Followers

Monday, February 1, 2010

அழியாத காதல் ..............

அழியாத காதல் ................

மனித வாழ்வில் அழியாத சில நிகழ்வுகள்  பொன் எழுதுக்களால் பொறிக்கப்படும். அந்த வகையில் சோபிதாவின் வாழ்கையில் ஏற்பட்ட திருப்பம் மிகவும் முக்கியமான் ஒன்று.

.........சோபிதா அழகான  சிறுமி . காலம் செய்த கோலம் ஐந்து வயதில் தந்தையை இழந்தவள் . மற்றும் நான்கு பெண் குழந்தைகளுடன்  ஐந்தாவதாக் வளர்ந்த கடைக்குட்டி .தாயின் சிறந்த செல்லம். தாய் இளமையில் மிகவும் கஷ்டபட்டு இவர்களை வளர்த்தாள். இருந்தும் அந்த இன்பம் நீடிக்க வில்லை.  சில வருடங்களில் தாய் குணமாக்க முடியாத நோயில் இறந்து விட்டாள் .  கால மாற்றத்தில் எல்லா பெண் சகோதரிகளும் திருமணம் முடித்து தம் கணவருடன் சென்று விடவே இவள் பனிரெண்டு வயதில் ...விடுதிக்கு அனுப்ப பட்டாள் . சில காலம் தாபரிப்பு பணம் கட்டினார்கள் பின்பு அவர்களுக்கும் கஷ்டம்  பள்ளி விடுமுறையின் போது மட்டும் போய் ஒவ்வொரு சகோதரிகள் வீடிலும் மாறி மாறி தங்கி வந்தாள். காலப்போக்கில் அவர்கள் வந்து பார்ப்பதும் குறைவு...... பின்பு பணம் கட்டுவதும் நின்று விட்டது ....விடுதியில் உறவினர் வந்து பொறுப்பு எடுக்க வராவிடால் தனியே அனுப்ப மாடார்கள். விடுதி மேற்பார்வையாளர் சில கடிதங்கள் போட்டு பார்த்தார் . அவை மீண்டும் திரும்பி வந்தன .    அது ஒரு கிறிஸ்தவ துறவியர் நடத்தும் விடுதி .....முறையாக் பணம் கட்டவில்லை .. யாரும் பார்க்க வாருவதுமில்லை.  அவர்களுக்கும் என்ன கஷ்டமோ இவள் ...அதே மடத்தில் இருந்த .( orphanage ) கதியற்றவர் பகுதியில் சேர்க்க பட்டாள். பள்ளியில் தொடர்ந்தும் படித்து கொண்டிருந்தாள் .கால ஓட்டத்தில் பன்னிரண்டு வயதில் சேர்க்கப் பட்டவள் . உயர் வகுப்பில்  சித்தியடைந்த்தும்..அந்த ஊரின் மத்தியில் உள்ள ஒரு , தொழிற்சாலையில் ,மடத்துக் கன்னியர்களின் அனுமதியுடன் தொழிற்சங்க நிர்வாகி உதவியுடன் , வேலையில் சேர்ந்து கொண்டாள்.

  விடுதியின் நிபந்தனைக்கு ஏற்ப பத்தொன்பது வயது வந்தததால் ,விடுதியில் தங்க முடியாத காரணத்தால் , தொழிற்சங்க த்தில் இவளுடன் வேலை பார்க்கும் நண்பியின் உதவியுடன் ,வாழ்வதற்கு ஒரு இல்லிடமும் தெரிந்து கொண்டு அங்கு வசித்து வரும் நாளில் , தினமும் சந்திக்கும் ஜான்சன்   இவளை விரும்புவதாகக் சொன்னான் .தனது நிலையை சொல்லி மறுத்த போதும் காலப்போக்கில் மனம் மாறி ஜான்சனை மிகவும் நேசித்தாள். இவளுடைய உறவுகளில் ஒரு சிலர் ஈழத்தின் சண்டைநடைபெற்ற பகுதியில் வசித்தனர் . மற்றவர்கள் இவளை பொறுப்பு எடுத்துக் கொள்ள விரும்பாது ...இவளுக்கு விலாசம் தெரியாது மறைந்து வாழ்ந்தனர்.  சண்டை மிக உக்கிரமாக் ஆரம்பிக்கவே இவள் , தலை நகருக்கு மாற்றலாகி போனாள். பின்பு சில காலம் ஜான் சனின் தொடர்பு இருந்தது .அவர்களது நட்புறவில்  பேசும் போது அவன் சொல்வான் தனக்கு  சில பொறுப்புகள் இருபதாகவும் ...ஒரு வேளை தனக்கு உயிராபத்து நெருங்கும் போது ..தான் வேறிடம் சென்று விடுவதாகவும் எந்த ஜென்மத்திலும் நீ தான் என் மனைவி என்றும் சொல்லியிருந்தான் பணியில் அவள் மிகவும் ஈடுபட்டிருந்ததால் காலமும் மிக விரைவாக வே ஓடிக்கொண்டிருந்தது .  யாழ்ப்பாணத்தில் இருந்து தொடர் புகள்  கிடைப்பது  மிகவும் சிரமமாக  இருந்தது . கடைசியாக் ஒரு கட்டத்தில் ..மிக அவசரமான் மடல் ஒன்று வந்தது. தான் நாட்டை விட்டு புறப்படுவதாகவும்  நேரில் கண்டு சொல்ல முடியாதென்றும்  எழுதியிருந்தான் . நண்பன் மூலம் அனுப்ப பட்ட அந்த க்கடிதம் இவன் புறப்பட்டு  சில வாரங்களின் பின் தான் இவள் கைக்கு கிடைத்தது........அவளுக்கும் சோதனை மேற் சோதனைகள். ..

அவள் வேலை பார்த்த தொழில் நிறுவனம் மிகவும் நட்டத்தில் சென்றதால் மூடப்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அவள் தாதியர் பயிற்சி கல்லூரிக்கு விண்ணப்பித்து அங்கு அனுமதியும் கிடைத்து விட்டது . பயிற்சி பெற்று  ....பணிக்கு தெரிவு செய்ய பட்டாள். இருந்தாலும் என்றாவது அவன் தொடர்பு கொள்வான் என்ற நம்பிக்கையில் வருடங்கள் பத்து உருண்டோடி  விட்டது . அவனை தவிர ...யாரையும் திருமணம் செய்யும்எண்ணமே இல்லை பலர் புத்தி சொல்லிபார்த்தார்கள்.

 அவளது முப்பத்தைந்தாவது பிறந்த நாள் முடிந்த மறு நாள். ஐரோப்பாவில் இருக்கும் தூரத்து உறவு மூலம் ...இவளது ஜான்சன் ....கனடா நாட்டில் இருப்பதாக  அறிந்து கொண்டாள். தனது முயற்சி எல்லாம் திரட்டி தேடினாள் ....இறுதியில் வெற்றியும் பெற்றாள் . ஜான்சன் இன்னும் அவளுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்தான்... அவளுக்கு வார்த்தையில் சொல்ல முடியாத மகிழ்ச்சி ..........ஈழத்தின் ஒரு போர் நிறுத்தக்காலத்தில்,  விடுமுறையில் ஜான்சன் சென்று திருமணம் செய்து வந்தான் ......குடிவரவு சட்ட திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு  இங்கு வந்து கடந்த ஒரு சில வருடங்களாக  இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருகிறாள்.

அவளை பல வருடங்களுக்கு பின் அடையாளம் கண்டு பேசிய எனக்கு இனம் புரியாத அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி . நிறைய பேச நினைத்தாலும் நேர ம இடம் கொடுக்க வில்லை. தொலைபேசி எண்களைபரி மாறிக் கொண்டு வந்து விட்டேன் .

நிஜக்கதை கேட்ட உங்களுக்கு....என் நன்றிகள்.    அழியாத காதல் இரு உள்ளங்களை  இணைத்து வைத்தது என்ற மகிழ்வில்  நானும்,  உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்.

Thursday, January 28, 2010

கேட்டு ரசித்தவை......

கேட்டு ரசித்தவை.....

மகன் : அம்மா ...எனக்கு ஒரு விண்ணப்பப் படிவம் நிரப்ப வேணும்......
.             உதவி      செய்யுங்கோ.
அம்மா: ...கொஞ்சம் பொறு அப்பா வார நேரம் ..அவரிடம் கேளு..
மகன்:     (அப்பா வாசல் படி ஏறு வதை கண்டதும்).....அப்பா உங்களிடம் ஒரு கேள்வி.....
அப்பா : கொஞ்சம் பொறு என் சொக்க்சை கழற்று கிறேன். .ராணி ......
              ரீ கொண்டு வாரும்.என்னடா கேட்ட நீ ?
மகன் ...அப்பா .sex............என்றால் என்னப்பா?
அப்பா:.....வந்து... :o வந்து .....(முழிக்கிறார்)
மகன் .........female ? male ? எதை போடுறது ...
அப்பா.......நீ பையன் . male என்று போடு........
                ( அப்ப்பாடா..நான் எதோ நினைச்சேன் )

மகன்  ......mother tongue .......என்றால் என்னப்பா.....
அப்பா:      அது உங்க அம்மா நாக்குடா.....ரொம்ப நீளம் என்று போடு....

*குறிப்பு .. mother tongue ....என்றால் தாய் மொழி .....ஹா .......ஹா.....

************************************************************

அப்பா : தம்பி காலாட்டி சாபிட்டு கொண்டிராமல் போய் படிடா.......
மகன்: ...படிச்சு என்னப்பா செய்கிறது...........
அப்பா: ..படிச்சு நல்ல உத்தியோகம் எடுத்து ? உழைத்து வைக்கலாம்.
               சேமிக்கலாம்.
மகன்:    சேமித்து     வைத்து எனப்பா செய்யலாம் ?
அப்பா:    பிற்காலத்தில் காலாடிக்கொண்டு இருந்து சாப்பிடலாம்....
மகன்:....அதை தானே அப்பா இப்போது செய்கிறேன்........
அப்பா:......... :mellow: :mellow: ...

Wednesday, January 27, 2010

வேண்டாம் ....கண்ணா

வேண்டாம் ....கண்ணா

பசும் பாலும் சுவைக்க் வில்லை
பாட்டியின் மடியும் இனிக்க வில்லை....
கண்டதும் தாவி வருகிறான்.
 உண்டாலும் பசியடங்கவில்லை
தாகமும் தவிப்பும் தீரவில்லை
வேம்பின் எண்ணெயும் கசக்கவில்லை
ஊர் அடங்கி உறங்க சென்றதும்
மெல்ல நுழைந்து இறுக்கி அணைத்து
சேலை விலக்கி நுழைந்து விடுவான்
" அம்மா பாப்பா (பால்) ..........என்று
அவள்  இரண்டு வயது கடைக்குட்டி ......

Wednesday, January 20, 2010

சித்திரம் பேசுதடி ........

சித்திரம்  பேசுதடி ........

வாழ்வின் எண்ணங்கள்  ..ஆசைகள் கரை புரண்டோடும் இளம் பருவம். நவீன கால தொழிநுட்ப வளர்ச்சியில் சில  வருடங்களுக்கு மேலாக் மிகவும் கொடிகட்டி ...வலம் வந்து கொண்டிருப்பது தான் இந்த கணணி யுகம் ...இப்போது அது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. அலுவலகம் முதல் பாலர் வகுப்பு வரை எல்லோரும பயனடையும் ஒரு பயனுள்ள பொருள் தான்  இந்த கணனி ....பாலர் நுழைய இலகுவாக் கணணி மயப்படுத்த் பட்ட விளையாட்டுக்கள் . இளையவர்களுக்கும்  அது தான் இன்றைய விளயாட்டு பொருள். . பொழுது போக்கும். இந்த விளையாட்டை விரும்பி விளையாடுவார்கள். அந்த விளையாட்டின்  ஈர்ப்பில் ஈடுபட்ட இரு உள்ளங்கள் தான் . சுகுமார் , மது மிதா ......அவர்களின் கதை இதோ.....


சுகுமார்.....ஒரு வர்த்தகவியல் பட்டாதாரி .பல் கலைக் கழகம்    முடிந்ததும் ....ஒரு வங்கியில் சேர்ந்து ....படிப்படியாக முன்னேறியவன். மாலை நேரங்களில் ...செய்தி தேடி வாசிகக் மிகவும் விரும்புவான். சில நட்பு  வட்டங்களும்  உண்டு. அவர்களுடன் அரட்டையில் ஈடுபடுவான் ...ஒரு சில பள்ளித் தோழிகளும்  உண்டு ....தோழியின் தோழியாக  ஒரு நாள் அறிமுகமானாள் .மது மிதா . ஒரு சில வார்த்தைகளுடன் விடை பெற்று சென்று விடுவாள். இவன் தேடித்  தேடிப்  பேசுவான்.....தோழியின் நட்பு குறைந்து ,மது மிதாவுடன் ....விரும்பிப்  பேசுவான்  காலப்போக்கில் அவளது பெயர் மது வாகி விட்டது ...அவர்களது படிப்பு ...........சொந்த இடம் .. புலம்பெயர்ந்து அவள் வாழும் இடம்..........குடும்ப் உறவுகள் ......போன்றவை பரிமாறப்பட்டன.   சுகுமாரும் ....தன்னை பற்றி  சொன்னான். ஆர்வமிகுதியால் ஒரு நாள் அவன் தன் நிழற்படத்தை  அனுப்பி வைத்தான்........இவளையும் , மிக மிக வேண்டிக்கேட்கவே அவளும் அனுப்பி வைத்தாள். பார்வைக்கு அழகான் பெண் ....வயதும் பொருந்தியது .......சாதி .....மதம்......சொந்த இடம் ......என்பன ஒத்துப்  போகவே .....சுகுமார் தான் விருப்பத்தை சொன்னாள். இவள் தனக்கு வேலை  கிடைக்க வில்லை என் றும் தேடிக்கொண்டிருப்பதாகவும்  சொல்லுவாள். முன்பு சில இடங்களில் தொண்டு அடிப்படையில் வேலை பார்த்த அனுபவமும் உண்டு என்பாள்.   இந்த காலம் மிகவும் ஒரு நெருக்கடிக்குள் இருப்பதால் .......வேலை  கிடைப்பது மிகவும் கஷ்டம் என்றும் ...முயற்சியை  தளரவிடாது ..........தொடரும்படியும் சொல்வான்....இவன் விருபத்தை சொன்ன போது ......அவள் இது நடக்க கூடியதல்ல்....... என்று மறுத்து வந்தாள்.இவனும் விடாமல் கேட்டு வந்தான்.ஒரு நாள் ஒரு முக்கியமான இடத்தில் சந்திக்கும்படி கேட்டு கொண்டான்.......பல வற்புறுத்தல் களுக்கு மத்தியில் ..சம்மதித் தாள்... அந்த நாளும் வந்தது .......என்ன நிற ஆடை என்பதில் இருந்து ....தொலை பேசி எண்கள்  வரை .......பேசி பரிமாறப்பட்டது.....சுகுமாருக்கு மிகுந்த ஆவல்......

அந்த வினாடிகள் நெருங்கவே .....அவன் நண்பனுடன்  ஒரு காபி ஆடர் பண்ணி விட்டு காத்திருந்தான் .   ஒரு சில நிமிடங்களின் .பின் ஒரு பிரத்தியேக வண்டியில்  வந்து சேர்ந்தாள்.......அவள் . அதே நிற ஆடை ..அதே நிற சுடிதார்...
ஆனால் ....

அவனது பேசும் சித்திரம்...சக்கர  வண்டியில் ...மோட்டார் பொருத்த பட்ட ஆளி (சுவிச் )மூலம் இயக்கும் வண்டி .சுகுமாருக்கு அதிர்ச்சியான், அதிர்ச்சி  ...சுதாகரித்துக்கொண்டான்....அவர்களது உரையாடல் தொடர்ந்தது .....விடைபெற்று சென்றனர் ....சுகுமார் மட்டும் ..........கனத்த மனதுடன். முடிவு.............?

சில கிறுக்கல்கள் சித்திரமாகும்....சில சித்திரங்கள் பேசும்..........சில ஓவியமாகும் ....சில காவியங்களை எடுத்துரைக்கும் .இந்த சித்திரம் எந்த வகை ...........

இது  கற்பனைஅல்ல .............நிஜத்தை வரும் நாட்களில் எழுதுவேன்..........

முடிவை நீங்களே யூகித்து  .. ....எனக்கு எழுதுங்கள்

.........முடிவு ............

சுகுமார் ..பின்பும் ஆவலுடன் தொடர்ந்து நட்பில் இருந்தான் அவள் நிலைக்காக கவலைப்பட்டான் . தொடர்ந்தும் அவள் மீது விருப்பு உண்டென்றும் பெற்றவர்களிடம் முடிவு கேட்கும்படியும் சொன்னான்.  அவர்கள் சம்மதிக்க வில்லை ..சீதனம் அழகு அந்தஸ்து பார்க்கும் உலகில் இப்படி ஒருவன் வருவானா? .என்று சந்தேகப்பட்டனர் .......அவள் திருமணம் செய்யலாம் ஆனால் கருத்த்ரிக்க  கூடாது என்று வைத்தியர் சொன்னார் ..தங்கினால் அவள் உடல் நிலை மேலும் சிக்கலாகும் என்றார். காலம் ஓடிக்கொண்டு இருக்கிறது . முடிவு எட்டப்ப்டாமலே .............

Tuesday, January 19, 2010

உனக்கான பெண்.......

உனக்கான பெண்.........

அந்த நகரத்தின் ...சற்று ஒதுக்கு புறமான அழகிய வீடு அதில் , வாழ்த்து வருபவள் தான்  சுஜித்தா  எனும் சுஜி, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தான்.....தன் தாயை கான்சர் வருத்தத்துக்கு பலி கொடுத்தாள். அழகிய அடக்கமான பெண் . சென்ற வருடம் தான் பட்ட படிப்பை முடித்திருந்தாள்.  அவள் தந்தை மிகவும் , நேசிக்கும் ஒருத்தி ..மொத்தத்தில் அவர் அவளுக்காகவே வாழ்கிறார்....அவரது நிருவனங்க் களை மேற்பார்வை செய்வதிலும்....அங்கு ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதிலும் அவரது காலம் .... ஓடிக்கொண்டு இருந்தது....அன்று காலை தேநீரை கொடுத்தவள் அப்பா.....என்று இழுத்தாள். எத்தனை வேலையாட்கள் இருப்பினும் அம்மா நோயாளியாக இருக்கும் போது ......இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டவள். தந்தைக்கு விருப்பமான் தும் கூட . அவ்வேளைகளில் அன்றைய தன் வெளி அலுவல்களை பற்றியும்  கலந்து உரையாடிக் கொள்வார்கள் . இன்று அவள் அப்பா........என்பதில் எதோ தேவை இருப்பதாய் புரிந்து கொண்டார்.....என்னம்மா சுஜி ? .....வந்து எனக்கு போரடிக்குதுப்பா ...மகளிர் சங்க காரியாலயத்தில் ....பணிக்காக் கேட்கிறார்கள். போகலாமாப்பா ...? இங்க பாரும்மா ....உனக்கு தீவிரமாக் மாப்பிள்ளை பார்க்கும் பணியில் இறங்கியிருக்கேன்...வெளித்தொடர்பு ....காதல் அது இது எல்லாம் எனக்கு பிடிக்காத்தாம்மா ...நீ கவனமாய் இருப்பதாக , வாக்கு கொடுத்தால்...உன் ...நேரம் பயனுள்ளதாக இருக்குமானால் போய் வா என்றார். ,,,அவளுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை....மானாக துள்ளி சென்றாள்.  காலம் யாருக்காகவும் ,காத்திராமல் ஓடிக்கொண்டிருந்தது....வீட்டில் இரண்டு கார் இருந்தும்...தன்  உந்துருளியிலே ...(.skooter )
போவாள். ஒரு நாள் ...இடையில் வண்டிக்கு ...ஒரு சிறு சிக்கல் வரவே ..வீதியில் நின்று செய்வதறியாது நின்றாள் .. அந்த வழியில் வந்தது ஒரு வண்டி.....அதிலே ராகுலன்  என்னும் அழகிய  இளைஞன் . , வண்டியை ...திருத்தும் இடத்துக்கு அனுப்பவும். அவளை காரியாலயம் செல்லவும் உதவினான். ......தொலைபேசி மூலம் இவர்களது நட்பும் நீடித்தது ......ஒரு நாள் அவளை தனிமையில் கண்டு பேச விரும்புவதாக சொன்னான். அந்த நாளும் வந்தது....இருவரும் ஒரு ....போது இடத்தில சந்தித்தார்கள்.....அவன் தன் விருப்பத்தை சொன்னான்.....மறு வாரம் சொல்வதாக சொல்லி இருவரும் விடை பெற்றனர்....மறு வாரத்தில் ஒரு நாள் அவன் அலுவலக முகவரிக்கு ஒரு மடல்........

நட்புடன் ராகுலனுக்கு.........என்னைக்கண்டதும் என் பால் ஈர்க்க பட்டதும் எனக்கும் புரியும . ஆனால் ....உங்களுக்கான பெண் நானல்ல .......இந்த உலகம் பூந்தோட்டம் ஆயிரம் பெண்களை சந்திக்கலாம் ஆனால் நான் என் தந்தையின் சொல்லை மீற முடியாதவளாக இருக்கிறேன்.....ஒரு வேளை நீங்கள் என் தந்தையிடம் பெண்கேட்டு வந்து அது நிறைவேறினாலும் ....நிறைவேறாவிடாலும்.....நான் உங்களை காதலித்தேன் என அறிந்தால்  என் தந்தை என்னை இருபத்து மூன்று வயதுவரை வளர்த்த ...பாசம்....சத்தியம்... இன்றும் இன்னொரு மனைவியை தேடாத வைராக்கியம் ,...என்பவற்றை சிதறடித்தவளாகி விடுவேன் .......ராகுலன் .....என்னை மன்னித்து விடவும்....இந்த எண்ணம் வரும் என, எண்ணியியிருந்தால்...உங்களிடம் நட்பை  வளர்த்திருக்க  மாட்டேன் .....சத்தியத்தை ..காப்பாற்ற மிகவும் போராடுபவள்....அப்பா எனக்கு விரைவில் திருமண பணத்தில் ஈடுபட வைக்க இருக்கிறார்..அவர் விருப்பமும் ஆசைகளும் ....எனக்கு மிகவும் முக்கியம்....உங்கள் , எண்ணத்தை நிறைவேற்ற முடியாமைக்கு வருந்துகிறேன்......இந்த எண்ணம் தொடர்ந்தும் உங்களுள்ளத்தில் இருக்குமானால் என்னை தொடர்பு கொள்ள , தொந்தரவு செய்ய , வேண்டாம்.......
நட்புடன் சுஜி .........

.மடல் கண்ட ராகுலனுக்கு.......அவன் ஏக்கத்துக்கு ஒரு இடி......இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பெண்ணா? ........இரண்டு வாரங்களாக ஒரு பதிலும் சொல்லாதிருந்தான்....மூன்றாம் வாரம்....

.நட்புடன் சுஜிக்கு......செல்வ செழிப்பிலும் ...உன் தந்தையின் ..வளர்ப்பிலும்..... உன் அழியாத பாசத்தை மெச்சுகிறேன்.....என விருப்பம்  உன்னிடம் ஒரு விண்ணப்பம் மட்டுமே .......உன் இன்பமான் மண வாழ்வுக்காக வாழ்த்தும் ராகுலன்.......

.மறு வாரமே அவளுக்கு நிச்சய தார்த்தங்களுக்கான  ஆயத்தங்கள் நடந்தது ......சுஜி யின் தூரத்து உறவு......அமெரிக்காவில் மேற்படிப்புக்காக சென்றவன்.......சுஜியையும் ஏற்று தந்தையின் ..தொழிலை  பொறுப்பெடுத்து பார்துக்கொள்வதாக் ஏற்றுக்கொண்டு ....வாக்கு சொன்னவன்.....பாலேந்திரன்........சுஜிக்கு மண மகனாக  ஏற்படுத்த பட்டான்.....

சில காதல் கனிந்து மணம் பரப்புவதுண்டு .....பல காதல்  மலராமலே போவதுண்டு.....ஒரு சில மலர்ந்து இடையில் வாடி விடுவதும் உண்டு........ராகுலனுக்கான் பெண்......அவள் அல்ல ..எங்கோ ஒருத்தி பிறந்திருப்பாள்.......

Thursday, January 14, 2010

தை மகளே வருக ...........

..
புதுப்பானையில் புத்த்ரிசியிட்டு
சுவையோடு சக்கரை சேர்த்து
பால் பழமும், இன்முகம்  கூட்டி
வரவேற்கிறோம் ,தை மகளே வா.
இன்பம் தரவா..இன்னல் தீர்க்க வா
ஈழத்து மக்களுக்கு விடிவு கொண்டு வா

பழையன கழிய வேண்டும்
புதியன புக வேண்டும்
காக்கைக்கு உணவளித்த கூட்டம்
கால் பருக்கைக்கு வழி யில்லை
புத்தர் சிலை சிந்தையில்  வழிபட்டு
ரத்தாபிஷகம்செய்யும்  பாதகர் கூட்டம்
குற்றம் உணர்ந்து உண்மைதெரிந்து
ஆவன செய்ய வேண்டும்  

கலப்பை மறந்த பூமியில்
உழவுத்தொழில் உதாசீனம்
மாதாவை மறந்தாலும்
மண் மாதாவை மறவோம்
கடைசி தமிழன் உள்ளவரை
பொங்கிடுவோம் தைப்பொங்கல்

Sunday, January 10, 2010

பொங்கல் வாழ்த்துக்கள்..............

பொங்கல் வாழ்த்துக்கள்..............

வலைத்தள  நட்புகள் .....வாசகர்கள் .அனைவருக்கும் என் இனிய தைபொங்கல் நல்வாழ்த்துக்கள். விசெடமாக் ஈழத்து மக்கள் வாழ்வில்  இன்பம் .....அமைதி வாழ்வு .......அன்றாட தேவைகள்  யாவும் கிட்டவேண்டும். இதனால் மகிழ்வும் எதிர்கால் நம்பிக்கையும் தேடி வரும். உள்ளம் உடைந்து போனவர்கள் மன அமைதிகிட்டி ........இல்லிடம் .....தொழில் துறை ....கிடைக்க பெற்று மனித நேயமுடன் மக்கள் வாழ்வு சிறக்க வேண்டும் ........மீண்டும் என் வலைத்தள நட்புகள் .....வாசகர்கள் .....நலன் விரும்பிகள் யாவருக்கும் இனிய வளமான வாழ்வு பொங்க வாழ்த்துகிறேன். .

Friday, January 8, 2010

தொலைந்து போனவைகள்.

 வணக்கம் என் வலைப்பதிவுலக நட்புகளுக்கு .........உங்கள் அன்பான் நலன் விசாரிப்புகள் பாராட்டுகள் ... புதுவருட வாழ்த்துகள்   கருத்துகள் என்னை மேலும் தென்பு கொள்ள வைத்து எழுத தூண்டுகின்றன. என்றும் உங்கள் அன்புக்கு நான் தலை சாய்த்து வணக்கமும் நன்றியும் சொல்லிக்கொள்கிறேன்.

தொலைந்து போனவைகள்.

போர் சூழலினால் வஞ்சிக்கபட்ட ஒரு  இளைஞனின்   கதை. அமைதியான அந்தக் கிராமத்துக்கு படையினர்  உட்புகு மட்டும் மக்கள் சாதாரண வாழ்வு தான் வாழ்ந்தார்கள். அதன்பின்பு தான் எல்லாமே தலை கீழாய் போனது. சீர் குலைந்து நிம்மதி இழந்தது.

பால பாஸ்கரன் அந்த கிராமத்தின் , ஊர்ச்சங்க தலைவரின் மகன். ஊர்பள்ளிக்கூடத்தின் உதவித் தலைமை ஆசிரியராய்  இருந்தான். காலாகாலத்தில் திருமணம் செய்து ....மனைவி கற்பமாய் இருந்த காலத்தில் தான் ராணுவத்தினர் கிராமத்துள் புகுந்தனர்  . சோதனை என்றும் சந்தேகம் என்றும் கைது செய்துகொண்டு சென்றுவிடுவார்கள். இதில் பாஸ்கரனும் விதிவிலக்கல்ல. பலமுறை கொண்டு சென்றாலும்.பாடசாலையை காரணம் காட்டி வெளிவந்து விடுவான். இவர்களது தொல்லை தாங்க முடியாமல்,
வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி சென்றான். பின்பும் ஊர் நோக்கி வரும் போது சோதனைக் கெடு  பிடிகள் அதிகரிக்கவே வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி
ஐரோப்பிய நாடொன்றுக்கு பயண மாக  முடிவெடுத்தான். இதன் போது
மனைவிக்கு பேறு காலம் வரவே அவள்அழகிய குழந்தையை பெற்று  எடுத்தாள், வைத்திய சாலையில்   குழந்தையை பார்த்து வந்த போது வெளிநாட்டு பயணம் சரிவந்த்தாக தகவல் வரவே ..மூன்றாம் நாள் மனைவி குழந்தையை  தன் தாய் தந்தையின் பாதுகாப்பில் விட்டு புறப்பட்டான். பல அலைச்சல் களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் சுவிஸ் நாட்டுக்கு போய் சேர்ந்தான். காலம் ஓடிக்கொண்டே இருந்தது ஆனாலும் அவனுக்கு அந்நாட்டு வதிவிட் அனுமதி கிடைக்கவில்லை.......வருடங்கள் எழு உருண்டோடி விட்டன. .

தாயகத்தில் ..தாயும் சேயும் நலமே வளர்ந்து வரும் காலத்தில் .மேலும்மேலும் யுத்தம் .மும்முரமடையவே ...பாஸ்கரன் மனைவி திலகா .....குழந்தை யுடன் அவளது தம்பியின் ஆதரவுடன் ....கனடா நோக்கி புறப்பட்டாள்....சில தடங்கலுக்கு மத்தியில் ....அவளுக்கும மகனுக்கும் அகதி நிலை அங்கீகரிக்க பட்டது.....மகனின் குரல் கேட்க அடிக்கடி தொலை பேசி அழைப்பு வரும். ....இறுதியில் மகனும் தாயும் தந்தையை பார்க்க புறப்பட்டனர் . பிறந்த போது பார்த்த தன் மகனின் தோற்றங் கண்டு அப்பா   பாஸ்கரன் மலைத்து போனான் .மகன்  பாலகுமாரனும் ஆசை தீர தந்தைமடியில் விளையாடினான்.  அவனதுகுழந்தைப்ப் பருவம்  ....மழலை பருவம்...பேச்சு ப்பருவம் ..என்பவை எல்லாம்........இழந்து விட்ட சோகம் மட்டும் தந்தை உள்ளத்தினுள்ளே இருந்தது.   மூன்றுமாத விடுப்பில் சென்ற தாயும் மகனும் பிரிய மனமின்றி ..........பிரிந்து கனடா வந்து சேர்ந்தனர் .........

.பாஸ்கரன் மனைவி .........கணவனை பொறுப்பெடுக்க முடிவு செய்தாள். இங்கு வேலையும் குழந்தையும் காலநிலையும் அவளுக்கு இலகுவாக் இருக்கவில்லை .  அங்குசுவிசில  வைத்து குடும்ப இணைவு  முறையில் செய்ய முடியாததால் அவன் ஒரு சமாதானகால ஒப்பந்தம் வரவே   மீண்டும் தாய்நாட்டுக்கு சென்றான். ஒருவாறு  குடும்ப இணைவு முறையில் ...சட்ட திட்டங்களுக்கு ஏற்ப அவன் நாலு வருடத்தில் ..........வந்து சேர்ந்தான். மகனுக்கு வயது பதினைந்து ....ஆசைக்கும் அருமைக்கும் ஒரே யொரு  குழந்தை .புலம் பெயர் வாழ்வுகள் தந்த சோகம் ...இழப்பு .........வீணாகிய இளமை ........கண்ணீரில் தொலைத்த  காலங்கள். மது மயக்கத்தில் தூங்கிய இரவுகள் ....தனிமை..........மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்த கரங்கள். ..உறவுகளின் ஒத்துழையாமை.  யுத்தம் . அதன் கோரத்தாண்டவம் அழிவு ......எந்த ஒரு இனத்துக்கும் வேண்டவே வேண்டாம். இது ஒரு சிறு கதை மட்டுமே ....

புலம் பெயரும் போது சந்திக்கும் இடர்கள் சோதனைகள்  ....அவை எழுத ஒரு ....சரித்திரபுத்தகம் வேண்டும்.   எழுத்தில் வடிக்க கூடியவை ஒரு சில.   எழுதாத பல உள்ளத்துக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

Wednesday, January 6, 2010

அன்று அவர் இல்லை என்றால்.............

அன்று அவர் ... இல்லை என்றால்.............

புது வருடம் பிறந்தும் ஆறு நாட்களாகி விட்டது . ஒரு பதிவு போட முயல்கிறேன் இடையில் சிறிது சுகவீனமும் கூட வாட்டி விட்டது . இருப்பினும் ,உங்களை எல்லாம் வலைத்ததள மூடாக   காண்பதில் மிக மிக மகிழ்ச்சி. .....அண்மையில் என் வீடில் உறவுகளும் நட்புகளும் கூடினார்கள் . கலகலப்பாக இருந்தது. பழையசம்பவங்கள் , ஊர் நினைவுகள்....பள்ளி வாழ்க்கை ..... சிலதும் நிழலாடியது . அதில் இருந்து  ஒரு சிறு கதை. ......

அப்போது பாஸ்கரனுக்கு பதின் மூன்று வயது இருக்கும். துள்ளித்திரியும் பருவம். அவசரமும் ஆர்வமும் எட்டிபார்க்கும்.வயசு.......... இவனது தாயார் ........அதே வீதியில் பிரதான சந்திக்கு அண்மையில் உள்ள சித்தியின் வீட்டில் கொடுக்கும்படியாக , சிறிது பணத்தை இவன் இடம் கொடுத்தனுப்பி இருந்தார். பணத்தை கொடுத்தபின் அங்கு சித்தியின் வீட்டுக்குச்  சென்றதும் அவரது குழந்தைகளுடன் விளயாடி விட்டு , வீடு திரும்புவதாக் சொன்னவன் சித்தி வறுத்துக்கொண்டு இருந்த அரிசிமாவில் வரும் சிறு கட்டிகளை சுவைக்க ஒரு ஆர்வம் வந்தது ..மாவறுக்கும் போது அதில் சில கட்டிகள் தோன்றும் அதை சுவைப்பதில் சிலருக்கு இன்பம். சில கட்டிகளை எடுத்து மாவுடன் சேர்த்து வாய்க்குள் போட்டு விட்டு ....புறபட்டான்

. சில....நிமிடங்கள் நடந்தவனுக்கு தொண்டைக்குள் சிக்கி விட்டது. சத்தம் போட்டு உதவி கேட்கவும் முடியவில்லை.......அவனுடைய .நல்ல காலம் அவ்வீதியின் அருகாமையில் ஒரு முதியவர் ,கிணற்றில் தண்ணீர் அள்ளிக்கொண்டு இருந்தார். இவன் சைகைகாட்ட ...அவர்  தண்ணீர் வாளியுடன் ஓடி வந்தார்.   இவனுக்கு விழி  பிதுங்கி ...மூச்சடங்கி .....மயங்கும் நிலையில் விழுந்துவிடான். கால் கைகளை அடித்தவாறு.........உடனே அவர் கொண்டுவந்த தண்ணீரால் முகத்தில் அடித்து ,  பின் பிட்ரிபக்கம் சற்று தட்டிக்கொடுத்து . குடிக்க கொடுத்து ...ஒருவாறு விழிப்படைய  செய்து விடார்.  பின் அவனை  ஆசுவாசபடுத்தி....வீடுக்கு அனுப்பி வைத்தார் .........இன்று  அந்த சிறுவன், இளைஞ்சனாகி இருகுழந்தைகளுக்கு தந்தை .........அந்த முதியவர் எனது,   தாத்தா....( அம்மப்பா) ........ உங்கள் தாத்தா..அன்று இல்லையென்றால் இன்று இங்கு இருந்திருக்க மாட்டேன்.   என்று கண்ணீர் மல்க கூறினார்.

எனக்கும் என் ஊர் நினைவுகளுடன் .....பல இளம் பராய நினைவுகளும் ....அலையலையாய் வந்து போயின. பெருநாள் விடுமுறையும் ........புது வருட ஆரம்பமும் இனிதே கழிந்தன. ..கடந்து போன வாழ்வை  அசைபோட்டுப் பார்ப்பதிலே
தான் எத்தனை சுகம். .

.பழைய கால் நினைவுகளை மீட்டிப் பார்ப்பதே ஒரு தனி சுகம். .........புலம்பெயர் வாழ்வில் இத்தகைய சுகங்கள் எமது குழந்தைகளுக்கு கிடைக்குமா?  என்பதே கேள்விக்குறியாக உள்ளது .ஒவ்வொருவரும் தனித்தனி தீவாக் வாழ்கிறார்கள். ஊர் .....உறவு ...சொந்தங்கள் என்பனவற்றை நிலைநாட்டுவார்களா என்பது சந்தேகமே. .