என் தாயக் நினைவுகளை மீட்டும் பதிவு........அதிகாலை எழு மணி இருக்கும். சென்றவாரம், ஒரு வெளி நாட்டு தொலைபேசி அழைப்பு. மறு முனயில் இதுவரை கேளாத குரல் சற்று வித்தியாசமாயும் இருந்தது........." அக்கா நான் லச்சுமி பேசறேன் நல்லாய் இருக்கீங்களா? எந்த லட்சுமி ..........? என் நினைவுகள் பின்னோக்கி பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன் ....ஓ....ஒ........அவளா ? இனம் தெரியாத மகிழ்ச்சி ...வியப்பு ஆச்சரியம் என என் நினைவுகள் தாயகம் நோக்கி பறந்ததன........
Followers
Saturday, December 18, 2010
Tuesday, December 14, 2010
சிரிப்.. பூ ..சிரிக்கலாம் வாங்க..ஹா ஹா
http://www.youtube.com/watch?v=zskO9O3hF78&feature=player_embedded
சிரிப்.... பூ ......சிரிக்கலாம் வாங்க. .ஹா ஹா ஹா
சிரிக்க கூடிய ஒரே ஒரு விலங்கு மனிதன். சிரிப்பு கவலைகளை மறக்க வைக்கிறது மனதுக்கு உற்சாகத்தை தருகிறது .சிரிப்பு பல வகை கள்ள மில்லா குழந்தைச்சிரிப்பு கன்னியரின் புன் சிரிப்பு. நமட்டு சிரிப்பு ...ம்ம்ம் ...ஆணவச்சிரிப்பு. சிரிப்பு தசைகளுக்கு பயிற்சியளிக்கிறது .மனசு இலேசாகிறது . இளமையை கூட்டுகிறது.
என்னுடன் சேர்ந்து நீங்களும் சிரியுங்கள்.
சிரிப்.... பூ ......சிரிக்கலாம் வாங்க. .ஹா ஹா ஹா
சிரிக்க கூடிய ஒரே ஒரு விலங்கு மனிதன். சிரிப்பு கவலைகளை மறக்க வைக்கிறது மனதுக்கு உற்சாகத்தை தருகிறது .சிரிப்பு பல வகை கள்ள மில்லா குழந்தைச்சிரிப்பு கன்னியரின் புன் சிரிப்பு. நமட்டு சிரிப்பு ...ம்ம்ம் ...ஆணவச்சிரிப்பு. சிரிப்பு தசைகளுக்கு பயிற்சியளிக்கிறது .மனசு இலேசாகிறது . இளமையை கூட்டுகிறது.
என்னுடன் சேர்ந்து நீங்களும் சிரியுங்கள்.
Friday, December 3, 2010
கிறிஸ்மஸ் பரிசாக என்ன வேண்டும் ?
அந்தக் கன்னியர் மடம். அங்கு இருபகுதிகளாக் பிரிக்க பட்டு பலகால்மாக இயங்கி வந்தது. இருப்பினும் சில ஆண்டு களுக்கு முன் படையினரின் அட்டகாசங்கள் குண்டு மழை போன்றவரால் சீர் குலைந்து . ஒரு சில மாதங்கள் தான் அது புனரமைக்க் பட அனுமதி பெற்று , ஆரம்பிக்க பட்டது . கடந்த கால் நடவடிக்கையில் குண்டுவீச்சுக்கும் கூரை சிதைவுகளுக்கும். கன்னியர் மடங்கள் தேவாலயங்களும்விதிவிலக்காகவில்லை.
அந்த மடத்தில் , இப்போது தான் , சில புண்ணியவான்களின் நன்கொடையினாலும் தொண்டு ஸ்தாபனங்ளின் உதவியாலும் சிறுக சிறுக கட்ட பட்டு கொண்டு இருக்கிறது.அண்மையில் பல வயதிலும் பெண் சிறுமிகள் சேர்க்க பட்டார்கள். ஆண்களுக்காக இதற்கு அடுத்த தெருவில் , மிக சிறு அளவில் சேர்ந்த பிள்ளைகளுடன் ஏற்கனவே இருந்த நிலையம் புனரமைக்க படப் போகிறது. இந்த சிறுமிகளில் பலர் தாயையும் தந்தையையும் இழந்தவர்கள் ஒரு சிலர் தாயை இழந்தவர்கள் சிலர் உறவுகளால் சேர்க்க பட்டவர்கள். அவர்களுக்கான அடிப்படை உதவியுடன் முதலில் இங்கும் பின்பு அதனுடன் தொடர்பு பட்ட கல்விக்கூடத்திலும் வயதுக்கேற்ப சேர்க்க படுவார்கள்.
Tuesday, November 30, 2010
அளவோடு ஆசைப்படு.........
ஆசையே அலை போல நாமேலாம் அதன் மேலே........
ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான்.
தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான்.
பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.
ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான்.
தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான்.
பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.
Thursday, November 25, 2010
இது சோகங்கள் சுமந்த வாரம்.
http://www.youtube.com/watch?v=koFEEMYgrr8&feature=player_embedded
எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும் .
இது சோகங்கள் சுமந்த வாரம். ஒவ்வொரு ஈழத்தமிழன் வீடிலும் நடந்த இழப்ப்பு வருடாவருடம் அவர்களை நினைக்கும் வாரம். காலப் பெருந்துயரில் அவர்களை இழந்தாலும் அவர்களின் ஆசைகள் நோக்கங்கள் என்றோ ஒருநாள் நிறைவேறும்.
எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும் .
இது சோகங்கள் சுமந்த வாரம். ஒவ்வொரு ஈழத்தமிழன் வீடிலும் நடந்த இழப்ப்பு வருடாவருடம் அவர்களை நினைக்கும் வாரம். காலப் பெருந்துயரில் அவர்களை இழந்தாலும் அவர்களின் ஆசைகள் நோக்கங்கள் என்றோ ஒருநாள் நிறைவேறும்.
Friday, November 19, 2010
என் இதயம் கவர்ந்தவளே
என் இதயம் கவர்ந்தவளே
கண்கள் கண்டதால்
கவரபட்டதால்
காதல் கொண்டதால்
கருத்து ஒன்றி அதனால்
இணைந்து கொண்ட இருவர்
கருத்து வேறு பட்டாலும்
கடிந்து பேசினாலும்
பிரிந்து போகலாமா
கனத்தத் மனதுடன்
கலந்து பேசி நாமும்
கலைத்திடுவோம் பகை
கன்னி உனக்கு ஆகாது
கருத்து மோதலில்
கரையும் நம் வாழ்க்கை
கண்மணியே வா
காலமெலாம் கை
கொடுப்பேன்
காலம் இன்னும்
கடக்க வில்லை
மன்னிப்போம் மறப்போம்
மங்கை நீ மனது வைத்தால்
மா மலையும் ஒரு துரும்பு
மகிழ்வான காலம் இருக்கு
மனது வைத்து மன்னித்தால்
மாலை யிட்ட மணாளனின்
மனது தன்னை புரிந்து விடு
புரிதலும் விட்டுக் கொடுத்தலும்
இனிய இல்லறத்துக்கு
புகழ் சேர்க்கும் புனித மொழி
புரிந்து கொள் , புறப்படுவாய்
புகலிடம் நோக்கி
உன் வரவைக்கான விரும்பும் ................
Monday, November 15, 2010
பசி தீர்க்கும் தாய்மை
நம் பசி தீர்க்க தன்
பசிக்கு உணவு
நாடிச் சென்றவள
சென்றும் பல நாழியாச்சு
நலமோடு வரும் வரையில்
நாம இருப்போம் ஒற்றுமையாய்
நகர்ந்து சென்று ஓடாதே
நன்றும் தீதும் காத்திருக்கும்
நிறத்தில் வேறு கண்டாலும்
நிஜத்தில் நாம் உறவுகள்
பத்திரமாய் நாம் இருப்போம்
சென்ற வழி பார்த்திருப்போம்
பதறாதே சோதரி
பகல் பொழுது சாய முன்
பசி தீர்க்கும் தாயவள்
பாயந்து ஓடி வந்திடுவாள்
அண்ணாவும் நானுமாய் .....
அண்ணாவும் நானுமாய்
மகிழ்ந்திருந்த காலங்கள்
விளையாட்டு தோழனாய்
துணைக்கு உற்ற நண்பனாய்
பிரித்தது உயர் கல்வி
என்னும் உயர் கடமை
தனி மரமாய் நானும்
தவித்திருந்த வேளை
துணையாகி வந்தான்
நண்பனேனும் கோபி
அவனது பழக்கங்கள்
என்னுடன் ஒட்டின
கூடா வேறு நட்புகளும்
கேடாய் முடிந்தது
பாடாய் படுத்துகிறது
கூடம் என்னும் சிறைக்கூடம்
வாடுகிறேன் அண்ணா
உனை எண்ணி நாளும்
வந்து ஒரு வழி சொல்லு
விட்டு விடுதலை யாகி விட
வீண் வேடிக்கை கதையல்ல்
உன் உயிர் மீது சத்தியம்
பெற்றவர் உற்றவர் இன்றி
தேடுகிறேன் விடுதலை
Thursday, November 11, 2010
மாலதி டீச்சர் ............
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்கனவே அண்ணவின் பை தண்ணீர் போத்தல் மத்திய உணவு பெட்டி என்று தோளில் மாட்டி பல முறை ஒத்திகை பார்த்தாயிற்று . அந்த சுப நாளும் வந்தது . முதலில் பாலர் வகுப்பு என்னும் .( அரிவரி )வகுப்பு . முதல் நாள் அதிகாலயே எழுந்து விட்டேனாம். அப்பா அப்போது பட்டணத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். எனது நச்ச்ரிப்பு தாங்காமல் அம்மா கடிதம் எழுதி எனக்கு தேவையாதை ஒரு நண்பர் மூலம் கொடுத்து விட்டிருந்தார் . பள்ளிக்கு போகுமுன்பே அதை பிரித்து ஒத்திகை பார்த்தாயிற்று. அந்த சுப நாள் ஒரு திங்கட்கிழமை. மாத ஆரம் பம என எண்ணுகிறேன். அங்கு இரு பெண ஆசிரியைக ளும் ஒரு தலைமை ஆசிரியை .அவர் ஒரு துறவி ( சிஸ்டர் ) .அரச பள்ளியின் அருகாமையில் அமைந்து இருத்தது. அம்மா அறிமுகம் செய்து அந்த மாத கட்டணம் செலுத்தி விட்டு விடைபெற ஆரம்பித்தார்.
Monday, November 8, 2010
விடிவு பிறக்கும்.
ப ரந்த வெளியிலே
ஒற்றை மரமாய்
தனித்து நின்றாலும்
இரைதேடும் பட்சிகளுக்கு
தங்குமிடமாகிறது
மேற்கே மறையும் சூரியனும்
தெளிந்த நீரோடையும்
மெல்லென் தழுவிச்
செல்லும் காற்றும்
நீரிலே தோன்றும்
சூரிய ஒளியும்
இரவை நோக்கி
நகர்ந்து சென்று
விடிவு என்னும் உதயம்
உனக்கும் எனக்குமாய்
ஆழ்ந்த நம்பிக்கையோடு
நிச்சயம் பிறக்கும்
Thursday, November 4, 2010
மழலைகள் வரைந்த ஓவியம்
சிற்ப்பிகள் இருவர்
வரைந்த சித்திரம்
வெள்ளை நிறத்தில்
விடை இல்லா விளையாட்டு
மழலைகள் கோலங்கள்
வியந்தவர் பலர்
நிலவுகள் எழுதிய
கவிதைகள் இங்கு
சமாதான நிறத்தில்
கோலங்களை ரசிப்பதா
தரையை சுத்தஞ் செய்வதா
கோபம் கொண்டு அடிக்கவா
குளிக்க விடுவதா
குறுஞ்செய்தியில் போடவா
குஞ்சுகளை என்ன செய்வேன் .....
..நீங்களே சொல்லுங்கள்
படத்தை கண்டதும் வந்த ரசனை .எப்படி இருக்கிறது .?.
வரைந்த சித்திரம்
வெள்ளை நிறத்தில்
விடை இல்லா விளையாட்டு
மழலைகள் கோலங்கள்
வியந்தவர் பலர்
நிலவுகள் எழுதிய
கவிதைகள் இங்கு
சமாதான நிறத்தில்
கோலங்களை ரசிப்பதா
தரையை சுத்தஞ் செய்வதா
கோபம் கொண்டு அடிக்கவா
குளிக்க விடுவதா
குறுஞ்செய்தியில் போடவா
குஞ்சுகளை என்ன செய்வேன் .....
..நீங்களே சொல்லுங்கள்
படத்தை கண்டதும் வந்த ரசனை .எப்படி இருக்கிறது .?.
Wednesday, November 3, 2010
Tuesday, November 2, 2010
அம்மா உன் அன்பு உள்ளவரை
அம்மா உன் அன்பு உள்ளவரை
தனிமை தெரிவதில்லை
உன் கரிசனம் இருக்கும் வரை
உணவும் தேவையில்லை
தனித்த் போது ஒரு சிணுங்கலில்
தாவி ஓடி அணைத்திடுவாய்
அள்ளி முத்தம் தந்திடுவாய்
அம்மா மடி மீதும் நான் மட்டும் அரசாட்சி
கண்ணுறங்க கதை சொல் வாய்
அப்பாவை எனக்கு
அறிமுகம செய்தவளே
தப்புக்கள் நான் செய்தால்
தட்டிக் கேட்பவளே
பகட்டான பட்டுச்சட்டை
கலர் கலராய் காலுறை
மெத்தென்ற சப்பாத்தும்
கை காது கழுத்துக்கும்
நகையணிபூட்டி
அழகு பார்த்தவளே
பள்ளிக்கு சென்று நானும்
பாடங்கள் பல படித்து
பரீட்சையில் சித்தி பெற்று
பட்டங்கள் பல பெற்று
பாங்காய் ஒரு பணியிடத்தில்
பல்லாயிரம் பணம் பெற்று
பக்குவமாய் வீடு கட்டி
பல பேரும் பார்த்து நிற்க
பாரினிலே தலை நிமிர்ந்து
"பாருடா என் பிள்ளயை "என்று
மார் தட்டி புகழ் வைப்பேன்.
கலங்காதே என் தாயே ......
காலம் .....ஒரு காலம் வரும் ..
கனவில்லை இது நிஜம்
Monday, October 25, 2010
அழகுக்குட்டி செல்லம் .
அழகுக்குட்டி செல்லம்
நல்ல பண்பான் பொறுமை சாலி மருமகன். தானே எழுத்து காலையில் காப்பி காபிபோட்டு குடித்து தன் சாப்பாட்டு பெட்டி ( குளிரூட்டியில் இருக்கும்) எடுத்துக் கொண்டு மனைவிக்கு காப்பியும் வைத்து விட்டு செல்வார். மாலை ஆறு மணியாகியதும்....நம்ம கதாநாயகி வாயிலை பார்த்த படியே இருப்பாள். கதவில் திறப்பு போட்டு சத்தம் கேட்டதும் ......ப்பா ......ப்பா என்று தாவியோடுவாள். மீண்டும் தாயிடம் வ்ர கஷ படுவாள் பிகு பண்ணுவாள். .என என் அக்கா மகள் சொல்வாள் . நானிவளை கழுவி துடைத்து உணவூட்டி தூங்க வைத்து பாலூட்டி எல்லாம் செய்கிறேன் . அழும்போது மட்டும் ம்மா மா என்கிறாள். மற்றும்படி ஒரே ப்பா ப்பா தான்.......கணவனுக்கு
( மருமகன்) தாயின் சுருளான கேசம், தனது நிறத்தில் மகள் கிடைத்ததை இட்டு உள்ளூர பெருமை. பெண குழந்தை கள் தந்தையுடன் கூட ஓட்டுத்லாய் இருப்பார்கள் என்று சொல்வார்கள். கண்மணியான .செல்லத்துடன் ஒரு உயிரும் ஈருடலுமாய் தான் வாழ்கிறார்கள். .
Tuesday, October 19, 2010
கடந்து போன காலம் .
கடந்து போன காலம் .
அந்தக் குடும்பத்தில் ஐந்துபேருமே பெண குழந்தைகளாக பிறந்து விட்டனர் .பூமலர் கந்தையா தம்பதிகளுக்கு . கந்தையா கடன் உழை ப்பாளி பயிற்செய்கை உத்தியோகத்தராக பணி புரிந்தார். மூத்தவள் நல்ல கெட்டிகாரி .படிப்பாலும் ஊக்க்மானவள் தானும் படித்து தன் உடன் உறவுகளுக்கும் சொல்லிக் கொடுப்பாள். நான்காவது பெண நல்ல சூட்டிகையான் பெண அழகான் சுருள் சுருள் ஆன கேசம் பார்பவர்களை கொள்ளை கொள்ளும். அழகு .மூத்தவள் பருவம் வந்ததும் ஒரு பள்ளி ஆசிரியருக்கு வாழ்க்கை பட்டாள். இரண்டாவது பெண லண்டனில் உள்ள ஒரு நிறுவன் அதிகாரிக்கு திருமணம்பேசி அனுப்பினார்கள். மூன்றாவது சற்று கர்வமான் பெண . அசிரியையாக் உள்ளூரில் பணியாற்றினாள். இவளுக்கு திருணம் பேசி வருமாறு அவ்வூர் புரோக்கரிடம் சொல்லி வைத்தார்கள். நான்காமவள் தனியார் கல்லூரியில் கணணிக் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள். கடைக்குட்டி ( ஐந்தாவது பெண ) உயர்கல்வி கற்றுக் கொண்டு இருந்தாள்.
அந்தக் குடும்பத்தில் ஐந்துபேருமே பெண குழந்தைகளாக பிறந்து விட்டனர் .பூமலர் கந்தையா தம்பதிகளுக்கு . கந்தையா கடன் உழை ப்பாளி பயிற்செய்கை உத்தியோகத்தராக பணி புரிந்தார். மூத்தவள் நல்ல கெட்டிகாரி .படிப்பாலும் ஊக்க்மானவள் தானும் படித்து தன் உடன் உறவுகளுக்கும் சொல்லிக் கொடுப்பாள். நான்காவது பெண நல்ல சூட்டிகையான் பெண அழகான் சுருள் சுருள் ஆன கேசம் பார்பவர்களை கொள்ளை கொள்ளும். அழகு .மூத்தவள் பருவம் வந்ததும் ஒரு பள்ளி ஆசிரியருக்கு வாழ்க்கை பட்டாள். இரண்டாவது பெண லண்டனில் உள்ள ஒரு நிறுவன் அதிகாரிக்கு திருமணம்பேசி அனுப்பினார்கள். மூன்றாவது சற்று கர்வமான் பெண . அசிரியையாக் உள்ளூரில் பணியாற்றினாள். இவளுக்கு திருணம் பேசி வருமாறு அவ்வூர் புரோக்கரிடம் சொல்லி வைத்தார்கள். நான்காமவள் தனியார் கல்லூரியில் கணணிக் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள். கடைக்குட்டி ( ஐந்தாவது பெண ) உயர்கல்வி கற்றுக் கொண்டு இருந்தாள்.
Friday, October 15, 2010
மாற்றங்கள்
அழகான அந்த சின்னஞ் சிறு கிராமத்த்து வாழ்க்கை அமைதியாகவும். மனோரம்மியமாகவும் இருந்தது . அதிகாலையின் ஆலய மணி ஓசை பறவைகளின் இனிய ஒலி ..காலையில் பரபரப்பான் அந்தக் கிராமம் நெல் வயல்கள் , பேரூந்துக்காக பயணிப்போர் துவிச்சக்கர வண்டியில் பாடசாலை செல்வோர் , என்று அந்தக் கிராமம் அதிகாலயிலே விழித்து விடும். இத்தகைய சூ ழலில் வாழ்ந்தவள் தான் காவியா...அதிகாலையில் எழுந்து காலைக் கடன் முடித்து , வீட்டு முற்றம் கூட்டி காலை உணவு உண்டு பாடசாலை செல்வாள். சில சமயம் நண்பியுடனும் சில சமயம் தனிமையிலும் செல்வாள். இத்தகைய நாளில் இரு கண்கள் அவளை கூர்ந்து கவனிக்க் தவறுவதில்லை . ஆம் அவ்வூரை சேர்ந்த வாத்தியார் பையன். கணேஷ் மிகுந்த .ஆவலுடன் சிநேகமாய் இருக்க முற்படுவான் அவள் அவ்வூரின் கட்டுபாட்டுக்குரிய வெட்கம் பயம் காரணமாக் விரைவாக் சென்று விடுவாள் இருந்தும் அவளது பதினைந்தாவது வயதில் ஒரு நாள் அவன் இவளைக் காதலிப்பதாக கடிதம் கொடுத்தான். பயத்திலும் வெட்கத்தில் அதை மறைத்து வைத்தாள் ஒரு நாள் நண்பிக்கு சொன்னாள் . அவளோ இது படிக்கும் காலம் அவன் மீது கோபம் இல்லை என்னை படிக்க விடு என்று பணிவாக் மடல் எழுதும்படி சொன்னாள் . அவனும் சம்மதித்து போகவே காதல் பார்வையே அவர்கள் மொழியானது.
Tuesday, October 12, 2010
அக்கா ...என்னும் உயிர்
கடந்த வார விடு முறையில் என் நண்பியின் இழப்பு லண்டனில் நடந்து விட்டது .துக்கம் தெரிவிக்க அவள் சகோதரி வீட்டுக்கு சென்று இருந்தேன். நண்பி என்று சொல்வதிலும் எனது உறவினள். என்னோடு சிறுவயதில் கூடப் படித்தவள். கால மாற்றத்தில் பிரிந்து அவள் லண்டன் சென்று விடாள். அவளது ச்கொதரி எனக்கு அண்மையில் உள்ளாள். காலம் சில நல்லவர்களை விட்டு வைப்பதில்லை. சிறுவயதில் அவளுக்கு மூத்தவன் ஒரு ஆண் சகோதரன் பின்பு இவள் . இவளுக்கு இரு தங்கைகளும் இரு தம்பி மாரும். தந்தை வியாபாரம் செய்பவர். நன்றாக் படிப்பாள். மகிழ்வான் குடும்பம். ஆறாவது பெண குழந்தை (சகோதரி). பிறந்த ஒரு வருடம ஆக இன்னும் சில மாதங்கள். திடீரென தாயாருக்கு ஒருவகைக் காய்ச்சல் கண்டது . சில கை வைத்தியம் செய்ததும் பலனின்றி இறுதியில் வைத்திய சாலையில் சேர்த்தார்கள. முடிவு சோகமானது. அவர் இறந்து விடார். தாங்க முடியாத சோகம். என் நண்பி ஒருவாரம் பாடசாலை வரவில்லை பின்பு வயதான் அம்மம்மா குழந்தையை கவனிப்பதாக சொல்லி இவளைபடிக்க் அனுபினார் கள் .அவள் பாடசாலைக்கு வந்தாள். வீட்டில் அத்தனை பேருக்கும் சமைத்து வைத்து விட்டு கால் நடையில் பள்ளிக்கு வருவாள். அப்போது அவளுக்கு பதினைந்து வயது இருக்கலாம். சில சக் உறவுகளுக்கு மதிய உணவும் கட்டிக் கொடுத்தனுப்பி தானும் இரண்டு கவளம் கட்டிக் கொண்டு வருவாள். இத்தனைக்கும் மத்தியில் அவளது திறமை பள்ளியில் மிகவும் பாராட்ட பட்டது.
Thursday, October 7, 2010
பிரிவு என்றும் பிளவு அல்ல
கடலும் கடல் சாந்த நிலமும் கொண்ட அந்த நாடுக்கு திருமண்ம பேசி அனுப்ப பட்டவள் தான் வாசுகி . பாஸ்கரனை கைப்பிடித்து வளமாகவும் நலமாகவும் வாழ்ந்தார்கள். பாஸ்கரன் அந்நாட்டின் தொடர்பு நிலையத்தில் கணணி தொழில் நுட்ப பிரிவின் அதிகாரியாக பணியாற்றினான். இல்லறம் இன்பமாகவே போனது. இருவரும் தாயகத்தில் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றவர்களின் விருப்பப்படி வாசுகி மண ஒப்பந்தமாகி அந்த நாட்டுக்கு சென்றவள். ஆரம்ப காலத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்த வாழ்வின் பரிசாய் ஒரு பெண குழந்தைக்கு தாயானாள் . தனித்தனியான அவர்கள் வாழ்வு ஒரு குடும்பமானது . காலப்போக்கில் அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டாவது குழந்தையும் பெண குழந்தையாகியது . காலயில் பணிக்கு செல்லும் பாஸ்கரன் இடைவேளையின் போது தொலைபேசியில் அழைத்து பேசுவான். தான் பணியில் ஈடுபட்டு இருக்கும் போது மிக மிக அவசரமென்றால் மட்டும் அவளை அவனுக்கு அழைக்க சொல்வான். மற்றும் படி அவனே அழைத்துபேசுவான்.
Thursday, September 23, 2010
நினைக்க மறப்பது ஏனோ .........
நினைக்க மறப்பது ஏனோ
பட்டணத்து ஐயா என்று அழைக்க பட்ட செல்லத்தம்பி அவர்கள் காலமானார் . அவருக்கு வயது 85.. வாழ்வாங்கு வாழ்ந்தவர். பட்டணத்தில் அவரது கந்தோர் இருந்ததால் மூன்று மாதமொருமுறை வந்துபோவார். இரு ஆண்களும் இரு பெண்களுமாக் நான்கு பிள்ளைகள் .மனைவி ராசமணி அவரது வரவுக்கேற்ப செலவு செய்து பிள்ளைகளை படிப்பித்து ஆளாக்கி கலியாணமும் செய்து வைத்தார். மூத்தவர் டாக்டர் அமெரிக்காவில் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தார்.
இரண்டாவது மகன் லண்டனில் ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரராக் இருந்தார். மூன்றாவது மகள் கனடாவில் குடும்பத்துடன் வாழ்ந்தாள் .கடைக்குட்டி இந்தியாவில் ,தன் குழந்தைகளுடன் வாழ்த்து கொண்டிருந்தாள். எல்லோரும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்கள். மூன்றாவது மகள்தாய் தந்தையாரை தனது நாட்டுக்கு கூப்பிட்டு அன்பாக் பராமரித்தாள். ஐந்து வருடங்களுக்கு முன் தாயார் இறந்து விட்டார் .. தந்தை வயோதிகத்தாலும் தனிமையாலும் அவதிப்படுவதால் பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்பினார்கள்.
இரண்டாவது மகன் லண்டனில் ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரராக் இருந்தார். மூன்றாவது மகள் கனடாவில் குடும்பத்துடன் வாழ்ந்தாள் .கடைக்குட்டி இந்தியாவில் ,தன் குழந்தைகளுடன் வாழ்த்து கொண்டிருந்தாள். எல்லோரும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்கள். மூன்றாவது மகள்தாய் தந்தையாரை தனது நாட்டுக்கு கூப்பிட்டு அன்பாக் பராமரித்தாள். ஐந்து வருடங்களுக்கு முன் தாயார் இறந்து விட்டார் .. தந்தை வயோதிகத்தாலும் தனிமையாலும் அவதிப்படுவதால் பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்பினார்கள்.
Monday, September 13, 2010
அந்தஸ்த்து ...........
சின்ன வயதில் இருந்தே பால குமாரனும் ஆனந்த ராஜாவும் நண்பர்கள்.ஆரம்ப பாடசாலை முடித்து கல்லூரி சென்று பின் பல்கலை கழகம் வரை ஒன்றாகவே படித்தார்கள். பின்பு வேலை பார்க்கும் காலத்தில் பாலகுமாரன் ரயில்வேயிலும் ஆனந்த ராஜன் குடிவரவு குடியகல்வு நிலையத்திலும் பணிக்கு அமைந்தார்கள். இருப்பினும் தொலை பேசி மூலமோ மடல்கள் மூலமோ நட்பை தொடர மறப்பதில்லை. பருவ வயது அடைந்ததும் ஆனந்த ராஜன் முதலில் திருமணம் செய்து கொண்டான். அவனுக்கு வாய்த்த மணமகள் சற்று வசதியானவள் ..மூன்று அண்ணாக்களுக்கு ஒரே தங்கை .
காலம் வேகமாக் தன் வேலையை செய்தது .பாலகுமாரனும் தன் தங்கை திருமணம் முடிய ஊரில் ஒரு ஆசிரியையாக் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.திருமணமான பின் அவர்கள் குடும்பம் வேலை என்று பொழுதுகள் வாய்பாக் அமையவில்லை தொடர்பு கொள்ள. இருபினும் சில மாதங்களுக்கொருமுறை கொண்ட தொடர்புகள் வருடம் ஒரு முறையாகியது.
Subscribe to:
Posts (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
என் இதயம் கவர்ந்தவளே கண்கள் கண்டதால் கவரபட்டதால் காதல் கொண்டதால் கருத்து ஒன்றி அதனால் இணைந்து கொண்ட இருவர் கருத்து வேறு பட்டாலும் ...
-
அஸ்தமனத்தில் ஓர் உதயம் ............. அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்க...