Followers

Thursday, November 11, 2010

மாலதி டீச்சர் ............


மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு  போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன்  கூட போகவேணு மென்று . ஏற்கனவே அண்ணவின் பை தண்ணீர் போத்தல் மத்திய உணவு பெட்டி என்று தோளில் மாட்டி பல முறை ஒத்திகை பார்த்தாயிற்று . அந்த சுப நாளும் வந்தது . முதலில்   பாலர் வகுப்பு என்னும் .( அரிவரி   )வகுப்பு . முதல் நாள் அதிகாலயே எழுந்து விட்டேனாம்.  அப்பா அப்போது பட்டணத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். எனது நச்ச்ரிப்பு தாங்காமல் அம்மா கடிதம் எழுதி எனக்கு தேவையாதை ஒரு நண்பர் மூலம் கொடுத்து விட்டிருந்தார் . பள்ளிக்கு போகுமுன்பே அதை பிரித்து ஒத்திகை பார்த்தாயிற்று. அந்த சுப நாள் ஒரு திங்கட்கிழமை. மாத ஆரம் பம என எண்ணுகிறேன். அங்கு இரு பெண ஆசிரியைக ளும் ஒரு தலைமை ஆசிரியை .அவர் ஒரு துறவி ( சிஸ்டர் ) .அரச பள்ளியின் அருகாமையில் அமைந்து இருத்தது.  அம்மா  அறிமுகம் செய்து அந்த மாத கட்டணம் செலுத்தி விட்டு  விடைபெற ஆரம்பித்தார்.

Monday, November 8, 2010

விடிவு பிறக்கும்.




ப ரந்த வெளியிலே
ஒற்றை மரமாய்
தனித்து நின்றாலும்
இரைதேடும் பட்சிகளுக்கு
தங்குமிடமாகிறது

மேற்கே மறையும் சூரியனும்
தெளிந்த நீரோடையும்
மெல்லென் தழுவிச்
செல்லும் காற்றும்

நீரிலே தோன்றும்
சூரிய ஒளியும்
இரவை நோக்கி
நகர்ந்து சென்று

விடிவு என்னும்  உதயம் 
உனக்கும் எனக்குமாய் 
ஆழ்ந்த நம்பிக்கையோடு 
நிச்சயம் பிறக்கும் 

Thursday, November 4, 2010

மழலைகள் வரைந்த ஓவியம்

சிற்ப்பிகள் இருவர் 
வரைந்த சித்திரம் 
வெள்ளை நிறத்தில்
விடை இல்லா விளையாட்டு 
 மழலைகள்  கோலங்கள்
வியந்தவர் பலர்
நிலவுகள் எழுதிய
கவிதைகள் இங்கு 
சமாதான நிறத்தில்
கோலங்களை ரசிப்பதா 
தரையை சுத்தஞ் செய்வதா 
கோபம் கொண்டு அடிக்கவா
குளிக்க விடுவதா 
குறுஞ்செய்தியில் போடவா 
குஞ்சுகளை என்ன செய்வேன் .....


..நீங்களே சொல்லுங்கள்
படத்தை கண்டதும் வந்த ரசனை .எப்படி இருக்கிறது .?.


Wednesday, November 3, 2010

தீபாவளி வாழ்த்துக்கள்.





இணையத்தள  நட்புகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். 



Tuesday, November 2, 2010

அம்மா உன் அன்பு உள்ளவரை



அம்மா உன் அன்பு உள்ளவரை
தனிமை தெரிவதில்லை
உன் கரிசனம் இருக்கும் வரை
உணவும் தேவையில்லை

தனித்த் போது ஒரு சிணுங்கலில்
தாவி ஓடி அணைத்திடுவாய்
அள்ளி முத்தம் தந்திடுவாய்
அம்மா  மடி மீதும் நான் மட்டும் அரசாட்சி

கண்ணுறங்க கதை  சொல் வாய்
அப்பாவை  எனக்கு
அறிமுகம செய்தவளே
தப்புக்கள் நான் செய்தால்
தட்டிக் கேட்பவளே

பகட்டான பட்டுச்சட்டை
கலர் கலராய் காலுறை
மெத்தென்ற சப்பாத்தும்
கை காது கழுத்துக்கும்
 நகையணிபூட்டி
அழகு பார்த்தவளே

பள்ளிக்கு சென்று நானும்
பாடங்கள் பல படித்து
பரீட்சையில் சித்தி பெற்று
பட்டங்கள் பல பெற்று
பாங்காய் ஒரு பணியிடத்தில்

பல்லாயிரம் பணம் பெற்று
பக்குவமாய் வீடு கட்டி
பல பேரும் பார்த்து நிற்க
பாரினிலே தலை நிமிர்ந்து
"பாருடா என் பிள்ளயை "என்று

மார் தட்டி புகழ்  வைப்பேன்.
கலங்காதே என் தாயே ......
காலம் .....ஒரு காலம் வரும் ..
கனவில்லை இது நிஜம்

Monday, October 25, 2010

அழகுக்குட்டி செல்லம் .






அழகுக்குட்டி செல்லம் 

.சென்ற வார  விடுமுறையில் என் அக்கா மகள் வீட்டுக்கு  சென்று இருந்தேன்..அவளுக்கு பெண  குழந்தை கிடைத்து பத்து மாதங்கள் ஆகின்றன. முதற்குழந்தை,  அவளது தாயார் தாயகத்தில். இடையில் நானும் அவளது ம ச்சாளும் (கணவனின் தங்கை) உதவியாய் இருந்தோம். . கணவன் காலயில் வேலைக்குபோயவிடுவார் நம்ம செல்லக் குட்டி எழும்பிவிடுவாள். காலையில் டாட்டா பாய் சொல்லி ..அப்பாவை அனுப்பி வைப்பாள். அக்கா மகள் தன்  வேலைகள் ஆரம்பிப்பாள் .அடிக்கடி நப்பி மாற்றுதல்,( diaper )தூங்க செய்தல் ...நேரத்துக்கு பாலூட்டுதல் என்று தனியாகவே எல்லாம் செய்வாள்.  கற்றுக் கொண்டுவிடாள். சில சமயம் வீட்டில்  எல்லோரும் தூங்கக் செல்லக்குட்டி மட்டும் கொட்ட கொட்ட விழித்துக் இருபாள். இதனால் தாயும் காலயில் சேர்ந்து  தூங்கி விடுவார் .

 நல்ல பண்பான் பொறுமை சாலி  மருமகன்.   தானே எழுத்து காலையில் காப்பி  காபிபோட்டு குடித்து தன் சாப்பாட்டு பெட்டி  ( குளிரூட்டியில் இருக்கும்) எடுத்துக் கொண்டு மனைவிக்கு காப்பியும்  வைத்து விட்டு செல்வார்.  மாலை ஆறு மணியாகியதும்....நம்ம கதாநாயகி வாயிலை பார்த்த படியே இருப்பாள். கதவில் திறப்பு போட்டு சத்தம் கேட்டதும் ......ப்பா ......ப்பா என்று தாவியோடுவாள். மீண்டும் தாயிடம் வ்ர கஷ படுவாள் பிகு பண்ணுவாள். .என என்  அக்கா மகள் சொல்வாள் . நானிவளை கழுவி துடைத்து உணவூட்டி தூங்க வைத்து பாலூட்டி எல்லாம் செய்கிறேன் . அழும்போது மட்டும் ம்மா மா என்கிறாள். மற்றும்படி ஒரே ப்பா ப்பா தான்.......கணவனுக்கு
( மருமகன்) தாயின் சுருளான கேசம், தனது  நிறத்தில் மகள் கிடைத்ததை இட்டு உள்ளூர பெருமை. பெண குழந்தை கள் தந்தையுடன் கூட ஓட்டுத்லாய் இருப்பார்கள் என்று சொல்வார்கள். கண்மணியான .செல்லத்துடன் ஒரு உயிரும் ஈருடலுமாய் தான் வாழ்கிறார்கள். .

Tuesday, October 19, 2010

கடந்து போன காலம் .

கடந்து போன காலம் .

அந்தக் குடும்பத்தில் ஐந்துபேருமே பெண குழந்தைகளாக பிறந்து விட்டனர் .பூமலர் கந்தையா தம்பதிகளுக்கு . கந்தையா கடன் உழை ப்பாளி பயிற்செய்கை உத்தியோகத்தராக பணி புரிந்தார். மூத்தவள் நல்ல கெட்டிகாரி .படிப்பாலும் ஊக்க்மானவள் தானும் படித்து தன் உடன் உறவுகளுக்கும் சொல்லிக் கொடுப்பாள்.  நான்காவது பெண  நல்ல சூட்டிகையான் பெண அழகான் சுருள்  சுருள் ஆன கேசம் பார்பவர்களை கொள்ளை கொள்ளும். அழகு .மூத்தவள் பருவம் வந்ததும் ஒரு பள்ளி ஆசிரியருக்கு வாழ்க்கை பட்டாள். இரண்டாவது பெண  லண்டனில் உள்ள ஒரு நிறுவன் அதிகாரிக்கு திருமணம்பேசி அனுப்பினார்கள்.  மூன்றாவது சற்று கர்வமான் பெண . அசிரியையாக் உள்ளூரில் பணியாற்றினாள். இவளுக்கு திருணம் பேசி வருமாறு அவ்வூர் புரோக்கரிடம் சொல்லி வைத்தார்கள். நான்காமவள் தனியார் கல்லூரியில் கணணிக் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள். கடைக்குட்டி ( ஐந்தாவது பெண ) உயர்கல்வி கற்றுக் கொண்டு இருந்தாள்.

Friday, October 15, 2010

மாற்றங்கள்



அழகான அந்த சின்னஞ்  சிறு கிராமத்த்து  வாழ்க்கை அமைதியாகவும். மனோரம்மியமாகவும்  இருந்தது . அதிகாலையின் ஆலய மணி ஓசை பறவைகளின் இனிய ஒலி ..காலையில்  பரபரப்பான் அந்தக் கிராமம் நெல் வயல்கள் , பேரூந்துக்காக பயணிப்போர்  துவிச்சக்கர வண்டியில் பாடசாலை செல்வோர் , என்று அந்தக் கிராமம் அதிகாலயிலே விழித்து விடும். இத்தகைய சூ ழலில் வாழ்ந்தவள் தான் காவியா...அதிகாலையில் எழுந்து காலைக் கடன்  முடித்து , வீட்டு முற்றம் கூட்டி காலை உணவு உண்டு பாடசாலை செல்வாள். சில சமயம் நண்பியுடனும் சில  சமயம் தனிமையிலும் செல்வாள். இத்தகைய நாளில்  இரு கண்கள் அவளை கூர்ந்து கவனிக்க் தவறுவதில்லை . ஆம் அவ்வூரை சேர்ந்த வாத்தியார் பையன். கணேஷ் மிகுந்த .ஆவலுடன் சிநேகமாய் இருக்க முற்படுவான் அவள் அவ்வூரின் கட்டுபாட்டுக்குரிய வெட்கம் பயம் காரணமாக் விரைவாக் சென்று விடுவாள் இருந்தும் அவளது பதினைந்தாவது வயதில் ஒரு நாள் அவன் இவளைக்  காதலிப்பதாக கடிதம் கொடுத்தான்.  பயத்திலும் வெட்கத்தில் அதை மறைத்து வைத்தாள் ஒரு நாள் நண்பிக்கு சொன்னாள் . அவளோ இது படிக்கும் காலம் அவன் மீது கோபம் இல்லை என்னை படிக்க விடு என்று பணிவாக் மடல் எழுதும்படி சொன்னாள் . அவனும் சம்மதித்து போகவே காதல் பார்வையே  அவர்கள் மொழியானது.

Tuesday, October 12, 2010

அக்கா ...என்னும் உயிர்




கடந்த வார விடு முறையில்  என் நண்பியின் இழப்பு லண்டனில் நடந்து விட்டது .துக்கம் தெரிவிக்க  அவள் சகோதரி வீட்டுக்கு சென்று இருந்தேன். நண்பி என்று சொல்வதிலும் எனது உறவினள். என்னோடு சிறுவயதில் கூடப் படித்தவள். கால மாற்றத்தில் பிரிந்து அவள் லண்டன் சென்று விடாள். அவளது ச்கொதரி எனக்கு அண்மையில் உள்ளாள். காலம் சில நல்லவர்களை விட்டு வைப்பதில்லை. சிறுவயதில் அவளுக்கு மூத்தவன் ஒரு ஆண் சகோதரன் பின்பு இவள் . இவளுக்கு இரு தங்கைகளும் இரு தம்பி மாரும். தந்தை வியாபாரம் செய்பவர். நன்றாக் படிப்பாள். மகிழ்வான் குடும்பம். ஆறாவது பெண குழந்தை (சகோதரி). பிறந்த ஒரு வருடம ஆக இன்னும் சில மாதங்கள். திடீரென தாயாருக்கு ஒருவகைக் காய்ச்சல் கண்டது . சில கை வைத்தியம் செய்ததும் பலனின்றி இறுதியில்  வைத்திய சாலையில் சேர்த்தார்கள. முடிவு சோகமானது. அவர் இறந்து விடார். தாங்க முடியாத சோகம். என் நண்பி  ஒருவாரம் பாடசாலை வரவில்லை  பின்பு வயதான் அம்மம்மா குழந்தையை கவனிப்பதாக சொல்லி இவளைபடிக்க் அனுபினார் கள் .அவள் பாடசாலைக்கு வந்தாள். வீட்டில் அத்தனை பேருக்கும் சமைத்து வைத்து விட்டு கால் நடையில்  பள்ளிக்கு வருவாள்.  அப்போது அவளுக்கு பதினைந்து வயது  இருக்கலாம். சில சக் உறவுகளுக்கு மதிய உணவும் கட்டிக் கொடுத்தனுப்பி தானும் இரண்டு கவளம் கட்டிக் கொண்டு வருவாள். இத்தனைக்கும் மத்தியில் அவளது திறமை பள்ளியில் மிகவும் பாராட்ட பட்டது.

Thursday, October 7, 2010

பிரிவு என்றும் பிளவு அல்ல




 கடலும் கடல்  சாந்த நிலமும் கொண்ட அந்த நாடுக்கு திருமண்ம பேசி அனுப்ப பட்டவள் தான் வாசுகி . பாஸ்கரனை கைப்பிடித்து வளமாகவும் நலமாகவும் வாழ்ந்தார்கள்.  பாஸ்கரன் அந்நாட்டின் தொடர்பு நிலையத்தில் கணணி  தொழில் நுட்ப பிரிவின்  அதிகாரியாக   பணியாற்றினான். இல்லறம் இன்பமாகவே போனது.  இருவரும் தாயகத்தில் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றவர்களின் விருப்பப்படி  வாசுகி மண ஒப்பந்தமாகி அந்த நாட்டுக்கு சென்றவள். ஆரம்ப காலத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து  வாழ்ந்த வாழ்வின் பரிசாய் ஒரு பெண குழந்தைக்கு தாயானாள் . தனித்தனியான  அவர்கள் வாழ்வு ஒரு குடும்பமானது .  காலப்போக்கில் அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டாவது  குழந்தையும் பெண குழந்தையாகியது . காலயில் பணிக்கு செல்லும் பாஸ்கரன் இடைவேளையின் போது தொலைபேசியில் அழைத்து பேசுவான். தான் பணியில் ஈடுபட்டு இருக்கும் போது மிக மிக அவசரமென்றால் மட்டும் அவளை அவனுக்கு அழைக்க சொல்வான். மற்றும் படி அவனே அழைத்துபேசுவான்.

Thursday, September 23, 2010

நினைக்க மறப்பது ஏனோ .........

 நினைக்க மறப்பது ஏனோ 

பட்டணத்து ஐயா என்று அழைக்க பட்ட செல்லத்தம்பி அவர்கள் காலமானார் . அவருக்கு வயது 85.. வாழ்வாங்கு வாழ்ந்தவர். பட்டணத்தில் அவரது கந்தோர் இருந்ததால் மூன்று மாதமொருமுறை வந்துபோவார். இரு ஆண்களும் இரு பெண்களுமாக் நான்கு பிள்ளைகள்  .மனைவி ராசமணி அவரது வரவுக்கேற்ப செலவு செய்து பிள்ளைகளை  படிப்பித்து ஆளாக்கி கலியாணமும் செய்து வைத்தார். மூத்தவர் டாக்டர் அமெரிக்காவில் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தார். 
இரண்டாவது மகன் லண்டனில் ஒரு நிறுவனத்தின்  சொந்தக்காரராக் இருந்தார். மூன்றாவது மகள் கனடாவில் குடும்பத்துடன் வாழ்ந்தாள் .கடைக்குட்டி இந்தியாவில் ,தன் குழந்தைகளுடன் வாழ்த்து கொண்டிருந்தாள்.  எல்லோரும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்கள். மூன்றாவது மகள்தாய் ந்தையாரை தனது  நாட்டுக்கு கூப்பிட்டு  அன்பாக் பராமரித்தாள். ஐந்து வருடங்களுக்கு முன் தாயார் இறந்து விட்டார் .. தந்தை வயோதிகத்தாலும் தனிமையாலும்  அவதிப்படுவதால்  பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்பினார்கள்.


Monday, September 13, 2010

அந்தஸ்த்து ...........



சின்ன வயதில் இருந்தே  பால குமாரனும் ஆனந்த ராஜாவும் நண்பர்கள்.ஆரம்ப பாடசாலை  முடித்து கல்லூரி   சென்று பின் பல்கலை கழகம் வரை  ஒன்றாகவே படித்தார்கள். பின்பு வேலை பார்க்கும் காலத்தில் பாலகுமாரன் ரயில்வேயிலும் ஆனந்த ராஜன் குடிவரவு குடியகல்வு நிலையத்திலும் பணிக்கு அமைந்தார்கள். இருப்பினும் தொலை பேசி மூலமோ மடல்கள் மூலமோ நட்பை தொடர மறப்பதில்லை. பருவ வயது அடைந்ததும் ஆனந்த  ராஜன் முதலில் திருமணம் செய்து கொண்டான்.  அவனுக்கு வாய்த்த மணமகள்  சற்று வசதியானவள் ..மூன்று அண்ணாக்களுக்கு ஒரே தங்கை .

காலம் வேகமாக் தன் வேலையை செய்தது .பாலகுமாரனும் தன் தங்கை திருமணம் முடிய ஊரில் ஒரு ஆசிரியையாக் உள்ள பெண்ணை திருமணம் செய்து  கொண்டான்.திருமணமான பின் அவர்கள் குடும்பம் வேலை என்று பொழுதுகள் வாய்பாக் அமையவில்லை தொடர்பு கொள்ள. இருபினும் சில மாதங்களுக்கொருமுறை கொண்ட தொடர்புகள் வருடம் ஒரு முறையாகியது.

Wednesday, September 1, 2010

பொருத்தம்.

பொருத்தம்



பொன்னூர் எனும் அந்த அழகிய சிறு கிராமத்தில் பிறந்து  வளர்ந்தவர்கள தான்.
நிதி என்னும் சிறுமியும் மதியழகன் எனும் சிறுவனும். எல்லோராலும் அழகன் என அழைக்க பட்டவன். குடும்பத்தில் இவனுடன் இன்னும் இரண்டு ஆண் குழந்தைகள். தந்தை ஒரு கிராம சபை கந்தோரில் செய்லாளராக் இருந்தார். இவனது பெற்றோருக்குப் பெண குழநதையில்லையே என்னும் கவலை. துள்ளி விளையாடும் பள்ளிப்பருவம்மாறி உயர் கல்லூரி சென்றான். அழகன்.

நிதி எனும் தயாநிதி குடும்பத்துக்கு ஒரே ஒரு பெண குழந்தை . வசதி வாய்ப்புக்கள் இருந்தும் ஏனோ அவளுக்கு சக உறவுகளுக்கான பலன் இருக்கவில்லை. சிறு வயது முதல் சக மாணவனான அழகனுடனும்  அவனது நட்பு களுடனும் விளையாடி வருவாள். காலபோக்கில் அவள் பருவ வயது அடைந்ததும் விளையாட்டுக்கள் எல்லாம் நி ன்று போய் விட்டது . ஏன் அவனை பார்ப்பதும் அனுமதிக்க் படவில்லை.  காலம்தான்  தன் பாட்டுக்கு சுழன்று கொண்டே இருந்தது. அவள் கல்லூரி  வாழ்வு முடிந்ததும் அவளுக்கு நோர்வே நாட்டில் உள்ள மண  மகனுக்கு திருமணம் பேசி கோலாகலமான திருமண  விழாமுடிந்து ஆறு மாதங்களில் நோர்வே சென்று விடாள்.

Monday, August 9, 2010

தொடர் பதிவு.

வலையுலக் சக பதிவர் முனியாண்டி பெருமாள் ....அழைத்தமைக்கு ஏற்ப இதை தொடர்கிறேன்.


(1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
 
(2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

தோன்றும் பெயர் ....நிலாமதி (புனை பெயர் ).....பெயர் வைக்க காரணம்.

 தாயகத்தில் என் நண்பியின் பெயர்.


(3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

யாழ் களம் என்னும் வலைத்தளத்தில்  உறுபினராக் இருக்கிறேன். அங்கு தான் தமிழ் எழுத கற்றுக் கொண்டேன். பின்பு நிறையவே தமிளிஷ் இல் வாசிப்பேன் அந்த முயற்சி என்னை வலைப்பதிவு தொடங்கக் காரணமானது. .

(4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்ன வெல்லாம் செய்தீர்கள்.....
 
எதுவுமே செய்யவில்லை .  தமிளிஷ் இல் என் பதிவு வந்தது. அதிகம் தமிழ் நாட்டு நட்புகள்  கருத்து சொன்னார்கள்.

(5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு .என்ன? இல்லை  என்றால் ஏன்...........

பகிர்ந்து கொண்ட துண்டு.. என் வாழ்வே ஒரு பாடம். பெயர்களை மாற்றி கதைகளாக்  எழுதியுள்ளேன். மற்றும் நான் காணும் நண்பர்களின் வாழ்க்கை சம்பவங்களையும் எழுதினேன். ஒருவருக்கு ஏற்பட்ட் அனுபவங்களை பகிரும் போது மற்றவர்களுக்கு பாடமாக் அமையம் . என்  மனப்பாரம் சற்று குறையும்.

.(6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா..........

பதிவுகள் ஒருவகை ஆத்ம திருப்தி ...பொழுது போக்கு தான்.

(7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன.......

..ஒன்றே ஒன்று ...நிலாமதியின் பக்கங்கள். என்பது தான்.

(8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் .யார் அந்த பதிவர்.........

..யார் மீதும் கோபம் இல்லீங்க. பொறாமையும் இல்லீங்க.

(9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.....

சீமான் கனி ...ஈரோடு கதிர் ...சந்துரு.......என்பவார்கள் என் வளர்ச்சியை ஊக்குவிப்பவர்கள். சீமான் கனி ...பிழைகளை சுட்டிக் காட்டுவார். வேண்டுமென்று எழுத்துப் பிழை விடுவதில்லை கணனி சதி செய்வதுண்டு. மற்றும் அவசரம்..மீண்டும் வாசித்து திருத்துவதில்லை. பல நட்புகளை பெற்றுக் கொண்டேன். பாராடுக்களயும் பெற்றேன்.

(10) கடைசியாக...விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

புலம் பெயர்ந்து வாழும் ஈழத்துப் பெண. தாயகத்தை பிரிந்த வலி  இன்றும்  உண்டு. தாயகத்தில் வளமாக் வாழ்ந்தேன். பல சோதனைகள் சோகங்கள் உண்டு. என் இளமைக்கால் எழுத்து திறமைகள் இப்போது தான் ..வெளியிட களம் அமைந்தது .
இனிய ஒரு பொழுது போக்கு . கண்ணியில் சில  நுட்பங்க களை  தெரிந்தேன் இன்னும் நிறையவே அறியவேண்டும்.  என்னுடைய பதிவுக்கு பதில் கருத்து கூறி நட்பு பாராட்டும் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

நான் யாரையும் வலிந்து அழைக்க வில்லை. இன்னும் யாராவது பதிவு ( தொடர் பதிவு ) போடாதவர்கள் இணைந்து கொள்ளுமாறு அழைக்கிறேன்.

Friday, August 6, 2010

பிரதி பலன் .......


பிரதி பலன்


     காலம் செய்த கோலம் . தாயகத்தில் இருந்து  அதிகம் பேர் உள நாட்டுக் குழப்பங்களால் அகதிகளாக் வெளி நாடு சென்றனர். ராஜ சுந்தரம்  குடும்பமும் விதி விலக்கல்ல . அவரும் குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார். இரு மகன்களும் பள்ளியில் பயின்றனர் .பிள்ளைகளின் தேவைகளை சமாளிக்க் முடியாமலும் வாடகைப்பணம் அதிகமானதாலும் இரண்டு வேலைக்கு சென்றார்.  ராஜ சுந்தரம். . பகலில் ஒரு கார் கம்பனியிலும் மாலை  நேரங்களில் ஒரு உணவு விடுதியிலும். வேலை செய்து இரவு பத்து மணியாகும் வீடு வந்து சேர .அத்தோடு வெளி  நாட்டு வாழ்வுக்கே உரிய கால  நிலை மாற்றங்களும் அவருக்கு வாழ்வில் வெறுப்பை தந்தது. இருந்தாலும் மகன்களின் எதிர்கால் வாழ்வை எண்ணி

Wednesday, August 4, 2010

தாய்மை...அன்று ஒரு நாள்

 
தன் முதற் பேறாய் என்னைக்  கருவுற்ற வேளை
உமிழ் நீரால் வாய் நிறைந்திருந்த காலை
மாமியார் வீட்டு மாங்காய் ருசித்தது
பால் பழமும் கசந்தது ,புளியங்காய் சுவைத்தது

காலப்போக்கில் உதரம்(வயிறு) சற்றே பருத்து
அயலவர்க்கு அடையாளம் காட்டியது
முன் வீட்டு மாமியின் புளிக்கஞ்சி தேனானது
மாசம் ஆக புரண்டு படுக்க இடைஞ்சலானது

முருங்கைக் கீரை சத்துணவானது
எட்டி நடக்கையிலே இளைப்பு தோன்றியது
இளம் வெந்நீர்க் குளியலில்  உடல் சிலிர்க்கையில்
 குழந்தை நான் உள்ளிருந்து உதைத்த போது

என் தந்தை என்னே தாய்மை என்றார்
எண்ணி ஒன்பதாம் மாதம் முடிவில் 
நாட்கள் எண்ணும் வேளை தன்னில்
இடுப்பு வலியும் சேர்ந்து அடி வயிறு வலியெடுக்க 

அரசினர் வைத்திய சாலைக்கு அவசரமாய்
கார் பிடித்து ஓடினாள் .வேளை வந்ததென்று
மருத்துவிச்சி உதவியுடன் மகவு நான் வந்த போது
மட்டில்லா மகிழ்வு கொண்டு மகனாக் வந்துதித்தேன்

என் முகம் கண்ட பாட்டி ..என் குல விளக்கு என்றாள்
சாண் பிள்ளையானாலும்  ஆண்  பிள்ளை என்றார் அப்பா
உற்றாரும் உறவும் கூடி ஆராரோ பாடி ..
அம்மாவின் அமுதம் சுவைத்து

மெதுவாய் கண் விழித்து அம்மா மார் தடவ
அன்போடு ஊட்டினாள் ..தன் ரத்தம் பாலாக
ஒவ்வாத உணவுகளை விலக்கி வைத்தாள்
மாந்தம் வருமென்று மாம் பழம் விலக்கி

பாற் பல்லு  முளைத்தும் குறும்பன் நான்
குறும்பு செய்ய ..தடை போடாள் வேப்பென்னையுடன் .
.பல் வேறு உணவுகளும் பழக்கிய பின்
தவனம் தீரவில்லைஉறங்க  அணைக்கையிலே

பால் குடி மறக்க வைக்க பாட்டி  துணை வந்தாள் ...
அன்றைய என் தாய் எங்கே ...இன்றைய அவசர் உலகில்
நவீன நாகரிகத்தில் ...பால் புட்டி துணை வர
பாடுகிறது பாட்டுப்பெட்டி ஒரு தாலாட்டு பாடல் ....


குறிப்பு....

                 .மாந்தம் ..(ஒருவகை  வயிற் றோட்டம்)
                 மருத்துவிச்சி ....மருத்துவமாது ..(.இவரால்
                 முடியாவிடால் தான்  மருத்துவர் , வருவார். )
                
                  தவனம்....ஒருவகைத்தாகம் .

Tuesday, August 3, 2010

தாய்மை

தாய்மை

அந்த சிறு கிராமத்துக்கு ஆசிரியப்பணி நிமித்தம்  மாற்றலாகி வந்து ஒரு வாரம் இருக்கும். வசுமதி தன் கைக் குழந்தை சுதாகரனோடு  தன் தாயார் வீடு நோக்கி   பட்டணத்துக்கான   பஸ் வண்டியில் ஏறினாள். அது ஒரு இரு மணி நேர பயணம் சற்று  கூடலாம் அல்லது நேரத்துக்கு போய் சேரலாம். சரியான் ஜன நெரிசல். ஒருவாறு இருக்க இடம் கிடைத்து டிக்கட் எடுத்து குழந்தையை மடியில் வைத்து நித்திரையாக்கி னாள்.  ஒரு  மணி நேரத்துக்குபின  பஸ் வண்டியின் தாலாட்டில் உறங்கிய நம் சின்ன வாண்டுபயல்  எழுந்து விடான். அவள்  புட்டியில் இருந்த கொதித்தாறிய நீரை பருக கொடுத்தார் அதை  சப்பி குடித்தவனுக்கு அடங்க வில்லை. தாயின் அணைப்பு வேறு அவன் தாகத்தை தூண்டவே ..அடம்பிடித்து அழுதான். வண்டியில் இருந்தவர்கள் .... கொஞ்சம்காற்று  வரட்டும் "விலகுங்கப்பா " என்று சத்தமிட்டனர்.    அப்போதும் அவன் அழுகை அடங்க வில்லை ....Èபாலைக் கொடும்மா"  என்றனர் பெண்கள்ளில் பாட்டி  வயதானவர். முதற்குழந்தை அவள் வெட்கப்பட்டாள்.  ஆண்கள் வேறு உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர்...

இளம் தாய் ..மிகவும் சங்கடபட்டாள். . அவர் சாரியும் பிளவுசும் அணிந்து இருந்தார்....ஒருவாறு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு குழந்தையை மெல்ல  அணைத்து சேலைத் தலைப்பால் அவனை மூடி ..மெல்ல பிளவுஸின் கொக்கிகளை .....( hook ) தளர்த்தினாள். அவளையே குறு குறு என் பார்த்து கொண்டிருதவார்களின் கண்கள் மறு திசை நோக்கி பார்த்தன...ஒரு கையால் அணைத்து மறு கையால் தட்டி தட்டி உறிஞ்சத் தொடங்கினார். நம் கதா நாயகன். அழுகை ஓய்ந்த திருப்தியில் அத்தனை பயணிகளும்.  நிம்மதிப் பெரு  மூச்சு விட்டனர்.

அந்தக் காலத்தில் குழந்தைகள் தாயப்பாலையே  நம்பி வாழ்ந்தனர். இந்தகாலத்தில் பெண்களின் ஊட்ட சத்து குறைவோ என்ன காரணமோ பால் சுரப்பு சிலருக்கு போதியதாக் இருப்பதில்லை. பலருக்கு வேலைக்கு போகும் அவசரத்தில், புட்டிபால் கொடுகிறார்கள் சிலர் ....அது ஒரு நாகாரிகமாகவே கருதுகிறார்கள். தாய்பால் தான் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது . கண்டிப்பாக  ஆறு மாதங்களாவது கொடுக்க படவேண்டும். தாய்க்கும் குழந்தைக்குமான் பிணைப்பு கூடும். இயற்கையான கருக் கொள்ளுங்காலம் பின் போடப்பட்டு தாயும் சேயும் ஆரோக்கியமாக் இருப்பார்கள். தாயையும் தாய்மையையும் மதிப்போம்.

Saturday, July 24, 2010

வேதனை தான் வாழ்க்கையா?

தாயொருத்தி பெற்று விட்டாள் தலை மகனாக ..
துள்ளித்   திரிந்து பள்ளிப்படிப்பும் முடித்து .
கெட்டும் பட்டணம்  போ என ஆன்றோர் வாக்கு
சிரமேற்கொண்டு தொழில் தேடித் புறப்பட்டான்
ஓரளவு இருபாஷைகளின்  அறிவு இருந்ததலால்
தொழில் துறையும் கிடைத்தது. காலங்கள் கடந்து போக ..
 வாலைப்பருவமதில் வகையாக் வாழ்வதற்கே
மங்கை நல்லாள் வளைக் கரம் பிடித்தான் .
வஞ்சகமின்றி வாழ்கையில்  நான்கு கண்மணிகளை
 வகைக்கு இரண்டாக் . நலமுடன்  பெற்றான்
மங்கை நல்லாள் வளமுடனே வாழ்கையில்
 பணியிட  மாற்றம் பெற்று தொலை தூரம்  போக
இட்டனர் கட்டளை ,வகை தெரியாது கலங்கிய தலைவன்.
 கொண்ட பணி சிரமேற் கொண்டு .இடம் மாறிச் சென்று
 பணி புரியும் காலத்தில் வஞ்சகர் சேர்க்கையால்
பணியிடம் பதவி ..பறி போயிற்று ..

வாழ்வுக்கு வகையின்றி தள்ளாட
வாழ்க்கை  பெரும் பாறாங்கல்லாயிற்று
மங்கை நல்லாள் காணி பூமி நகை நட்டு கடன் பட்டு ...
வெளி நாடு அனுப்பி வைத்தாள். திரவியம் தேட
 புறப்பட்ட கப்பல் சூறாவளிக்குட்பட்டு ..திசை மாறி போனது..
சிலர் மாண்டனர் பலர் உயிர் கண்டனர்.
 புகலிடம் பெற்றனர் வெள்ளைக் கார  நாட்டிலே
அகதி அந்தஸ்தும் சிலருக்கு கிடைத்தது
பாவி இவன் வாழ்வு .பல் கேள்வி பதில் சொல்லி
பலனேதும்ற்று புகலிடக் கோரிக்கை  புறக்கணித்தாயிற்று
பணிபுரிய முடியவில்லை திரும்பி போக மனமில்லை .
 மங்கை நல்லாளும் மணியான் குழந்தைகள் நான்கும்
கடன் சுமையால் இருந்த வீடும் ஏலம் போனது.
வாடகை குடியிருப்பில் வாடினாள் பெண்ணவள்.

உற்றாரும் சக் உறவும் எது வ்ரை உதவுவார்
கொண்டவன் கோலமும  அலங்கோலமாய் ஆனது .
குடியும் மன நிலையும் குழம்பியது இறுதியில்
 சித்தம் கலங்கி தஞ்சமானான்  மருத்துவ மனை .
.வழியேதும் இன்றி வாடுகிறான். தனிமையில்
 தனிமை ஒருபுறம் பிரிவு மறு புறம் ...
மாறுமா வாழ்க்கை வராதா ஒரு வாழ்வு ............

குறிப்பு ": புலம் பெயர்ந்த் ஒரு ஈழத்தவனின்  வாழ்வு....(கேட்ட கதை )
 .கதையா ?கவிதையா...?...நீங்கள் தான் சொல்லணும். ...

Wednesday, July 21, 2010

எனக்குமொரு சைக்கிள் வண்டி ...........



சென்ற வார இறுதியில் ...என் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தேன். அவர்களுக்கு ஆறு  வயதில் ஒருசிறுவனும் ..எழு மாதத்தில் பெண் குழந்தையுமாக் நால்வரும் வாழ்கிறார்கள். தந்தை மனோகரன் .. குழந்தைகளில் மிகவும்நேசம் மிக்கவர். என்ன குறும்பு செய்தாலும் பொறுத்துக் கொள்வார். தாயார் சற்று கண்டிப்பானவர். ஏதும் தப்பு  செய்தால் ஒரு மூலையில் இருத்தி விடுவார். அவ்வபோது அகப்பை காம்பு ..காட்டப் படும்  ஆனால் அடிக்க மாட்டார். அமைதியாக் இருக்க தண்டனை கொடுப்பார். இப்போது கோடை காலம் ..தந்தை வேலை முடிந்து வீடு வந்ததும்..வெளியில் பார்க்கில் உலாவ செல்வார்கள்.( என் செல்லம்) மாதுளனுக்கு..( எனக்கு குழந்தைகள் கொள்ளை ஆசை.. நானும் குழந்தையாக மாறி விடுவேன் ) மற்றும் சிறுவர்களை போல சைக்கிள்  ஓட்ட விருப்பம் . ஒரு சில தடவை  தனக்கும் வாங்கி தரும்படி கேட்டு இருக்கிறான்.  பார்க்கலாம் என தந்தை சொல்லியிருகிறார்.

நாங்கள் சென்ற போது மாதுளன் மாடி அறையில் தொலைக் காட்சியில்
மும்முரமாக  இருந்தவர் .... கவனிக்க் வில்லை  போலும். பார்த்துக்கொண்டிருந்தவன், நாங்கள் தேநீர் அருந்தி ...விடைபெற சற்று  முன் ஓடிவந்து என் கை பிடித்து அழைத்து சென்றான் அவர்கள் கார் தரிப்பிடத்துக்கு ( garage )  வாங்கோ அன்ரி வாங்கோ .....உங்களுக்கு ஒன்று காட்ட வேண்டும்( I want டு ஷோ யு something )  என்று ஆங்கிலமும் தமிழும் கலந்து ..சம்பாஷனை போகிறது. அங்கு சென்று .. பார்த்தபோது அவருக்கு ஒரு சிறிய சைக்கிள் வண்டி ..(.training wheel ) உதவிச் சக்கரத்துடன் வாங்கி வந்திருக்கிறார் தந்தை. காலப்போக்கில் அவன் நன்றாக  பழகிய பின் அதைக் கழற்றி விடலாம். தான் பழகிய் பின் தன் தங்கையையும்   ஏற்றிச் செல்வானாம் ....அவனது எண்ணங்கள  கற்பனை உலகில் கொடிகட்டி பறக்கிறது ..."எனக்கு அப்பா வாங்கி தந்தது. நாங்கள் பார்க்கில் ஓடிப் பழக போகிறோம்."  அந்த பிஞ்சு மனத்தில் பெருகிய உற்சாகத்துக்கு அளவே இல்லை.

இளவயது ஞாபகம் என்றும் நெஞ்சில் நிறைந்து அழியாத கோலங் களாக இருக்கும். என் அப்பா .... வாங்கியது ..என் அம்மா தந்தது ... என்று பள்ளியிலும் பெருமையாக் சொல்லிக்கொள்வார்கள். அவனுக்கு வரும் ஐந்தாம் திகதி பிறந்த நாள் வருகிறது ..இப்போதே பரிசு வாங்கியாகி விட்டது. மிகவும் அன்பானவர்கள் கொடுக்கும் பரிசு ..பெறுமதி இல்லாதது . என் சின்ன வயதில் என் மாமா வாங்கித்தந்த அழகான் எல்லா வண்ணங்களும் உள்ள குடை என் கண் முன் நிழலாக் விரிந்தது ....குழந்தையின்  மகிழ்ச்சியை அசை போட்ட் வண்ணம் வீடு வந்து சேர்ந்தேன்.

Thursday, July 15, 2010

இடைவெளிகள்......

.இடைவெளிகள்

அந்த பிரமாண்டமான் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டது ..பல் கற்பனைகள் கடந்த கால நினைவுகளோடு  புஷ்பாவும் இரு குழந்தைகள் அருண் அர்ச்சனாவும் விடுமுறைக்கு புறப்படுகிறார்கள். . கனடாவில் இருக்கும் தங்கள் சகோதரியை , பெரியம்மாவை பார்பதற்காக. புஷ்பாவின் எண்ணங்கள் சில கணம் தாய் நாட்டின் கிராமத்து வாழ்வை  நோக்கி அசை போடுகிறது. தாய்  தந்தைக்கு எழு குழந்தைகள் அரச பணியகத்தில் வரும் அளவான் வருமானத்தில்  வளமாக் தான் தாயார் மீனாட்சி குடும்பம்  நடத்தினாள். நானு பெண்களும் மூன்று ஆண்க்களுமாக் எழு குழந்தைகள். நான்காவதாக் இந்த  பாமா  என்னும்  கனடாவில் இருப்பவர்  பிறந்தார். ஐந்தாவ்தாக் புஷ்பா . வாழ்வு தான் காலச்சக்கரத்தில் .. சுழன்று கொண்டே இருந்தது . கடைசி மூவரும் தங்களுக்குள் கொப்பி( நோட் புக்)  புத்தகம் பேனா பென்சில் என  சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும். புஷ்பா சற்று பயந்த சுபாவம். பாமா சற்று துடினம். அந்தக் காலத்தில் ஒரு புத்தகம் வாங்கினால் அது பரம்பரை சொத்து போல அண்ணா ... தங்கை தம்பி ...என இரு வருடங்களுக்கு இடைவெளியில் பிறந்த குழந்தைகள் பாவித்து கொள்வார்கள்.


மூத்தவள பெண ..காலா காலத்தில் கலியாணம் செய்து போய் விட்டாள். அதன் பின் ஆண்கள் இருவரும்  பட்டினத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டார்கள் கடைசி மூவரும் தங்களுக்குள்  சண்டை சச்சரவுகளை வளர்த்து கொண்டே இருந்தார்கள். பாமா திருமண் வயதை அடைத்தும் தான் விருப்பிய ஒருவனை.பிடிவாதமாய் திருமணம் செய்து கொண்டாள். இதனால் அடுத்தவள் புஷ்பாவுக்கு ....வரும் வரங்கள் சற்று தாமதமாயின . இறுதியாக ஒரு வெளி நாட்டு மாப்பிள்ளை . அவர் பிரான்சு தேசத்தில் வாழ்ந்து  வந்தார் . கலியாணம் முற்றாக்கி ..புஷ்பா பிரான்சு நாட்டுக்கு  சென்றாள். காலபோக்கில் அவளும் மூன்று குழந்தைகளுக்கு தாயானாள். கால சுழற்சியில் ..அக்கிராமத்தில் படை நடவடிக்கை தொடங்கியதும் எல்லோரும் .புலம் பெயர்ந்தார்கள். பாமா புஷ்பா குடும்பத்தினரும் பெரும் நிர்பந்தத்தின் பேரில்....வெளி நாடு போய் விட்டனர்.  அவர்களது தாய் தந்தையரும் .ஒருவர் பின்னொருவராக  இறந்து விட்டனர் . எழு பேரும் ஜெர்மனியில் இருவர் ...பிரான்சில் இருவர் ....இத்தாலியில் ஒருவர் ...கனடாவில் ஒருவர். இலங்கையில் தலை நகரில் ஒருவராக  கூடு கலைந்த பறவைகள் போல .....வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது .

குழந்தைகளுக்கு  அந்த நாட்டு மொழி கற்க   வேண்டிய நிர்ப்பந்தம் கற்றுக்கொண்டனர் . தாய் மொழி தமிழ் மட்டும் ஒரு இணைப்பு பாலமாக் இருந்தது. காலபோக்கில் ..கல்வி படிப்பு ..வேலை என்று இயற்கையின் நியதி ஒருவரோடு ஒருவருக்கு  இருந்த  தொலைத்தொடர்பும்    குறைந்து போனது....வருடமொரு முறை வரும் திரு நாட்களின் போது எடுத்து தொலைபேசியில்,பேசிக் கொள்வார்கள்.   அவர்களின்,குழந்தைகளுக்கிடையிலான தொடர்பு  குறைந்து அற்று போனது...........அந்நாட்டு மொழியில் மிகவும் தேர்ச்சி பெற்றார்கள். தமிழ் மொழியின் வளம் குறைந்து போனது. பல வருடங்க்களின் பின் ...இப்போது சகோதரியை ....பெரியம்மாவை பார்க்க போகிறார்கள்.. அவர்கள் எப்படி இருப்பார்கள் ...தன் குழந்தைகளை அணைத்துக் கொள்வார்களா? . குழந்தைகள் வேறுபாடு காட்டிக் கொள்வார்களா?...இவ்வளவு இடைவேளையில் பின் பல கதைகள் பேச வேண்டும் ஊர் நினைவு  மீட்ட  படவேண்டும். பல் சிந்தனைகளுடன் தூங்கி போனவளை மகன் அருண் தட்டி எழுப்பினான் . தாங்கள் வந்த விமானம் தரையிறங்கக் போகிறது ஆயத்தமாகுங்கள் என்று .....தன்னை ஆசுவாசபடுத்தி தயாரானாள் புஷ்பா.

கனடாவின் டொரோண்டோ மாநகரத்தில் பியசொன் ....(pearson )..விமான நிலையத்தை இவர்களை சுமந்து  வந்த விமானம் அடைந்தது. குடிவரவு குடியகல்வு சோதனைகளை முடித்துக்கொண்டு ....இவ்ர்களுகாக் வாகனத்தில் காத்திருக்கும் பெரியப்பா பெரியம்மாவை நோக்கி ஓடுகிறார்கள். அருணும் அர்ச்சனாவும். . அறிமுகம் ( இதுவரை படத்தில் தான்பார்த்துண்டு ) முடித்து ..பெரியம்மாவின் பிள்ளைகள் சுபாங்கன் சுமுதாவை காண ஆவலோடு ...அவர்கள் பயணம் தொடர்கிறது ...ஈழத்து புலப்பெயர்வில் இழந்தவைகள் ஏராளம்.  அதில் குடும்ப் உறவு ... சக் உறவுகளின் நெருக்கம் ...உறவுப்பாலம் ..சக உறவுகளின் பிள்ளைகளின்  நெருக்கம் ....நட்பு.....தொலைந்தது உண்மை . வருங்காலத்தில் கட்டிஎழுப்ப  பட வேண்டும்...இடைவெளிகள் இட்டு நிரப்ப படலாம். இழந்தவைகள் மீளுமா? .

.