எனக்கும் தெரியும் ................
இந்த உருளும் உலகில் எல்லோர் வாழ்விலும் வரும்முக்கிய நிகழ்வு திருமணம். ஆணாகிலும் சரி பெண்ணாகிலும் சரி .திருமணத்தின் மூலம் வாழ்வு முழுமையடைகிறது என்பார்கள்.ஆனால் இந்தக் காலத்தில் ஆணினமும் பெண்ணினமும் எட்டிக்குபோட்டியாக ஒருவரை oஒருவர் அட்க்குவதிலும் கர்வத்தாலும் . வாழ்வு சீரளிந்து போகிறது .
நாட்டில் ஏற்பட்ட போர்க்கள சூழ்நிலையில் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள்தான் மாணிக்க தாசன் கோகிலா தம்பதியர். இவர்களுக்கு பெண்ணும் ஆணுமாய் இரு மக்கள். கால ஓட்டத்தில் இருவ்ரும் கல்வியில் தேர்ச்சி பெற்று .. பட்டம் பெற்று ஒரு பிரபல கம்பனியில் பதவி கிடைத்தது மகள் அஞ்சலி க்கு .மகன் அருணன் இவளை விட இருவயது இளையவன். அவன் இன்னும் படித்துக்கொண்டிருந்தான். மகளுக்கு திருமண பராயம்வந்த்தும் பொறுப்பு மிக்க தந்தை திருமணம் பேசினார். ....அவர்கள் வாழும் நாட்டில் தேடியும் அவளுக்கு வ்ரன் அமையவில்லை. தந்தையின் தூரத்து உறவினர் கள் தாயகத்தில்(இலங்கையில்) வாழ்ந்து வந்தார்கள் இவர்களுக்கு ஒரு மகன் துபாயில் கட்டிடநிர்மாணத்துறையில் இஞ்சினியராகவும் மற்றையவன் கல்லூரியில் பயிலும் காலத்திலும்இருந்தனர். பேச்சுவாக்கில் அந்த வருட விடுமுறையில் பெண வீட்டாரும் , இஞ்சினியர் குடும்பத்தாரும்சந்திப்பதாக ஒழுங்கு செய்யபட்டது. அதற்கான காலம்வந்த்தும் இரு வீட்டாரும் கோவிலில் சந்தித்து உரையாடிக்கொண்டனர். பையனும் பெண்ணும் பேச சந்தர்ப்பம் அளிக்க பட்டது.