பூவே..... பூச் சூட வா ...
மலர்களிலே பல நிறம் கண்டேன்
மாலையாகும் திறன் கண்டேன்
பூஜைக்கு போகும் சில ,கண்டேன்
மலர் வளையமாகும் சில கண்டேன்
த்ண்ணீரில் மிதக்கும் சில கண்டேன்
மாடியில் வாடும் சில கண்டேன்
மாலையில் மலரும் சில கண்டேன்
காலையில் மலரும் பல கண்டேன்
நிறம் உள்ளவை பல கண்டேன் ,
முட்களின் நடுவே சில கண்டேன்
நறு மணம் உள்ளவை பல கண்டேன்
பால்போன்ற வெண்மையும் கண்டேன்
வண்டு மொய்க்கும் சில தேன் உள்ளவை .
மொட்டாகி மலராகி கருக்கூட்டி காயாகி
கனிந்து பழமாகி ,பலன் கொடுத்ததும்
மீண்டும் விதையாகி பூமிக்கு செல்லும்.
மலர்களிலே இத்தனை வகை என்றால்
மனிதமலர் கள் எத்தனை வகை ?....
மலர்கள் பல வகை மலர்ந்து சிரிக்கிறது
மனிதனும் பலவகை மலர்ந்து அழுகிறது...
Followers
Subscribe to:
Post Comments (Atom)
-
ஒரு கிராமத்திலே சிறந்த கல்விமான் இருந்தார். முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அவரை பேச அழைப்பது வழக்கம் .இப்படியாக ஒரு நாள் மாலை ஒரு கூட்ட்துக்க...
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
http://www.youtube.com/watch?v=zskO9O3hF78&feature=player_embedded சிரிப்.... பூ ......சிரிக்கலாம் வாங்க. .ஹா ஹா ஹா சிரிக்க கூடிய ...
2 comments:
நல்ல கவி வரிகள் நன்றிகள்... தொடருங்கள்..
சந்துரு உங்கள் வரவுக்கு நன்றி ...
Post a Comment