முடியவில்லை. இது ஒன்றும் கஷ்டமான் வேலையுமில்லை.

  • முதலில் கடவுள்........என்னை படைத்த  அந்த சக்திக்கு இறைவனுக்கு நன்றி...........இளமைக்காலத்தில் மிகுந்த பய பக்தியுடன் வளர்க்க பட்டேன். நான்கிறிஸ்டியன் பெண். பாடகி .கோவில் லில் வாசகி ......தினமும் கோவிலுக்கு போய் தான் மறுவேலை.

  • பணம்..........இது இல்லாவிடாலும் தொல்லை ...இருந்தாலும் இதை  பாது காக்கும் தொல்லை. அளவோடு உழைத்து அளவோடு வாழனும். ஐந்து ரூபா உழைத்தால் அதற்கேற்ற செலவு .........ஐம்பது உழைத்தால்  அதற்கு ஏற்ற செலவு எங்கிருந்தாவது வரும். கொஞ்சம் இருந்தாலும் கஷ்ட படுபவர்களுக்கு கொடுக்கணும். 

  • காதல் .............உள்ளத்து உணர்வு எல்லோருக்கும் வரும் . மனம் கொண்டது மாளிகை , நானும் காதலித்தேன் . போராடி வென்றேன்.சோதனை  வேதனைகளைக் கண்டு சாதனை புரிந்தேன். யாராலும் கொடுக்க முடியாத மன அமைதியும் , சாடிக்கு ஏற்ற மூடி . 
  • அழகு .............ஒருவருடைய ரசனை என்றும் சொல்லலாம். அது பார்ப்பவர் உள்ளதை பொறுத்தது . இயற்கை , பூக்கள்,  குழந்தைகள்,  நீலக்கடல்,  வீசும் தென்றல். தாய்மை  அழகு. 

யாரவது முடிந்தவர்கள் தொடரலாம். ரசனையுள்ளவர்கள் தொடரலாம். நட்புடன் நிலாமதி

Saturday, September 12, 2009

தேவதையிடம் பத்து வரங்கள்.

தேவதையிடம் பத்து வரங்கள்.

இன்று தேவதை உங்கள் முன் தோன்றி பத்து வரங்கள் தருவதாக் கூறினால் என்ன வரங்கள் கேட்பீர்கள் .இந்த தலைப்பை ஆரம்பித்து அதை  தொடரும்படி என்னிடம் மேனகா சத்தியா கேட்டுக்கொண்டார். அதன் படி ஏன் பத்து ஆசைகளை  வரங்களாக் கேட்கிறேன்.

  • (1)   மீண்டும் என் தாய் மண் மீது தோன்ற வேணும். ( கடைசியாய் ஒரு  வார்த்தை சொல்லாமல் சடுதி மரணம் அடைந்து  விடார்.)
  • (2) அழகான் அந்த பள்ளி வாழ்கை (அப்போது புரியவில்லை) இப்போது தேடுகிறேன்.
  • (3)என் தாய் மண்ணில் , மீண்டும் வாழ வேண்டும் தொலைத்த இன்பமெலாம்     பெறவேண்டும்.
  • (4)என் சக உறவுகள் ஒரு நாளில் ஒரு இடத்தில கூட வேண்டும்.
  • (5)உலகம் முழுக்க சுற்றி  வர ஒரு பறவையாய் மாறவேண்டும்.
  • (6)என் தமிழ் ஈழத்தனி நாட்டை உலகம் அங்கீகரித்து , அதை உறுதி படுத்தி ஈழத்த்மிலரெல்லாம் அங்கு வாழவேண்டும்.
  • (7) உலகமெல்லாம் வறுமை ,நோய் பிணி ஒழிய வேண்டும்.
  • (8)என் தாய் நாட்டில் ஈழத்து போரால் சடுதி மரணம் அடைந்த்த்வர் உயிர் பெற்று எழவேண்டும்.
  • (9)இறக்கும் வரை நோயிலாதவாழ்வு வேண்டும்.
  • ( 10)வேண்டியது எல்லாம் கொடுக்கும் தேவதை என் முன் நிஜமாக்   ோன்ற வேண்டும். ..............இதை தொடர நான் அழைப்பவர்கள்.

மெயசொல்ல போறேன் (கிருத்திகன்)
சந்து ருவின் பக்கம் ....சந்து ரு)
யோ வாய்ஸ் ..........யோகா
ஈரோடு கதிர் அவர்கள்
சீமான் கனி அவர்கள் 
சப்ராஸ் அபூ பக்கர்
கவிக் கிழவன் யாழவன்..
மற்றும் என் தளத்தை  பார்வையிடும் உறவுகள் எவரும் எழுதலாம்.எங்கே தொடருங்கள்.பார்க்கலாம். .

Friday, September 11, 2009

அவளுக்குள் ஒரு மனம் ....

அவளுக்குள்  ஒரு மனம் ....

 கடிகாரம் மணி ஆறு அடிக்க ...நித்திரையில் நின்று எழுந்த மாதவி , காலைகடனை முடித்து அடுப்பை பற்ற வைத்து தேநீர் போட தயாரானாள். ராசா என்றும் ராசமாணிக்கம் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான். மகள் மேகலா காலையில் படிக்க எழுப்பி விடும் படி கேட்டிருந்தாள். தேநீரை ஆற்றி இளம் சூடாக எடுத்து கொண்டு மகளை எழுப்பினாள். அவளும் எழுந்து காலைக்கடனை  முடித்து தேநீருடன்  பாடங்களை படிக்க தொடங்கினாள். மகன் சின்னவன் ஐந்து  வயது. மகளுக்கும் அவனுக்கும் ஆறு வயது வித்தியாசம். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க காலை உணவை தயாரித்து முடித்து கணவன் ராசாவை எழுப்பினாள். மணி எழு ஆகி விட்டது . வாசலில் அவன்  செல்லும் வண்டி தயாராக நின்றது . .மதிய  உணவையும் சிற்றுண்டி களையும்  கொடுத்து வண்டி வரை சென்று அனுப்பி வைத்தாள். மேகலாவும் , கண்ணனும் பள்ளிக்கு நடந்து தான் செல்வார்கள். அவள் நினைத்திருந்தால் இதிவிட மேலான வசதியான வாழ்வு வாழ்ந்து இருக்கலாம்  ஆனால் பாழும் இதயம் கொண்ட காதலால் தான் இன்றைய வாழ்கை.

கடந்த கால வாழ்வை நோக்கி அவள் மனம் அசை போட தொடங்கியது . அப்போது மாதவி பத்தாம் வகுப்பு படித்து கொண்டு  இருந்தாள். தினமும் பாடசாலைக்கு போகும் வழியில் ஒரு சிறு கடை அதில் தான் ராசா உட்கார்ந்து வியாபாரம செய்து கொண்டிருப்பான். அழகான் இளஞ்ன் ஆனால் என்றுமே பொருட்களை எடுத்து கொடுக்க மாடான். அவன்  எழுந்து நின்றதை கண்டதும் இல்லை. உதவிக்கு நிற்கும் சிறு பையன் தான் பொருட்களை எடுத்து கொடுப்பன். ஒரு நாள் இவள் கடையில் பரீட்சைக்காண  பேப்பேர் வாங்க சென்றாள். அன்று அவளது கஷ்ட காலம் அந்த பையன் வரவில்லை. இவளுக்கு நேரம் ஆகி விட்டது சீக்கிரம் தரும்படி கேட்டாள் . கடைக்கார  ராசாவால் எடுத்து கொடுக்க முடியவில்லை.  இவள் வற்புறுத்தவே அதை உள்ளுக்கு வந்து எடுக்கும்படி சொன்னான். இவளுக்கு கோவம் வந்தது . ஏன் "உங்களால் முடியாதோ "?  என்று ஏசி விடாள். சற்றும் எதிர் பாராத ஒரு சம்பவம் நடந்தது . ராசா கதிரையில் இருந்து குதித்து கால்களை இழுத்தவாறே அதை  எடுத்து கொடுத்தான். இவளுக்கு திகைப்பாக போய் விட்டது . ராசா கால் விளங்க்காதவனா ? மிகவும் கவலைப்படாள். அவன் மீது இரக்க பட்டாள். இவ்வாறே இவர்களது நட்பு காதலாகியது.

இங்கு ராசாவை பற்றி சொல்லியே ஆக வேண்டும் அவன் பிறவியில் சாதாரண பையனாக தான் இருந்தான். ஐந்து வயதுக்கு பின் ஒரு கடுமையான காய்ச்சல் வந்து ஒரு ஊசி போடார்களாம் அதன் பின் தான் இப்படி ஆகியது என்றும் இடுப்புக்கு கீழே கால்கள்  பலம் அற்றவையாக போய் விட்டன . ஆரம்பத்தில் கால் களை இழுத்து நடமாடுவான். பின்பு தந்தை ஒரு சக்கர நாற் காலி வாங்கி கொடுத்தார். இவனுடன் கூட பிறந்த்த்வர்கள் எழு பேர் எவருக்கும் இப்படி இல்லை. அவனது தந்தை ஒரு சிறு தொழில் அதிபராயிருந்தார். இவன் மீது மிகவும்பற்று உள்ளவராயிருந்தார். இவன் தான் இல்லாத காலத்தில் சிரமபடுவானே ........யார் கவனிக்க போகிறார்கள் என்று கவலைபட்டு இந்த சிறு கடையை போட்டு கொடுத்தார். காலப்போக்கில் தாயும்  தந்தையும் இறந்து விட்டனர். சகோதரர் களும் ஒவ்வொருவராக் திருமணமாகி சென்று விட்டனர். ராசா மட்டும் தனித்து விடப்படான். இடயில் இவனிடம் உதவி பெற சகோதரர்கள் வந்து போவார்கள். தன் சோக கதையை ஒருநாள். மாதவிக்கு சொல்லியிருக்கிறான் ராசா.

அன்றிலிருந்து அவன் மீது ஒரு இரக்கமும் , நேசமும் அவளுக்குள் உருவாகி அது காதலாகியது.  இதை கேள்வி பட்ட் மாதவியின் பெற்றார் கடுங்கோபபட்ட்னர். நொண்டி என்றும் ஏளனம் செய்தனர். ஒருநாள் இவள் இரவு வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் தாலி கட்டி கொண்டனர். அன்றிலிருந்து மாதவி பெற்றவரால் வெறுக்க பட்டாள். இரண்டு குழந்தைகள் பிறந்த போதும் எவரும் அவளை அணைக்க் வில்லை. ராசாவின் தந்தை இறந்த பின் அவனது வீடு இவன் பெயருக்கு எழுத பட்டதை அறிந்து ராசாவின் சகோதரர்களும் வேறுபாடு காட்ட தொடங்கினர். அந்த கிராமத்தில் இருக்க விரும்பாத ராசா குடும்பம் வீட்டை விற்று பணத்தை திரட்டி , ஒரு மணிக்கூடு திருத்தும் கடை ஒன்றை ஆரம்பித்து இருந்தார்கள். அவனது விடா முயற்சியும் மாதவியின் ஒத்துழைப்பையும் அவர்களை வாழ்வில் முன்னேற்றியது. வெளியிடங்களுக்கு செல்வதற்கு ஒரு வண்டி வாங்கி விடார்கள். அதில் விடாமுயற்சி உள்ள ராசா கை மூலம் இயக்கும் வாகன அனுமதி பெற்றான். மணிக்கூட்டு கடையிலும் பணிக்கு நான்கு பேர் வைத்தது கொண்டார்கள். நகரத்தில் உள்ளவீட்டையும்  சொந்தமாக்கி கொண்டார்கள். ராசா இருந்து கொண்டு செய்யும் பணிகளில் மிகவும் ஆர்வமுள்ளவன். விரைவில் தொழில் நுட்பங்க்களை கற்று கொள்வதில் சிறந்தவன். அவனது ஆசையெல்லாம் வாழ்ந்து  காட்ட வேண்டும் என்பது தான். தன் பிள்ளைகளை படிப்பித்து உயர் நிலைக்கு கொண்டு வரவேண்டும் , கடைசிவரை மாதவியை வைத்து காப்பாற்ற வேண்டும் என்பது தான் ..

கால் ஊனமுற்றாலும் ஊனபடாத இதயத்தை புரிந்து கொண்டது .........அவளுக்குள் ஒரு மனம் ........கதை உண்மை பெயர்கள் கற்பனை. .

Thursday, September 10, 2009

அத்தை மகளே போய் வரவா ?

அத்தை மகளே ...போய் வரவா ?

மேகங்களுள் நீந்தி வந்த விமானம் தரை தட்ட ஆயத்தமாக விமானப்பணிப்பெண் இருக்கை பட்டிகளை சரி செய்யும் படி சைகை மூலம் காட்டினாள் கனவி லிருந்து விடுபட்டவன் போன்று பாஸ்கரன் தன பட்டியை சரி செய்து கொண்டான். விமானம் மத்திய கிழக்கு நாடொன்றில் தரை இறங்கியது. எல்லாம் கனவு போலானது அவனுக்கு. தன தாய் நாட்டை விட்டு புறப்பட்டு கிட்ட தட்ட பதினொரு மணித்தியாலங்கள் ஆகி விட்டன. இங்கு ஒரு கம்பனியில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிட நிர்மாணம் ச ம்பந்தமாக வேலை செய்வதற்கு அனுமதி கிடைத்து வந்திருந்தான். முகவரின் , வரவுக்காக காத்திருந்தவனின் சிந்தனை தாயகம் நோக்கி ............

கொழும்பிலே ஒரு பிரபல கட்டிட  நிர்மாண காரியாலயத்தில் வேலையில் இருந்த போது அன்றாட தேவைகளுக்கும் விலை வாசிகளுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் வெளி நாட்டு   வேலை வாய்ப்புக்காக விண்ணபித்து இருந்தான் பாஸ்கரன். அவனுக்கு இவ்வளவு விரைவில் கிடைக்கும் என எண்ணவே இல்லை. மகிழ்ச்சி ஒரு புறம் அவளது பிரிவு ஒருபுறமாக் புறப்பட்டு விட்டான் . பாஸ்கரன் தந்தையை இழந்து ஒரு வருடமே ஆகியிருந்தது தன் இரு தங்கைகளையும் ஒரு நல்ல நிலைக்கு வைக்கும் பணியும் வீட்டுப் பொறுப்பும் அவனி டம் ஒப்படைத்து விட்டு , தந்தை காலமாகி விடார். அவருக்கு அதிக வயது இல்லய் என்றாலும் , வருத்தமும் துன்பமும் சொல்லிக்கொண்டா வரும் . தலைக்குள் விறைப்பு என்று படுத்தவர்  பின் அது மூளைக் கட்டியாக்கி சத்திரசிகிச்சை வரை போய் சென்ற வருடம் ,   அவரை காலன் கவர்ந்து சென்று விடான்.  பாஸ்கரன்  முடிந்த வரை வீடு பொறுப்பையும் தங்கைகளின் பாடசாலை தேவைகளையும் அவனே பார்த்து கொண்டான். இதுவரை தந்தையின் சேமலாப பணம் கை கொடுத்தது கடந்த மூன்று மாதங்களாக் தான் மிகவும் கஷ்ட படான். இதற்கிடையில் அவனது தந்தையின் ஒன்று விட்ட சகோதரி குடும்பம்   நாட்டு பிரச்சினையால் கொழும்பு வந்து சேர்ந்தார்கள். அவர்களின் ஒரே மகள் சந்தியா , ஆசிரியையாக வவுனியாவுக்கு அண்மையில் ஒரு சிறு கிராமத்தில் படிப்பித்து கொண்டு இருந்தாள். அங்கு பிரச்சினையால் மாற்றல் வாங்கி கொண்டு கொழும்புக்கு வந்திருந்தார்கள். இடமும் புதிது ,அவர்களுக்கு தேவையான் உதவிகளை செய்து கொடுத்தான் பாஸ்கரன். அவர்கள் இவர்களையே  நம்பி வந்திருந்தார்கள். இவனது  நட்பு அண்மையில் தான் காதலாகியிருந்த்து .

முறை மாமா ஏதும் சொல்ல மாட்டார் என்ற தைரியத்தில் ஆழமாக் இறங்கி விடான் காதலில் . ஆனால் தன் தங்கைகளின்  நல் வாழ்வையும் மறக்க வில்லை இரு வீட்டு  பெற்றவர்களுக்கும்  தெரியாது. அதற்கிடையில் இப்படி வெளி நாட்டு  அழைப்பு வரும் என எண்ண வில்லை அவன். விடை பெறும் நாளும் வந்தது

.எல்லோருக்கும் பயணம் சொல்லி புறபட்டு விட்டான் . வவனியா மாமா தான் விமான நிலையம் வரை வந்தார். முதல் நாள் இரவு , சந்தியா கோவிலுக்கு சென்று வரும் வழியில் ,. சந்தியாவை கண்டு சத்தியம் வாங்கி இருந்தான். தான் வரும் வரை தனக்காக் காத்திருக்கும் படியும் ....வந்ததும் பெற்றவர்களிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்வதென்று உறுதியுடன்  கூறியிருந்தான். காலம் இவர்களுக்காக காத்திருக்குமா ? காதல் திருமணத்தில் முடியுமா? குடும்பத்தில் ஒரே பெண்ணான சந்தியாவை இவனுக்கு கொடுப்பார்களா ?  ...........ஏக்கங்களுடன் காத்திருக்கிறான் பாஸ்கரன்.

காலம் தான் இவர்களை சேர்த்து வைக்க வேண்டும்.

Sunday, September 6, 2009

அகேனம் தேடி தவிக்கிறேன்..........

எனக்கு லாபிரா லாமின்  இடமிருந்து ஒரு  அழைப்பு ..........அகர வரிசையில் எழுதும் படி ...........இதோ என் சிந்தனையில்  உதித்தவை.......

அ..... ..அம்மா. எனக்கு உதிரத்தை பாலாக்கி ஊட்டிய என் தாயை நினைகிறேன்.
ஆ  .....ஆண்டவன் . என்னை  படைத்த ஆண்டவனை போற்றுகிறேன்.
இ........இதயம்  ....என் இதயம் கவர்ந்து  அன்புடன் இருக்கும் என் அன்பு அத்தான்.
 ஈ ......ஈ மடல் மூலம் என்னுடன் அன்போடு உறவாடும் வலைப்பதிவு நட்புகள்.
உ ......உலகம் ...உலகம் உருண்டை து ன்பமும் இன்பமும் உள்ளது
ஊ ....ஊர் , உறவுகள் நான் வாழ்த அமைதியான் கிராமம்.
எ.......என்றும் மறக்க முடியாத உறவுகளை தினமும் நினிக்கிறேன்.
 ஏ...... ஏணி போல்  உதவிய ஆசிரியர்களை, என் நெஞ்சம் என்றும் மறவாது ..
ஐ  .... ஐயா என்று நான் அன்போடு அழைக்கும் என் பக்கத்து வீடு உறவு.
ஒ.......ஒரு நாளும் எனை மறவாத இனிதான மனங்களை  எண்ணுகிறேன்.
ஓ......ஓராயிரம் கோடி நன்றிகளை எனை  பெற்றவருக்கு  சொல்லவேண்டும்
ஒள..........ஒளவை பாட்டியாக எட்டாம் வகுப்பில் நடித்த ஞாபகம் ....நினைவில்
            நிழலாடுகிறது .
 .:         அகேனம் தேடி தவிக்கிறேன் என் கணனியில். .உதவி .........உதவி............


    .:  ithu o0o

Wednesday, September 2, 2009

ஈன்ற பொழுதில் .............

ஈன்ற பொழுதில் .............

       அன்று மாலை ராகவனும் மனைவி சாரதாவும் குட்டி பாப்பா , அனு என்கிற அனுஷ்காவும் அன்று மாலை நடக்க இருக்கும் ஒரு பிறந்த நாள் விழாவுக்காக ஆயத்தமாகி கொண்டு இருந்தனர். இங்கு அனுவை பற்றி சொல்லியே ஆகவேண்டும் . ராகவனுக்கு முதல் பெண் குழந்தை...அவன் அம்மாவுக்கு முதல் பெற்றது  பெண்ணாக இருந்ததில் சற்று வருத்தம் தான் . இருபினும் ராகவனுக்கு அதிலெல்லாம் , கவலையில்லை . வேலை முடிந்து வரும் அப்பாவை  காண  ஓடோடி வருவாள். காலில் சொக்ஸ் ( காலுறை) கழற்றுவது , அம்மாவின்  தேநீரை அவன் பருகி இடயில் ஒரு மிடறு பங்கு போட்டு கொள்வது என்று அவன் உலகமே அவள் தான் . நல்ல குறுகுறுப்பான பெண் குழந்தை . வேலையில் சற்று தாமதமானாலும் , அவள் இரவு படுக்கும் நேரமானாலும் தந்தையின் மோட்டார்  பைக் சத்தம் கேட்டால் துள்ளி ஓடி வாசலுக்கு வந்து விடுவாள் "அனுக்குட்டி "என்று அவன் அழைத்தால் அவன் வேலை களையெலாம் பறந்து விடும் ..

பாலர் வகுப்பு படித்து கொண்டிருந்தாள் . நான்கு வயது எட்ட இன்னும் சில மாதங்கலே இருந்ததன . பாடசாலயில் சொல்லிக்கொடுக்கும் சிறு பாட்டுக்களை அம்மா தூங்க வைக்கும் போது பாடிக்காட்டுவாள். அவர்கள் தாயாராகி விடவும் , அவர்களை அழைத்து செல் வாடகை வண்டி , வாயிலுக்கு வரவும் சரியாக இருந்தது. அங்கு சென்றதும் அனுஷ்காவுக்கு ஒரே கொண்டாடம் . சோடனைகள்... அவளை போலவே அம்மா அப்பாவுடன் குழந்தைகள். அன்று பிறந்தா நாள் கொண்டாட இருப்பவர் ஒரு பாட்டி தன எழுபதியிந்தாவது பிறந்த நாள். அவருக்கு விருப்பம் இல்லாமலே   பேரார்களால் ஆயத்தம் செய்ய பட்டது. சிற்றுண்டி பரிமாறபட்டது .சிந்தாமல் அழகாக்  சாப்பிட்டாள். ராகவன் விருந்தின் போது மருந்தாக் சில குடிவகை எடுப்பார். அதனால் தான் அவர்கள் வாடகை வண்டியில் வந்தனர்.மாயா ஜால வித்தைக்காரன் , வித்தை காடினான். கை கொட்டி ரசித்தாள்.  சங்கீத கதிரை போன்ற  , போட்டி விளையாட்டுக்களும் இருந்தன . பாட்டிக்கு கொள்ளை சந்தோசம். இறுதியாக இரவு உணவு உண்பதற்கு முன் ஒரு சிறு போட்டி .........சிறுவர்கள் பாட்டுப்பாடி மகிழ்விக்க வேண்டும்.  சிலர் பிகு பண்ணினார். சிலர் வெட்க பட்டனர். சிலரை இழுத்து வந்து பாட வைத்தனர். அவர் அமைந்துள்ள வரிசையில் ,  அனுஷ்காவின்  முறை வந்தது. தாய் சாரதா .........அவளை பாடிக்காட்டும்படி , கேட்க , கம்பீரமாக் எழுந்து சென்றாள்.  .எல்லோரும் அனுக்குட்டியை பார்த்து கைதட்டினார்கள்.  பாடினாள்.........

அப்பா வை  போல இவ்வுலகில்
 யாரோ உள்ளார் அன்புடையார் ...
காலும் கையும் சோராமல்
கருத்தாய் என்னை காத்திடுவார்
தட்டி தட்டி கொடுத்திடுவார்
தாலோ தாலோ தூங்கேன்பார். ...............

..சாரதாவுக்கு ஒரே ஆச்சரியம் . கடந்த முறை  பெற்றார் தினவிழாவுக்கு பாடிய  அம்மாவைப போல் என்ற பாடலை இவள் அப்பாவை போல் என்று பாடுகிறாளே என்று . ராகவன் சத்தம் கேட்டு ஓடோடி வந்து கட்டி அணைத்தான். குட்டி அனுஷ்கா எல்லோருடைய பாராட்ட யும் பெற்றாள். ........

.ஈன்ற  பொழுதில் பெரிதுவக்கும் தன மகளை .......
.பாடகி என் கேட்ட தந்தை. ..

Tuesday, September 1, 2009

பெரிய பண்ணை யின் வளர்ப்பு நாய் .......

பெரிய பண்ணை யின் வளர்ப்பு நாய் ............

அந்த ஊரிலே , மிகவும் மிடுக்காகவும் , அதிகாரத்துடன் ஒருவர் நடந்து போனார் என்றால் அவர் பெரிய பண்ணையாராக தான் இருக்கவேண்டும் .அவ்வளவு அதிகாரங்களை  இந்த பெரிய பண்ணயார்கையில். அந்த ஊர் மக்கள் எல்லோரும் , அவரின் சொல்லுக்கு கட்டு பட்டு தான் நடப்பவர்கள். அவரின் வீடு அந்த ஊரின் மத்தியில் அமைந்து இருந்தது . அந்த வீதியின் எல்லயில் இருப்பது தான் முத்துவின் சிறு குடிசை.

பண்ணை  வீட்டுக்கு  போகும் பிரதான நீர் வழங்கல்  குழாயின் ஒரு சிறு பகுதி இணைப்பு அவரின் சுற்று மதில் வீட்டின் மூலையில் அமைந்து இருந்தது . முத்துவின் மனைவி மீனா , தன் கடைக்குட்டியை , நல்ல குடி தண்ணீர் பிடித்து வ்ரும் படி அனுப்பினாள். கடைக்குட்டி யும் தன் குடத்தை எழுத்து கொண்டு , போக அவன் வீடு  பெட்டை  நாய் ஈன்ற குட்டிகளில்  ஒன்று தானும் தானும் என்று , அவன் பின்னே துள்ளி யும் ஓடியும் சென்றது .அவ்வழியால் போவோருக்கு பண்ணை வீட்டு  காவல் நாய்களுக்கு பயம். அவைகளின் தோற்றமும் , கத்தும் (குரைக்கும்) தொனியும் திகிலூட்டும். அவைகளை   கூட்டை விட்டு இரவில் திறப்பார்கள் அதிகாலை  ஆறு மணிக்கெல்லாம் , அடைத்து வைப்பார்கள். யாரும் உள் செல்வதென்றால் காவலாளியிடம் நாய் கூடுக்குள் நிற்கிறதா என்று கேட்டு விட்டு தான் உட் செல்ல முடியும்.

கடைக்குட்டி குடத்தில் நீரை நிரப்பி , தான் தலை மீது வைக்கவும் , நாய்களின் குரைப்பு கேட்கவும் குடத்தை  கீழே போட்டு விட்டு ஓடத்தொடங்கினான். குட்டி நாயும் வேகமாக ஓடத்தொடங்கியது .அவர்களின் கஷ்ட காலம் அன்று நாய்கள் கூட்டுக்குள் அடைக்கவில்லை. ஒரே ஒரு கவ்வி உதறலுடன் குட்டி நாய் , கதறலுடன் இறந்து விட்டது .பெரிய நாய் தன் இனம் என்று கூட சிந்திக்கவில்லை.(ஐந்து அறிவு படைத்தஜீவ்ன் எங்கே அறிவு ) பின்னல் துரத்தி வந்த காவலாளி , அவைகளை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

கடைக்குட்டி வீட்டில்  போய் நடந்ததை சொன்னான். வலிமை படைத்தவனின் நாய் கூட , ஏழை களின் நாயை குதறி விட்டன.சில  நாடுகளின் அதிகாரவார்க்கம் , சிறுபான்மையினத்தை கொன்று ஒழிப்பது போல  பண்ணை வீட்டு நாய்க்கும் ஏழை வீட்டு நாய்க்கும் நடந்த கதை  .

 ஒரு  நாட்டில் பெரும் பான்மை இனம் சிறு பான்மை இனத்தை சில வலிமையானவர்களின் உதவியோடு ஒழித்து கட்டுவது என் நினைவுக்கு வருகிறது.

நாய்களுக்கே  இந்தகதி என்றால் மனிதர்களுக்கு .............(என்னை சிந்திக்க வைத்த நிகழ்வு )

யாரை நம்பி ..................

யாரை நம்பி ..............


.......கடந்த வாரம் ஒரு மரண வீடுக்கு சென்று இருந்தேன். ஒரு பெண்மணி எழுபது வயது இருக்கும் . ஊரில் பாலர் வகுப்பு ஆசிரியராக இருந்தவர் . காலம் தன் வேலையை செய்ய நானும் வளர்ந்து பெரியவளாகி என் படிமுறைகளை கடந்து இன்று ஒரு அம்மா வாக புலம் பெயர்ந்து உலகின் குளிர் iகூடிய நாட்டில்.


என் எண்ண aஅலைகள் மீளவும் தாயகம் நோக்கி ...........நான் பிறந்து வளர்ந்தது அமைதியான் ஒரு கிராமம் . அங்கு அந்தரீச் சர் தன் மூன்று ஆண் குழந்தைகளுடன் வாழ்ந்தார் .கணவன் ஒரு புடவைகடையில் வேலை பார்த்து வந்தார் . மூன்று ஆண் குழந்தைகள். வீட்டு வேலை , பாடசாலை வேலை என என்ன கஷ்ட பட்டு இருப்பார் அவர்களை வளர்க்க. மூத்தவன் , ஏ எல் (பன்னிரண்டாம் வகுப்பு )படித்து முடிய பல் கலை கழகம் செல்ல புள்ளிகள் போதவில்லை , ஒரு மாமன் முறையானவர் துணையுடன் , பிரித்தானியா அனுப்பி வைத்தார் . அங்கு அவன் படித்து பட்டம் , நல்ல உயர் தொழிலும் செய்வதாக ஊரில் பேசிக்கொள்வார்.

இரண்டாவது மகனும் படித்து நாட்டுப் பிரச்சினையால் மேற்படிப்பு படிக்க முடியாமல் ,ஜெர்மனிக்கு புறப்பட்டான். மூன்றாவது கடைக்குட்டி , குட்டி யானை போல. எந்நேரமும் தாயின் (கைக்குள் )சீலைக்கு பின் திரிவான். நம்ம ஊரில் ராணுவகக்கெடு பிடி . இளம் பையன்களை பிடிப்பதும் , ஆட்காட்டி முன் காட்டி கொடுப்பதுமாய் இருந்த காலம் . பல பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்போது நான் வசிக்கும் குளிர் நாட்டுக்கு அனுப்பி வைத்தார் . காலம் ஓடிக்கொண்டே இருந்தது , நானும் திருமணமாகி என ஊரில் வாழ்த்து கொண்டிருந்தேன். ஒரு நாள் ஒரு துயர செய்தி .அவரது மகன் மாரடைப்பால் காலமாகி விடார் என்று . அதை அங்கு வசிக்கும் வெள்ளைக்கார பெண் ஒருவர் தான் அறிவித்து இருந்தார். இவரும பல கஷ்டங்களுக்கு மத்தியில் , லண்டனுக்கு சென்று , மகனின் கிரிகைகளில்பங்கெடுத்தார் . . இறந்த அதிர்ச்சியுடன் மேலும் அதிர்ச்சி இவருக்கு அறிவித்த பெண் , வெள்ளைக்காரி, மருமகள் என்பது , அவனுக்கு ஆணும் பெண்ணுமாக் இரு வாரிசுகள் வேறு. என்ன செய்வது . இவர் தாயகம் திரும்பி விடார். இருப்பினும் அவள் இவருடன் தொடர்புகளை வைத்திருந்தார்.

பின் சில காலம் கணவனும் வலிப்பு நோய் காரணமாகஇறந்து விட்டார். இவர் தனித்து வாழும் காலத்தில் இரண்டாவது மகனுக்கு பெண் பேசி அனுப்பி விட்டார். அங்கு சென்றவள் அவனின் கோலத்தை பார்ர்த்து மணமுடிக்க மறுத்து விடாள், இவருக்கு துன்பத்தில் மேல் துன்பம் , இறுதியாக மூன்றாவது மகன் , பொறுபேற்று நான் வசிக்கும் குளிர் கூடிய நாடுக்கு வந்து விட்டார். சில காலம் இன்பமாய் வாழ்ந்தார். பின்பு மகன் இவரை கவனிப்பதில்லை . நேரத்துக்கு வீட்டுக்கு வருவதில்லை , இப்படியாக இருக்கும் காலத்தில் அவனுக்கும் ஒரு பெண் சிநேகிதியாம். அவள் சரித்திரம் அறிந்தால்........... ஏற்கனவே இரண்டு பிள்ளைகளை பெற்ற வளாம் .கணவன் கை விட்டு சென்று விடானாம் . இவருக்கு அவளுடனும் ஒத்து வரவில்லை . நம்ம ஊரவார்களை கண்டால் பேசமாடார்.


சோகத்தின் மேல் சோகம் , பின்பு தனியாக ஒரு இல்லிடம் எடுத்து வாழ்ந்து வந்தார். ஆசிரியரின் பிள்ளைகளே இப்படி செய்து விடார்கள் எனறு ஊரார் பேசிகொண்டார்கள் . பின்பு நோயும் மூப்பும் வாட்ட ஒரு பராமாரிப்பு நிலையத்தில் வாழ்ந்தார். இடையில் மகன் மட்டும் வந்து பார்த்து செல்வதாக கேள்வி பட்டோம். அந்தஆசிரியரின் வாழ்வை நினைக்கவே கண் கலங்கு கிறது. பெற்ற பிள்ளைகள் இப்படி செய்து விடார்கள்.

புலம் பெயார் நாடுகளில் என்ன வாழ்கை என்று வாழ்வே வெறுத்து போகிறது . இயந்திரங்களோடு இயந்திரமாக் வாழவேண்டிய வாழ்வு .

இந்த நேரம் என என நினைவில் நிழலாடும் பாடல்.........


..தென்னையை பெற்றால் இளநீரு ,
பிள்ளயை பெற்றால் கண்ணீரு ,
பெற்றவள் மனமோ பித்தம்மா ,
பிள்ளை மனமோ கல்லம்மா ...............

...இப்படி எத்தனை பிள்ளைகள் கல் மனமாய் வாழ்கின்றனரோ ?