Followers

Friday, April 13, 2012

எண்ணிய யாவும் பெற்று இன்புற்று வாழ்க

மிகவும் நீண்ட  நாட்களின் பின் உங்களுடன் .............

எல்லோரும் நலமா ? இன்று  சித்திரைப் புத்தாண்டு  வலையுலக  உறவுகள் யாவரும் நலமோடும் வளமோடும் எண்ணிய யாவும் பெற்று இன்புற்று  வாழ்க என வாழ்த்துகிறேன் . குடும்ப நிலை என்னை வலை  உலக பங்களிப்பில் இருந்து  தூர வைத்து விட்டது . இனித் தொடர முயற்சிக்கிறேன் . நேரமும் காலமும்  கை கூடும்  போ து ... மீண்டும் சந்திப்போம். நண்பர்களே .

Tuesday, January 17, 2012

தாயும் நீயே தந்தை நீயே ..........

தாயும் நீயே தந்தை நீயே ..............

லண்டன் கீத்ரோ விமான நிலையத்தில்  இருந்து புறபட்ட   விமானம் பலரோடு லதாங்க்கினி  யையும் ஏற்றிக் கொண்டு தான் பயணத்தை தொடங்கியது .பல நாட்களாக் ஆசைபட்ட   பயணம் அவளுக்கு .லண்டன் மாநகரம் மாணவ விசாவில் படிக்க சென்று ஐந்துவருடங்களின்  பின் நாடு திரும்புகிறாள். போர்க்கால   சூழலில் ....தாய் தந்தையை வன்னிக் கிராமத்தில் பறி  கொடுத்த பின் எரியூட்ட   பட்ட் வீடில் .பெற்றவர் உடல்களையும் காணத துயரங்களில் மூழ்கி  இருந்த வேளை,...... அவளுக்கு சித்தப்பா தான் கை கொடுத்தார். இருவரையும் கொழும்புக்கு எடுப்பித்து  ஒரு விடுதிக் நிர்வாக காப்பாளர் மூலம் ஒரு பெண்கள் விடுதியில் லதாவையும் உறவினர் வீட்டில் மனோகரையும்......சேர்த்துவிட்டு சகோதரனின் மறக்க முடியா இழப்பையும் தாங்கி கொண்டு பணி நிமித்தம் சித்தப்பா லண்டன் திரும்பி விட்டார் ......அவர்களுக்கு படிப்பு வாழ்விட செலவுகளத்தனையும்  கவனித்து கொண்டார் ........

லதா பட்டபடிப்பு முடித்த் பின் ..ஒரு ஆசையில்  விண்ண்பித்த் விசாவுக்கு நல்ல பதில் வந்தது லண்டனுக்கு செல்ல விடுமுறை  நாட்களில் இவள் தம்பியிடம் சென்று வரும் அந்த பொற்காலம் தூர......போகிறதே  என்ற மனக்கவலையிலும்  அக்காவுக்கு விடை  கொடுத்தான் பெற்றவர்கள் இல்லதா துயரம் ..எதிர்கால   நோக்கம் கல்வியின்  முன்னுரிமை என உணர்ந்த  இவர்களை காலம் நன்றாகவே வழி காட்டியது .மனோகரின் கடும் முயற்சி அவனை கல்வியிலும் முன்னேற்றியது அந்த வருட  ஆண்டு இறுதியில் சித்தி எய்தி ... கண்டி பெரதேனியா .மருத்துவ பிரிவுக்கு தெரிவு செய்ய பட்ட் போது அக்கா   லதாவுக்கு இனம்புரியாத   பெருமை .அக்காவின் வழிகாட்டல் ஊக்குவிப்பு கடின உழைப்பு ........அவனை ஒரு  மருத்துவருக்கு தயார் படுத்தி இருந்தது .......அவனுக்கான  பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளத்தான் தாயகத்துக்கு புறப்பட்டு  இருக்கிறாள்.

பயணம் தந்த களைப்பை தம்பியை பல வருடங்களுக்கு அப்பால் ..சந்திக்க் போகுமாவல் ......தணித்துவிட்டு இருந்தது.  இன்னும் சில மணி நேரங்களில் விமானம் தரையிறங்கக் போகிறது ....அவளது உள்ளம் எப்போதோ தரை தொட்டுவிட்டது.  தம்பியின் தோற்றம் .....அவனது நண்பர்கள் ..உறவினர்களை     எதிர் கொள்ள நிலைமை தயாராகி விட்டது .
இதோ சற்று ஆட்டமுடன் விமானம் தரை தட்டுகிறது ...குடிவரவு திணைக்கள கட்டுப்பாடுகள்    முடிந்து வெளி வந்தவளுக்கு ."அக்கா "  என கட்டியணைக்க   வரும் கம்பீரமான இளைஞ்சன் இவனா? என் தம்பி என அதிர்சியடையுமக்கா ..........அன்புப்பரிமாறல்களுக்கு  பின் உறவினர் வீட்டை அடைந்தார்கள் 


Monday, January 16, 2012

தை மகளே வா


புதுப்பானையில் புத்தரிசியிட்டு
சுவையோடு சக்கரை சேர்த்து
பால் பழமும், இன்முகம் கொண்டு
வரவேற்கிறோம் ,தை மகளே வா.

பழையன கழிய வேண்டும்
புதியன பல புக வேண்டும்
இன்பம் தரவா..இன்னல் தீர்க்க வா
ஈழத்து மக்களுக்கு விடிவு கொண்டு வா

பசித்தவனுக்கு  உணவளித்த கூட்டம்
பசிப்பிணியால் வாடுகிறது
ஆட்சி பீடத்தில் போலி வாக்குறுதி
 கால இழுத்தடிப்புக்களும்   தாராளம்

வெளிநாட்டு உதவியில் உண்டு
கொழுக்கிறது  பெரும்பான்மையினம்
உதவிக்கரங்கள் உரியவ்ரகளை
உரிய வேளையில்  போய்  சேர்வதில்லை

கலப்பை மறந்த பூமியில்
காலத்தின் தேவை கருதி
காலமெல்லாம்  சிறக்க
உழவுத்தொழில் மலர வேண்டும்

Friday, December 30, 2011

இனிய புது வருடம் உதயமாகட்டும்.....

இனிய புது வருடம்  உதயமாகட்டும்...................

பழைய  ஆண்டு கழிந்து புது ஆண்டு ...காண இருப்போருக்கு .2012 .......என்னும் புதிய ஆண்டு மகிழ்ச்சிகரமாக  உதயமாகட்டும் என வாழ்த்துகிறேன் . அத்தோடு .........சென்ற வருடம்  மகிழ்ச்சி .....வெற்றி ....சிறு சோகம் ......சாதனை ...வீடு மாற்றம் ...........என பலவாறாக  என் வாழ்வில் வந்து விளையாடியது .......இத்தனையும் தந்து என்னை  இன்றுவரை வாழ வைக்கும் அந்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி ...........என் வலை பக்க  வாசகர்களுக்கும் கருத்து பரிமாறும் உறவுகளுக்கும் .இனிய புதுவருடம அமைய    வாழ்த்துக்கள் ........வரும் வருடத்திலிருந்து  வாரம் ஒருபதிவாவது போடணும் ......என சங்கற்பம் பூண்டு .............மீண்டும் வருட  முதல் வாரத்தில் உங்களை சந்திப்பேன்.......சகோதரி நிலாமதி ..

Monday, December 12, 2011

தெளிவு ............




 அமைதியான வாழ்வில் புயல்போல் வந்தது சாரங்கனின்...புறப்பாடு ........ அவன் பிரபலமான ஒரு பல்   கலைக்கழகத்தில்  படித்துக்கொண்டிருந்தான்.  இனப்பாகுபாடு காரனமாக   பெரும் கலகம் மூண்டது. நாட்டைவிட்டு வெளியேறியே  ஆக வேண்டிய கட்டாயம் அயலில் உள்ள     ஒரு நாட்டுக்கு புறப்பட்டு  சென்றான் தற்காலிக விசா அனுமதியோடு .மிகவும் கஷ்டபட்டு  ஒருவேலையில் சேர்ந்தான்  .கொண்டுவந்த காசு எவ்வளவு காலம் கை கொடுக்கும். ..பகலில் படிப்பும் இரவில் வேளையுமாக கழிந்தது அவன் காலம். .மூன்று வருடங்கள்  கஷ்ட பட்டு படித்ததின்  பயனாக அவனை அவன் படித்த் தொழில்நுட்ப கல்லூரி இல் பகுதி நேர  விரிவுரையாளராக   சேர்த்தார்கள்.  நாட்டில் மேலும் மேலும் பிரச்சினை நீண்டு கொண்டும் கொடூரமாகவும சென்றதே தவிர தணிந்த    பாடில்லை . .....தனிமையும்  பெற்றவர்களை பிரிந்த சோகமுமவனை வாட்டியது ........

ஓய்வு நேரங்களில் கணனியில் இருபதுதான் அவனது வேலை. நிறைய நண்பர்கள்  கிடைத்தனர் . அவனது தமிழ் எழுத்து ஆற்றல்  மேலும் வளமானது ......முகபுத்த்த்கமேனும்  நட்புவட்ட்த்தில் இணைந்தான்..........சில ஆண்களும் சிலர் பெண் பெயரில் ஆண்களும் பெண்களும் இணைந்து கொண்டனர்

Monday, November 14, 2011

என் அப்பம்மா


ராஜரத்தினம் கோகிலா தம்பதிகளுக்கு மூத்தவள் பெண் நிரஞ்சினி .....ராஜா ரத்னம் தலை நகரில் புடவைக்கடைகளுக்கு சொந்தக்காரர்..நிரஞ்சினிக்கு  துணி மணிகளுக்கு களுக்கு குறைவே இருக்கவில்லை. அடுத்தடுத்து   மூன்றும்  பையன்களாக் பிறக்கையில் இவளுக்கு மதிப்பு  மிகவும் உயர்ந்தது.............இவளுக்கு ஆறு வயதிருக்கும் பொது ....
.ஒரு தடவை கிராமத்துக்கு சென்றார்கள். ராஜரத்தினம் தனது தாயார் மீது மிகவும் நேசம் வைத்திருந்தார். ஒவ்வொரு பள்ளிவிடுமுறைகளின் போதும் எப்படியாவது நேரம் ஒதுக்கி குடும்பத்தினரை ஊருக்கு அழைத்துச் செல்வார். பின்பு பள்ளி தொடங்கும் போது மீண்டும் வ்ந்து  தலை நகருக்கு கூட்டிபோவர். இக்காலத்தில் ஊர்க் கோவில் திருவிழா நடை பெறும் .ராஜரத்னம ஐயா என அழைக்கப்படும் இவருக்கு மிகுந்த் செல்வாக்கு உண்டு............நிரஞ்சனி   அப்பம்மாவுடன் கோவில் .நடைமுறைகளில் கலந்துகொள்வாள். இதற்காக பட்டுச் சட்டை  ...பாவாடை எல்லாம் விசேடமாக் தைக்க கொடுத்து எடுத்து வைப்பார் அப்பம்மா ..

.ஒருதடவை விடுமுறைக்கு வந்தவர்கள் போகும்போது

Monday, November 7, 2011

நாள் தோறும் ....நீ தானே .....



அந்தச் சின்னஞ் சிறு கிராமம் ........காலை யில் மிகவும் சுறுசுறுப்பாக  
இயங்கும் ..... பட்டணத்துக்கு  போக பஸ் வண்டிக்கு விரைவோர்....காலை,ஆலயமணியின் பக்தி மிகு எழுப்புதல்கள் .. பள்ளிச் சிறார்கள் ..என்று வீதி ...போக்குவரத்தால் நிறைந்து இருக்கும்..
 கலைவாணி அந்த ஊரின் பாட்டு வாத்தியார் பொண்ணு ...கல்லூரியின் 
இறுதி யாண்டு படித்துக்  கொண்டிருந்தாள் ......பெணகள் கல்லூரி அது .எந்நேரமும்  சிரிப்பொலிக்கு பஞ்சமில்லை .....பெண்கள் என்றாலே மகிழ்ச்சி தானகவே வரும்.  

ஆண்டு இறுதிகளில் ...வகுப்பேற்றம்  நிகழும்..பன்னிரண்டாம்வகுப்பு, முடிவில் (  பிளஸ் டூ போன்று  ) . பல்கலை யின் நுழைவு தேர்வு இருக்கும். 
 பாட்டுவாத்தியாரின் மகள் என்பதாலோ என்னவோ கலை வாணிக்கு  நன்றாக பாட்டு வந்தது .மேடைகளில் கல்லூரியின் விசேடங்களில் பாடுவாள். .கர்நாடக சங்கீதம் மட்டுமன்றி ...சினிமா பாடல்களையும் வகுப்பு பெண்கள் பாடச் சொல்லி கேட்பார்கள்.  வாழ்வை  சினிமா ஆட்கொண்டிருந்த   காலம்.
உயர்கல்லூரி   மாணவிகளுக்கு வருட முடிவிலே பிரியாவிடை நடைபெறும் .

அயலிலுள்ள   சகோதர பாட சாலையும் அழைக்க படுவர்.விழா முடிவில் விருந்துபசாரம் நடக்கும்.ஆசிரியைகள் தலைமை யாசிரியர் தம்பதியர் .சகிதம் .அயல்பாடசாலை  அதிபர் குடும்ப ..சகிதம் விழா களை கட்டும். இதற்காகவே உள்ளவற்றில் நல்ல ஆடை உடுத்து ......அன்று பெண்களை சேலையிலும் பையன்கள் கோட் சூட் ஆங்கில உடையிலும்  காணப்படுவர் .

Friday, October 28, 2011

மண்ணாசை ....................


அந்த சின்ன ஊரின் அழகு  கம்பீரமாய்  வளர்ந்து நிற்கும் பனை மரங்கள் வேப்ப மரங்கள் ஆல மரங்கள் போன்றவை தான்.......இந்த ஊரில் தாமசு பிள்ளையும் மனவல் பிள்ளையும் அயல வீடுக்காரர் . வழக்கம் போலவே அன்றாட பணிகள். தாமசு அந்த ஊரில் கிராமசேவகர் பிரிவின் எழுத்தாளர் .மனவல்.. பெருந்தெரு மேற்பார்வையாளர் .  அயல வீடு அவர்கள் குழந்தைகளும்  இவர் குழந்தைகளும்  விளை யாடுவர்கள் ஒன்றாக   பள்ளிசெல்வார்கள். காலம் விரைவாய் போய் கொண்டு ......இருந்த்து.  குழந்தைகள் வளர்ந்து கல்லூரி சென்றார்கள் . தாமசின் மூத்தவள் தனக்கு ஒரு  கோழிக்கூடு   அமைத்துத்ரும்படி கேட்டாள். தன் மகளின் விருப் பை  தட்டாது அமைத்து கொடுத்தார். அங்கு ஒருகாணியில்  எல்லையை சில பனை மரங்கள் பிரித்து நிற்கும் .
தாமசுக்கும் மனவல் காணிக்கும் எல்லையாக வரிசையாக  பனை மரங்கள் நின்றன. அந்த இடத்தை தாமசு ..நிலையமாக் தெரிந்து அதில் அலுமீனிய   தகரம் கொண்ட கோழிக்கூடு தயாராகியது ... காலம் சென்றது ... பனை மரங்கள் ..குலை தள்ளி நொங்கு ...வரும் காலம்.

Friday, October 21, 2011

மீண்டும் உங்களோடு ........

...

காலம் இட்ட கட்டளையாய் கடந்த இரண்டுமாதங்களும் ...வெளி யூர் பயணம் ...வீடுமாற்றம் என்று ... என்னை பாடாய் படுத்திவிட்டது. மனசும் கனத்தது . மாற்றங்கள் ஓட்டங்கள் கலக்கங்கள் சிந்தனைகள்  எதிர்பார்ப்புகள் என்று  கடல்  அலை   போல ... பந்தாடப்பட்டுக்    கொண்டு இருந்தேன் .  ஒருசில   நல்ல விடயங்களும் இடையிடை  ஆறுதலை  தந்தன . வாழ்வின் திருப்பு  முனையாகவும்  இருந்தது .......எழுத மனமின்றி ...வந்து வாசித்து விட்டு   சென்று விடுவேன்........தற்போது தான் வேளை வந்தது .......


"அப்பாடா " என்று இருக்கிறது .....கணனியில் எழுதவும் நேரம் கிடைக்கிறது . மீண்டும் இந்த  நிலவு தோன்றும் வேளை ....வந்துள்ளது . நடப்புகளை காணும் ஆவலுடனும், விரைவில் உங்களுடன் பதிவுகளோடும்,  என் சின்ன கிறுக் கல்களோடும்  சந்திப்பேன் ........... அதுவரை 

பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் ....தீபாவளி வாழ்த்துக்கள் .ஒளியின் பிரகாசம் போல் உங்கள் மனம் மகிழட்டும். 

நன்றி வணக்கம் 

Monday, August 22, 2011

அவளுக்காக வாழ வேண்டும்.



காலம் வெகு  வேகமாக் ஓடிவிட்டது போல்  இருந்தது அவனுக்கு . சோமசுந்தரம் தன்  தாய்  நாட்டை விட்டு வெளியேறி இருபது வருடங்கள் . எல்லோராலும் " சோமு "என்று அன்பாக் அழைக்கபட்டவன். வீட்டுக்கும் ஊருக்கும்  செல்ல் பிள்ளை .காரணம் மூன்று பெண சகோதரிகளுக்கு இளையவனாக் பிறந்தவன்.   நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் தந்தை  அயலில் உள்ள பட்டணத்தில் , பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியர். வார இறுதியில் தான் வீட்டுக்கு வருவார்.  தாயார்  வீட்டு வேலைகளை யும் மக்களையும் கவனித்து கொள்வார். பெண்கள் பள்ளியில் கவனமாய் படித்து .வந்தனர்.  .தாயார் ஆண்பிள்ளை என்று  அவனில் மிகுந்த பாசம் வைத்தது இருந்தார். வேண்டியதெல்லாம் எப்டியாவது காசு சேர்த்து வாங்கி கொடுப்பார்.அவனுக்கு துணி துவைப்பது , அக்கா மார்தான். சில சமயம் வெளி வேளைகளில் உதவி செய்வான். அவனும் உயர் கல்வி முடித்தும் மேற மேற் படிப்புக்காக செல்ல காத்திருந்தான் . அப்போது  தான்  தாயகத்தில் போரின் ஆரம்ப காலம் . இயக்கங்களுக்கு ஆட  சேர்ப்பு செய்துகொண்டு இருந்தார்கள். குடும்ப் உறவுகள் அவனை விடத் தயாராக் இல்லை. வெளி நாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவர் நிலையம் மூலம் அவன் நாட்டை விட்டு வெளியேறி  னான்.  காலம் தன் பாட்டுக்கு   ஓடிக் கொண்டே சென்றது. ஐரோப்பிய நாடோன்றுக்கு சென்றவன் அந்நாடடு பாஷை  படிக்க வேண்டிய  நிர்பந்தம்  பாஷை படிப்பதும் பகுதி நேர வேலை செய்வதுமாய் ...இருந்தான். அந்நிலையில் மூத்த சகோதரிக்கு திருமணம் செய்ய வேண்டிய நிலை. இவன் வருவதற்காய் அடைமானம் வைத்த வீடு சீராக்  கொடுக்க வேண்டி இருந்தது. உழைத்த் காசெல்லாம் ..அனுப்பி அவள் காரியம் முடித்தான்.

Tuesday, August 2, 2011

எனக்கும் தெரியும் ......

எனக்கும் தெரியும் ................

இந்த உருளும் உலகில் எல்லோர்  வாழ்விலும் வரும்முக்கிய நிகழ்வு திருமணம். ஆணாகிலும் சரி பெண்ணாகிலும் சரி .திருமணத்தின் மூலம் வாழ்வு முழுமையடைகிறது என்பார்கள்.ஆனால் இந்தக்  காலத்தில்  ஆணினமும் பெண்ணினமும்  எட்டிக்குபோட்டியாக   ஒருவரை oஒருவர்  அட்க்குவதிலும் கர்வத்தாலும் . வாழ்வு சீரளிந்து  போகிறது . 

 நாட்டில் ஏற்பட்ட  போர்க்கள சூழ்நிலையில் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள்தான் மாணிக்க தாசன் கோகிலா தம்பதியர். இவர்களுக்கு பெண்ணும்  ஆணுமாய் இரு மக்கள். கால ஓட்டத்தில் இருவ்ரும்  கல்வியில் தேர்ச்சி பெற்று .. பட்டம் பெற்று  ஒரு  பிரபல  கம்பனியில்  பதவி கிடைத்தது மகள் அஞ்சலி க்கு .மகன் அருணன்  இவளை விட இருவயது இளையவன். அவன் இன்னும் படித்துக்கொண்டிருந்தான்.  மகளுக்கு  திருமண    பராயம்வந்த்தும் பொறுப்பு மிக்க தந்தை திருமணம் பேசினார். ....அவர்கள் வாழும் நாட்டில்  தேடியும் அவளுக்கு வ்ரன் அமையவில்லை. தந்தையின் தூரத்து உறவினர் கள் தாயகத்தில்(இலங்கையில்) வாழ்ந்து வந்தார்கள் இவர்களுக்கு ஒரு மகன் துபாயில் கட்டிடநிர்மாணத்துறையில் இஞ்சினியராகவும்  மற்றையவன்   கல்லூரியில் பயிலும் காலத்திலும்இருந்தனர். பேச்சுவாக்கில் அந்த வருட விடுமுறையில் பெண வீட்டாரும் , இஞ்சினியர் குடும்பத்தாரும்சந்திப்பதாக ஒழுங்கு செய்யபட்டது. அதற்கான  காலம்வந்த்தும் இரு வீட்டாரும்  கோவிலில் சந்தித்து  உரையாடிக்கொண்டனர். பையனும் பெண்ணும் பேச சந்தர்ப்பம் அளிக்க பட்டது.

Tuesday, July 26, 2011

சித்தப்பா சித்தப்பா

சித்தப்பா சித்தப்பா 


என் விடுமுறைப் பயணம் முடிந்து என் வேலைப் பளுக்களும் சற்று ஓய்ந்து மீண்டும் உங்களுடன்.. நான் சந்தித்தத் சிறு சம்பவம்...
..

 சென்ற ஆனி மாத  இறுதியில் ஒரு வெளிநாட்டுப் பயணம் போய் இருந்தேன்  எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே அந்த நாளும் வந்தது . நான் கணவர் இரு மகன் களுடன் சென்று இருந்தேன் . 
சற்று ஆர்வமாக அடுத்து என்ன என்ற ஆவலோடு விமானத்தினுள் அதற்கான்  கடமைகளை  முடித்து கொண்டு எங்கள் ஆசன  பதிவு தேடி அமாந்தோம். சில நிமிடங்க ளில் விமானம் நிறைந்து புறப்பட ஆரம்பம் . எல்லோரும் மெளனமாய் கடவுளை நினத்துக் கொண்டு இருந்ததனர் .அருகில் உள்ள சாளரத்தினூடே எட்டிப்பார்த்தேன் கிண் என்ற காது இரைச்சலுடன்

Monday, May 30, 2011

மீண்டும் சந்திப்பேன்............

மீண்டும் சந்திப்பேன்............


பதிவுலக நட்புகளுக்கும் வாசகர்களுக்கும் அறிவித்துக் கொள்வது . எனது வீடு மாற்றம் பெற்றதாலும் , சில முக்கிய குடும்ப அலுவல்களிலும் பதிவுலகம் வர முடியவில்லை . எந்த பதிவும் போடவும் நேரமில்லை.  என்னை, , என் பதிவுகளை எதிர்பார்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

 அடுத்த தாக வெளியூர் பயணம் ஒன்றுக்கு ஆயத்தங்கள்  நடக்கிறது . மீண்டும் எனக்கு ஆதரவு  கருத்து பதிபவர்களிடம் பணிவான   வேண்டுகொள் . சில வாரங்கள் ,  வரை காத்திருங்கள்...... மீண்டும் வருவேன். நன்றி வணக்கம்.  நிலாமதி .

Thursday, April 28, 2011

சொந்தங்கள்....என் றும் தொடர் கதை





சொந்தங்கள்....என் றும் தொடர் கதை 

அந்த அழகிய சின்ன கிராமத்தில் .. மக்களை துயிலெழுப்பும் எழுப்பும் அந்த ஆலயமணி . அதிகாலை ஐந்தரைக்கு ஒலிக்கும். அது  ஒரு அதிக  கத்தோலிக்கர் வாழும் கிராமம். சில இந்துக்களும் கலந்து நட்புறவோடு வாழ்த்திருந்தார்கள். பண்டிகை நாட்களில் ஆலய குலதெய்வம் ( புனிதர் ) பவனிவரும் நாட்களில் இந்துக்களும் கலந்து கொள்வார்கள். கோவில்வ்ளவு தென்னந்  தோரனக்களால் அலங்க்கலரிக்க் பட்டு  ஒரு கோலாக லமான  கொண்டாடமாக் காணப்படும்.காலை பூசை வழிபாட்டில்  பாடகர் குழாமில் ரோஸ்மேரி . பியானோ வாத்தியம் இசைப் பாள். இளம்பெண்களும் ஆண்களும் சேர்ந்து பாடகர் குழாமாக் பாட்டு இசைப்பார்கள்.  போதனைகளும்  பொருத்தமான் பாடலும் அமைந்தால் இறைவழிபாடு மிகவும் மெய்  மறக்க  செய்யும் .


Sunday, April 10, 2011

பிரிந்தும் பிரியாத வரம் .

பால நாயகியும் ராஜ குமாரனும் இணை  பிரியாத தம்பதிகள்.அவர்களது மகிழ்வான் வாழ்வின் பயனாக் இரு ஆண்களும்  இரு  பெண க்களுமாய் நான்கு குழந்தை கள் .வாழ்வு சந்தோஷமாய் தான்போனது அந்த சம்பவம்  நடக்கும் வரை . ராஜகுமாரன் அவ்வூரின் கிராம சேவை அலுவலராக பணியாற்றி  கொண்டிருந்தார். .அவ்வூர்  மக்களின்  முகவரிக்  கணக்கு அறிக்கைகள் பங்கீட்டு புத்தக பதிவு போன்றவை அவரிடம்தான் இருந்தன . அது ஒருபோர்க்காலம். அவரிடம் இரவு நேரங்களில் படை அதிகாரிகள். சில இளைஞ்சர்களின் விபரம் கேட்க அவரிடம் வருவதுண்டு ...மனச சாட்சிப் படி   விபரங்கள் கொடுத்தாலும் சமுதாய  இளையவர்களின் உணர்வுக் கேற்ப  சில மாறுதல்களும் செய்து கொடுப்பார். அவ்வூர்  பையன்களைக் காப்பாற்ற . படை யினர் கையில் சிக்கினால் பிறகு மரண காண்டம் தான்.   காப்பரண் களில் வைத்துச் சித்திர வதையில்   உயிர் போக  வதைத்து விடுவார்கள்.இதனால் சில  இளைய வர்களுக்கும் ராஜகுமாரன் மீது ஒரு சந்தேகப் பார்வை. தங்கள் விபரங் களைக்  கொடுத்து . விடுகிறார் என்று

Monday, March 28, 2011

ஏதோ ஒரு ஏக்கம்





ஏதோ ஒரு ஏக்கம்  

ஓடும் அந்த தொடரூந்து வண்டியில் (  ரெயின் )ஒரு ஓரமாக் உட்காந்திருந்தான் அந்த இளைஞ்சன் . வண்டியின் அசை வாட்ட துக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருந்தான். மறு பக்கத்தில் நானும் என் சின்ன மகனும் அமர்ந்திருந்தோம். பார்க்க என் நாட்டவன் போல் இருந்ததால் சற்று சின்ன புன் முறுவலுடன் , நீங்க தமிழா என் ஆரம்பித்தேன். ஆம் அன்ரி ...என்றவன் நம் நாடு, சூழல் இருப்பிடம் ,  போர் என் தகவல் களைப பரிமாறிக்கொண்டோம்.   நகரத்திலுள்ள  ஒரு யுனிவெர்சிடியில் , கலைத்துறையில் இரண்டாம் ஆண்டுபடித்துக் கொண்டிருக்கிறான். மாணவ விசாவில் இந் நாட்டுக்கு வந்திருகிறான். அவனது கதையைகேளுங்கள்.  கமலா காண்டீபன் தம்பதிகளுக்கு இரு ஆண் குழந்தைகள் . தந்தை காண்டீபன் தலை நகரில்ளொரு களஞ்சியத்துக்கு  பொறுப்பாளராக  பணி புரிந்து இருகிறார்.திடீர் சோதனியின் போது ...பொருட்கள் கணக்கெடுப்பில் பெரும் எண்ணிக்கை குறைவு வரவே பணியிலிருந்து நீக்கி விடார்கள். அவர் ஊருக்கு வந்து விட்டார் . . மூன்று மாதமொரு முறை வருமப்பா நீண்டநாட்கள் தங்கியிருக்கவே மகன்கள் அருணோ அபிஷேக்  இற்கு பெருமகிழ்ச்சி .சைக்கிளில் சவாரி ,வேண்டிய இனிப்பு வகைகள் என்று  ஆரவாரமாய் ஆறுமாதங்கள் ஆயின சில நாட்களில் ...

Friday, March 18, 2011

தோற்றுப் போனவள்.


தோற்றுப் போனவள். 

காமாட்சி .......கனகர் தம்பதிகளுக்கு இரு பெண பிள்ளைகள். மூத்தவள் படிப்பு முடிந்ததும் , கனகர் வேலைக்கு  விட மறுத்து விடார்.  இளையவள்  தந்தையுடன் போராடி மேற்படிப்புக்காக் . யுனிவேர்சிட்டியில் படித்து கொண்டு இருந்தாள். கனகர் அந்த ஊரிலே பெரும் அரிசி ஆலைக்கு சொந்தக் காரர். முப்பது மேற்பட்ட் பணியாளர்களை கொண்டு தொழிலை நடத்தி வந்தார். மாலையில்  நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளை கவனிக்க் தங்கை மகன் , வாகீசனை துணைக்கு அழைத்தார் . அவனும் மாமன் மீதுள்ள் மரியதை யால் ஏற்றுக்கொண்டான். . 

முன்பு அவன் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை  பார்த்தவன்.  அவனது கம்பனி , ஒப்பந்தம் முடிந்ததால் , ஊருக்கு வந்து வேறு  நிறுவனத்தில் இணைய காத்திருப்பவன். கனகரின் தங்கை விசாலம் , கணவனை இழந்த பின் ஒரே மகனைக்  கண்போல் காத்து படிப்பித்து ...மாமன் கனகர் சொல்லவும் கேளாமல் மத்திய கிழக்கிற்கு பணிக்கு ஆட்களை எடுபதாக் மகன் கேட்ட போது  அனுப்பி வைத்தாள்.   தற்போது , ஓய்வாக் இருப்பதால் அவனும் சம்மதித்து , கணக்கு வழக்குகளை பார்பான். சில சமயம் மாமன் வீடில் அந்த , விபரங்களைக் கொண்டுபோய் கொடுக்க வேண்டியிருக்கும். அங்கே அழகு தேவைதை யான் மைத்துனியை சந்தித்ததும் காதல் வயபட்டான்.

Monday, March 14, 2011

இடைவெளிகள் .

இடைவெளிகள்  

நீண்ட நாட்களாக ஒரு சிரிப்பு பதிவு போடணும் என்று ஆசை .அதிகம் சோகம் கலந்த பதிவுகள் போடுவதாகவும் ஒரு செல்ல கண்டனம். சரி இதை   பகிர்வோம்,   என விழைகிறேன். 

 ஈழத்து  போரினாலும் பொருளாதார தேவை நிமித்தமும  பலர் புலம்பெயர்ந்தனர். அந்த வகையில் ராஜசேகரன் கனடா நாட்டுக்கு மேற்படிப்பின் நிமித்தம் புலம் பெயர்ந்தான். தாயகத்தில் மனைவி மேகலாவும் குழந்தை (ஆறுமாதம் ) அபிசேக் கையும் பிரிய வேண்டியதாயிற்று . காலபோக்கில் ராஜசேகரன் கல்வி  நிலையில் உயர்ந்து  தனக்கென ஒரு தொழில் தேடிக்கொண்டான். குடிவரவு முறைப்படி  மனைவி மேகலாவும் குழந்தை அபிஷேக் உம் நான்கு வருடங்களின் பின் தந்தையுடன் இணைந்து  கொண்டனர். அவர்கள் ஒரு கோடை விடுமுறையின் போது நாட்டுக்கு வந்தனர். இங்கு புரட்டாதி  மாதம் பள்ளி தொடங்கும் காலம் . அபிக்கு நான்கு வயது முடிந்து இருந்ததால். அவனை பாலர் பாடசாலையில் சேர்த்தனர் . அவனும் நன்றாக் பள்ளி செல்ல விருப்பம் கொண்டவன். ஒரு தவணை முடிந்து அடுத்தவ வரடம் பங்குனி மாதம் ஆரம்பமாகியது. குழந்தையின் தேவைகளை கவனிக்க் வேண்டியிருந்ததாலும் , நாட்டின் நடை முறைகளை பழக வேண்டியிருந்ததாலும். மேகலா  பகுதி நேரம் ,   ஆங்கில் வகுப்புக்கு சென்று கொண்டிருந்தாள்.  தாயகத்தில் சில  இடையூருக ளால் ஆங்கில்க் கலவி தடைபட்டது . போதிய அறிவு பெற முடியாததாய் இருந்தது. இங்கும் பள்ளி முடிந்து அபியை போய் கூடிவரவேண்டியதாயிர்று . பள்ளி அண்மையி லி ருந்த்தால் பஸ் போக்குவரத்தும் கிடைக்கவில்லை

Wednesday, March 9, 2011

தோள் கொடுப்பான் தோழன் ........

தோள் கொடுப்பான் தோழன் ..........

ராஜேந்திரன் வழக்கமாக் நண்பர்கள் கூடும் அந்த மதகின் மேல் உட்கார்ந்து யோசனையில் ஆழந்து இருந்தான். மாலை  எழு மணியாகியும் சூரியன் மறைய நேரம் இருந்தது. சூரிய  கதிர்கள் சற்று கண்களை கூச்ச மடைய  செய்யவே அருகில் இருந்த தேநீர்க்கடையில் சென்று தேநீருக்கு சொல்லிவிட்டு கடைக் காரப் பையன் வரவுக்காய் காத்திருந்தான். 

தாயார் கமலா அம்மாள் மாலை உணவு வேளையாகியும் மகன் வரவுக்காய்   காத்திருந்தாள். கணவன் அப்போது  தான் வேலை முடிந்து வந்து கை கால் கழுவும் ஒசைக்கேட்டுகொண்டு இருந்தது. மாலதி சாமி விளக்கு ஏற்றி வழிபட்டுக்கொண்டு இருந்தாள். .கடவுளே இந்த வரனாவது கை கூடவேண்டும். பாடசாலை யிலும் சக ஆசிரியைகளின் ஏளனப் பார்வை . வயது முப்பதாக் போகிற எனக்கு ஒரு வழி காட்டு . என் வேண்டிக்கொண்டு , தந்தையின் சாப்பாட்டு பெட்டியை கழுவி வர ஆயத்தமானாள். சேகரம் ஐயா கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் மிகவும் கட்டுபாடானவ்ர்.  மது புகை போன்ற எந்த  கெட்ட பழக்கங்களும் இல்லாதவர் .